Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷாவைத் தொடர்ந்து நயன்தாரா - ரசிகர்கள் கோரிக்கை

சினிமாவில் நுழைந்து 16 வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் நடனத்திலும், நடிப்பிலும் டாப் இன்றும் சிக்ஸர் அடித்துவரும் நடிகை த்ரிஷா. அடுத்ததாக பாடகியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் “நாயகி”. ஹாரர் திரைப்படமாக உருவாகிவரும் நாயகியில் த்ரிஷா முதன்முறையாக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இதுவரை அவர் படத்திற்காக பாடல் பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியை மையமாகக் கொண்ட படமே நாயகி. சமீபத்தில் மாயா, நீ எங்கே என் அன்பே என்று நயன்தாரா தான் அதிகமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட  படங்களில் நடித்திருக்கிறார். நயன் தாராவைத் தொடர்ந்து, அவரின் நெருங்கிய தோழி த்ரிஷாவும் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல த்ரிஷாவைத் தொடர்ந்து நயன்தாராவும் படங்களில் பாடல் பாடுவாரா என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். 

தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் உருவாகிவரும் நாயகி படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம். மே மாதத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close