Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசாரணை படம் எதிரொலி- ஆந்திர போலீஸ்காரர் கொள்ளைக்காரன் ஆனார்

ரசிகர்களின் மனதில் அச்சத்தையும், விழிப்புணர்வையும் விதைத்திருக்கும் திரைப்படமே விசாரணை. இப்படத்தில் மொட்டைத்தலையுடன் ஆந்திர போலீஸாக நடித்த அஜய் கோஷ் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

அட்டகத்தி தினேஷை தடியால் அடிக்கும் காட்சிகளில், பார்வையாளர்களின் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்திய ஆந்திரா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மொட்டைத் தலை வில்லன் தான் அஜய் கோஷ். விசாரணையில் இவரின் நடிப்புக்குக் கிடைத்த நெக்ஸ்ட் அசைன்மென்ட், கொள்ளைக்காரனாக நடிப்பது. அதுவும் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் வீரய்யா என்ற கதாபாத்திரத்தில் கொள்ளைக்காரனாக மீண்டும் ரசிகர்களை மிரட்டவிருக்கிறார். தவிர, கேரளாவில் ஐந்து நாள் படப்பிடிப்பை முடித்துள்ள அஜய் கோஷ் மார்ச் மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பிற்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close