Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காக்காமுட்டை, விசாரணை பட வரிசையில் அடுத்த படமா?

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் நில் பட்டே சன்னட்டா.  இந்தப் படத்தின் நாயகி ஸ்வர பாஸ்கருக்கு சீனாவில் நடந்த சில்க் ரோட் சர்வதேச விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இன்னும் வெளியாகாத இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக இருக்கிறது.

தமிழிலும் இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி இயக்க உள்ளார். தமிழில் ஸ்வர பாஸ்கர் நடித்த ரோலில் அமலா பால் நடிக்க இருக்கிறார். இந்தி தமிழ் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளனர்.

தமிழில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்துக்குக்கு அம்மாகணக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெண்கள் சார்ந்த கதையான இப்படத்தில் அமலா பால் மற்றும் ரேவதி முக்கிய வேடங்களிலும், சமுத்திரக்கனி ஒரு குறிப்பிடத்தகுந்த கேரக்டரிலும் நடிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close