Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மன்மதனிலிருந்து வாலு வரை சந்தானத்தின் தெறிக்கவிடும் பன்ச்கள்

கலாய் மன்னன் சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள்... தன்னுடைய 35வது வயதில் அடியெடுத்து வைக்கும் சந்தானத்தை லொள்ளுசபாவில் துவங்கிய கலாய் ஹிஸ்டரி இன்று ஹீரோ அந்தஸ்து வரை உயர்த்தியிருக்கிறது.  டகுள் பாஸ், பூரான் விட்டிருவேன் என்பது துவங்கி என்னை கலாச்சுட்டாராமா, ஜுமாக்கா ஜூ என்பது வரை தன்னுடைய டிரேட் மார்க் பன்ச்களால் கொடிகட்டிப் பறக்கும் சந்தானத்தின் பல்வேறு கலாய் மேட்டர்களும் தற்போது மோஸ்ட் வாண்டட்  பேஸ்புக், வாட்ஸ் அப் பஞ்ச் லைன்கள் :

2004ல் வெளியான மன்மதன் படத்தில் சிம்புவோடு முதல் நாள் கல்லூரியில் நுழையும் சந்தானத்தை சீனியர்கள் கூப்பிட்டு எதாவது செஞ்சு காமி எனக் கேட்க, ஏதாவது செய்யணும்னா பிரியாணி செஞ்சு காமிக்கலாமா சார் என அடக்கமாக பன்ச் கொடுப்பார். அன்று துவங்கிய சந்தானத்தின் பன்ச்களை ஒவ்வொன்றாகச் சேகரித்தால் இன்று ஒரு பன்ச் குடோனையே உருவாக்கலாம்..

குடிகாரன் பேச்சு விடிஞ்சாத்தான் போச்சு... பொண்ணுக பேச்சு சொன்ன உடனேயே போச்சு  என தோழிகளை கலாய்ப்பதற்கும், அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என நண்பேண்டாக்களை டேமேஜில்லாமலும், ஒடஞ்சு போன வாத்து பொம்மைய ஒட்ட வெச்ச மாதிரி கோணலா ஒரு மூஞ்சி என அலறடிப்பதற்கும் நம் நெட்டிசன்கள் சந்தானத்தின் வரிகளையே பயன்படுத்தினர்.  குடிகாரன் சகவாசம் கொல நாசம் என்ற மகத்துவமான தத்துவங்களை எல்லாம் தெளித்து பல திரைப்படங்களின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார்.

ஐ திங்க் சி இஸ் ஸ்பீகிங் பிரிட்டிஸ் இங்கிலீஷ் என பாரின் பல்ப் வாங்குவதற்கும், நல்லவங்க டயலாக் ரீச் ஆகும். என்ன கொஞ்சம் லேட் ஆகும் என  2009ல் வெளியான  சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர்களின் ஆஸ்தான காமெடியனாக உருவானார். அதற்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்களான பாஸ் என்கிற பாஸ்கரனில் ஊர்ல பத்து பதினஞ்சு பிரண்ட்ஸ் வச்சிருக்கிறவன்லாம் நல்லா இருக்கான், ஒரே ஒரு ஃப்ரெண்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே ஐயையையயயோ என நண்பனின் தொல்லைகளால் புலம்புவதாகட்டும், பன்னிகுட்டியெல்லாம் பன்ச் டயலாக் பேசுதடான்னு இயலாமையால் வெதும்பி, டுடோரியல் சென்டர் வைத்து வெற்றி பெற்றதும் ஆர்யாவை கட்டியணைத்து நண்பேண்டா சொல்வதும், தன் நண்பனின் மாமனாரையே  நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என வறுத்தெடுப்பதுமாக திரையரங்குகளை அதிர வைத்தார்.

இப்பிடிப் போயி.. இப்பிடி வந்தரலாம் என தெய்வத்திருமகளில் லாயராக தம்ஸ் அப் காட்டியது,  மொறப் பொண்ணும் மொட்ட மாடியில காய வெச்ச வத்தலும் ஒண்ணு, எப்போ எவன் தூக்கிட்டு போவான்னே தெரியாது என அத்தை மகளை பத்திரப்படுத்தி கலகலப்பாக்கியது, கரெக்ட்டு கரெக்ட்டு...  மெரட்டு மெரட்டு.. என பவர் ஸ்டாரின் அண்ணனிடம் அடிபணிந்ததும், தேங்கா வேணும்னா தென்ன மரம் ஏறித்தான் ஆகணும் குமாரு என தன்னம்பிக்கை அளிப்பதாகட்டும், நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்குற நாய்க்குத்தான் கெடைக்கணும்னு  எழுதியிருந்தா, அத யாராலயும் மாத்த முடியாது என தலையெழுத்தை கூறுவதாகட்டும், கசமுசா பண்ணிட்டு கல்யாணம் பண்ணா வில்லன்.. கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா அவன் ஹீரோ என உணர வைத்தது, புடிக்கலைனா அவ சானியா மிர்ஸாவா இருந்தா கூட தொடக் கூடாது, புடிச்சிருந்தா அவ சாணி அள்ளுறவளா இருந்தாலும் விடக்கூடாது என குமாரின் குருவாக இருந்து தீயாக வேலை செய்ய வைத்தார். 

இப்படி 2011, 2012,2013 ஆகிய வருடங்களில் சந்தானம்  நடித்த பெரும்பாலான ஹிட் திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக ஏன், இவர் தான் படத்தின் கதாநாயகன் என்ற அளவிற்கு  விமர்சகர்களால் புகழப்பட்டார்.

லவ்வுக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சான்னா அது லவ் பெயிலியர். கல்யாணதுக்கு அப்புறமும் அவன் குடிச்சான்னா லைஃபே பெயிலியர் என ராஜா-ராணியை சென்டிமென்டாக சேர்த்து வைத்ததும் நம் சந்தானத்தின் பன்ச்கள் தான்..

சந்தானம் இருந்தாலே அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மினிமம் கியாரண்டி மீல்ஸ் கொடுக்க, அதன் பிறகு  அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, இங்க என்ன சொல்லுது, இது கதிர்வேலன் காதல், ஆம்பள, VSOP, நண்பேண்டா ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து கொடுக்கத் தவறிவிட்டது.

அதற்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என தொடர்ச்சியாக  ஹீரோயிஸ பன்ச்கள் பேசி நடித்தும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. தற்போது சந்தானத்திற்குத் தேவை ஒரு தெறிக்கவிடும் வெற்றி. ரிலீசுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களாவது சந்தானைத்தை ஐ அம் பேக் சொல்ல வைக்கட்டும்...

தி.ஜெயபிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close