Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கில்லிங்வீரப்பன் படத்திற்கு எதிர்ப்பை ஏற்படுத்திய ஏழு காரணங்கள்

ராம்கோபால்வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லிங்வீரப்பன் படத்தில், தமிழ் மக்களை தரம் தாழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பாக குரும்பா என்ற மலைசாதிப் பெண்கள் ஆயுதங்களைத் தூக்கியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் விளம்பரக் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வெளியாகியுள்ளது. அதில், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் (மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்), போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி, வீரப்பனைப் பிடித்ததாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் முழு விளம்பரக் காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் பல பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், திடீரென இந்தத் திரைப்படம் வருகிற ஜனவரி 1-ந்தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதைப் போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளைக் கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மத ரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனால், கண்டிப்பாக மத ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும்.

மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் ராம்கோபால் வர்மா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமாகக் காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் வீரப்பன் மனைவி பலரைக் கொலை செய்வது போல, படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்தப் படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தடை கோரும் அளவுக்கு அந்தப் படத்தில் என்ன இருக்கிறது?

1. ராம்கோபால்வர்மா இந்தப்படத்தைப் பற்றிப் பேசிய விசயங்களே படத்துக்கு எதிராக அமைந்துவிட்டன. அவர் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும்போதே, வீரப்பன் தனது கடத்தல் தொழிலுக்காக 900 யானைகளை கொன்றுள்ளான். அவனை பிடிக்க தமிழக, ஆந்திர, கர்நாடக அரசுகள் ரூ.700 கோடி செலவிட்டு உள்ளன.

2. வீரப்பனை பிடிப்பதற்கான வேட்டை 20 வருடங்கள் நடந்து இருக்கிறது. வீரப்பனை பிடிக்க நடந்த வியூகங்களையும் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதையும் இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். காட்டுப்பகுதிகளில் வீரப்பன் எந்தெந்த இடங்களில் பதுங்கி இருந்தானோ அந்த இடங்களுக்கு நேரில் சென்று படப்பிடிப்பை நடத்தி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

3. முதல்முறையாக இந்தப் படத்தில்தான் ஹீரோவுக்கு டூயட் எதுவும் இல்லாமல் ஆனால் வில்லனுக்கு டூயட் வைக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் தெரிந்த கதையை ஏன் நான் எடுக்கத் துணிந்தேன் என்று சிவராஜ் குமார் ஆரம்பத்தில் ஆச்சரியம் அடைந்தார். ஆனால் கதையைச் சொன்னபிறகு, நீங்கள் சொன்னதில் தனக்கு 80% விஷயங்கள் தெரியாதே என அதிர்ச்சி அடைந்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதில் அவர் வில்லன் என்று சொல்வது வீரப்பனைத்தான் என்று எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர்.

4.ஏற்கெனவே இந்தப்படத்துக்கு எதிராக பெங்களூருவில் தடை பெற்றிருந்தார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. அப்போது அவர் சொன்னது, எனது கணவர் வீரப்பன் குறித்து பட இயக்குநர் ராம்கோபால் வர்மா 'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்துள்ளார். ஒரு மொழியில் படம் எடுப்பதாக கூறிவிட்டு தற்போது 4 மொழிகளில் அப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் என்னை பற்றியும், எனது மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் பற்றியும் தரக்குறைவான பார்வை முன்வைக்கப்படுகிறது. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் காவல்துறையினரின் தகவல்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் எடுப்பதற்கு என்னிடம் பெறப்பட்ட ஒப்புதல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. நாங்கள் மறுதலிக்கும் காட்சிகள் நீக்கப்படவில்லை. உண்மையை மறைத்துவிட்டு பொய்யான தகவல்களை புனைந்து படம் தயாரித்துள்ளார். இதில் எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, எங்கள் குடும்பத்தை தரக்குறைவாக காட்டியுள்ளதோடு, ஒருதலைப்பட்சமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு மாநகர முதன்மை நீதிமன்றத்தில் 'கில்லிங் வீரப்பன்' படத்திற்கு இடைக்கால தடைபெற்றுள்ளோம். இந்த தடை மூலம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'கில்லிங் வீரப்பன்' திரைப்படத்தை யாரும் வெளியிடக்கூடாது. மேலும் வேறு எந்தமொழியிலும் இப்படத்தை திரையிடக்கூடாது. எனது போராட்டத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

5.படத்தில் காவல்துறை அதிகாரியாக கன்னட ராஜ்குமார் மகனே நடித்திருப்பதும், பின்லாடனைக் கொல்ல பத்து ஆண்டுகள்தாம் ஆனது வீரப்பனைக் கொல்ல இருபது ஆண்டுகள் ஆகின என்று சொல்லியிருப்பதும் படத்தைப் பலரும் எதிர்க்க முக்கியக் காரணங்கள்.

6. படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு 1200 காவல்துறையினருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டுவதாக ராம்கோபால்வர்மா சொன்னது.

7. படத்தை இந்தியில் மட்டுமே எடுக்கவிருப்பதாக முதலில் சொல்லிவிட்டு பிறகு தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிட விருப்பது. ஆகியவையே படத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்று சொல்லப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close