Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தின் அடுத்தபட அறிவிப்பு எப்போது?

வேதாளம் படத்தைத் தொடர்ந்து அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார் அஜித். அவருடைய அடுத்தபடத்தையும் வேதாளம் படத்தை இயக்கிய சிவாவே இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை பில்லா2 படத்தைத் தயாரித்த சுரேஷ்பாலாஜி தயாரிக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

அஜித் இப்போது மெதுவாக நடமாடத்தொடங்கியிருக்கிறாராம். இதனால் அடுத்தபடம் பற்றிய பேச்சுகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். சுரேஷ்பாலாஜி தவிர வேறு இரண்டு பெரிய தயாரிப்புநிறுவனங்களும் அஜித்தை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்து அதுபற்றிய பேச்சுகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இயக்குநர் சிவா மட்டுமின்றி விஷ்ணுவர்தன் சொன்ன ஒருவரிக்கதையையும் முழுமையான திரைக்கதையாக்கச் சொல்லி இருக்கிறாராம் அஜித். இதனால் அவர் யார் படத்தில் முதலில் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகாமல் இருக்கிறது. அடுத்தபடத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம்தான் என்பது உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.

அதனால் தை பிறந்தவுடன் இயக்குநர் யார்? தயாரிப்புநிறுவனம் எது? என்பது இறுதிசெய்யப்பட்டுவிடும் என்று சொல்கிறார்கள். உறுதியானவுடன் உடனே அறிவிக்கவும் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.  
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close