Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவைத் தொடர்ந்து விக்ரம்பிரபுவுடன் சேரும் நாயகி

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் மஞ்சிமாமோகன், இப்போது விக்ரம்பிரபு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சுந்தரபாண்டியன், இதுகதிர்வேலன்காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதியபடத்தில் விக்ரம்பிரபு நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் பலரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியாக மஞ்சிமாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

மஞ்சிமா, அச்சம்என்பதுமடமையடா படத்தில் இன்னும் ஒருபாடலில் மட்டும் நடிக்க வேண்டியிருக்கிறதாம். அதை விரைவில் முடித்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2016 பொங்கல் முடிந்து சில நாட்களில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்படம் தவிர இன்னும் சில படங்களில் நடிக்கக் கேட்டு மஞ்சிமாவை அணுகியிருக்கிறார்களாம். விரைவில் அதுபற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close