Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.



இதேபோல், வாழும்கலை ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் ராமோஜி ராவ் ஆகியோருக்கும் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண் விருது


நடிகர் அனுபம் கெர், பின்னணி பாடகர் உதித் நாராயணன்,ரமோஜி ராவ், மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close