Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்தது. இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ காட்சிகள் இணையத்திலும் செய்தியிலும் வெளியாகின. அந்த வீடியோவில் குதிரையை கணேஷ் ஜோஷி கம்பால் கடுமையாக தாக்கும் காட்சிகள் இருந்தது. சக்திமான் இனி நடக்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் த்ரிஷா ட்விட்டரில்,“ கண்டிக்கத்தக்க கேவலமான செயல், இந்தச் செயலைச் செய்தவர் நரகத்தில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தவிர, த்ரிஷா தெருநாய்களின் மறுவாழ்விற்கு பல்வேறு பணிகளைச் செய்துவருபவர், கடந்த தீபாவளிக்குக் கூட விலங்குகளுக்கு பாதிப்பில்லாத சத்தமில்லாத வெடிபொருட்களையே பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தவர், மேலும் விலங்குகள் நல வாரியத்தின் விளம்பரத் தூதராக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close