Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கெட்ட பயசார் இந்த அட்லி!’ - இயக்குநர் மகேந்திரன் புகழாரம்!

 சிவாஜி தூள் கிளப்பிய தங்கப்பதக்கம் படத்தின் கதை வசனகர்த்தா. ரஜினியை வைத்து முள்ளும் மலரும் எழுதி இயக்கியவர். உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி என்று காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைக் கொடுத்தவர். குருநாதர் கே.பாலசந்தர் கேட்ட ‘உன் ஃபேவரைட் டைரக்டர் யாரு?’ என்ற கேள்விக்கு மேடையில் அவரிடமே இவர்தான் என்று ரஜினி சொன்ன...
 

இயக்குநர் மகேந்திரன்!
 

கலைப்புலி தாணு, நாசர், பிரபு, விஜய், அட்லி, மீனா, அவர் மகள் நைனிகா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட ‘தெறி’ இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு இயக்குநர் மகேந்திரன் பேசியது.. இதோ..
 

"பலர் மேடையில் வந்து, சிறப்பாக பேசியிருக்கிறார்கள். ஆனால் மேடை எனக்குப் புதிது. மேடைப்பேச்சுக்கு நான் புதுமுகம். போன மார்ச் தாணு சார் ஆஃபீஸ்ல இருந்து கூப்பிட்டிருந்தார். ’சார்.. ஒரு ஆப்ளிகேஷன்’ன்னார். அவர்கிட்டதான் மத்தவங்க எதாச்சும் கேட்டுப் போவாங்க. அதுனால திகைச்சுப் போய்ட்டேன். அப்பதான் என்னை சந்திச்சு ‘இந்தப் படத்துல நீங்க நடிக்கணும்’ன்னு சொல்லி கவித்துவமான காரணம் ஒண்ணும் சொன்னார்.


 


இதைச் சொல்ல எனக்கு கூச்சமா இருக்கு. அவர் என்ன சொன்னார்னா.. ‘உங்க படங்கள்ல நீங்க எங்களுக்கு உலகத்தைக் காட்டினீங்க. நாங்க உலகத்துக்கு உங்களைக் காமிக்க ஆசைப்படறோம்’’ன்னார். நான் கேட்டேன். ‘இது மிஸ்டர் விஜய்க்கு தெரியுமா?’ன்னு கேட்டேன். ‘அவர் சம்மதிச்சுதான் நாங்க உங்களைத் தொடர்பு கொள்றோம்’னாங்க. நான் மிக மிக மதிக்கும் ஒரு கலைஞன் அவர். அவரோட பண்பு, அவர் பழகற விதம் கேள்விப்பட்டு அவர்மேல எனக்கு ஒரு அன்பு உண்டு. அப்பறம் நான் மறுக்க முடியல. எனக்கு நடிக்கற சக்தி இருக்கா, திறமை இருக்கான்னு தெரியல. ஒத்துக்கிட்டேன்.
அப்பறம் மிஸ்டர் அட்லி. இந்த சின்ன வயசுல இவ்ளோ திறமை கொடுத்திருக்கான் கடவுள் அவருக்கு. ஒரு படம்தான் பண்ணீருக்கார். ரெண்டாவது படமே சூப்பர் ஸ்டாரை வெச்சுப் பண்றார்.”


இந்த இடத்தில் ரசிகர்கள் கரவொலி அடங்க நேரமாயிற்று. பின்னே? ரஜினியை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் கொடுத்த மகேந்திரனே.. விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டாரே!

“இரண்டாவது படத்துலயே இவ்ளோ பெரிய ப்ராஜக்ட் கெடைக்குதுன்னா சும்மா இல்லை. ஷார்ட்டா சொல்லணும்னா..  ‘கெட்ட பய சார் இந்த அட்லி’. யப்பப்ப்பா! பல மாதங்களா இரவு பகல் பார்க்காம உழைக்கறார். சமீபத்துல ஒரு நண்பர் கூப்டு ‘அட்லி எப்டி சார்’ ன்னு கேட்டார். ‘அவரைப் பத்தி நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. ஒரே ஒரு விஷயம் சொல்றேன். ‘அட்லிக்கு எப்பவுமே ஒரு மெண்டல் ஸ்ட்ரெஸ் உண்டு. வயித்துல ப்ராப்ளம்னு டேப்லட் எடுப்பார் அடிக்கடி’ன்னேன். இது ஒரு நல்ல டைரக்டருக்கு அடையாளம். தான் எடுக்கற படத்துமேல என்ன ஒரு அக்கறையும், கவலையும் இருந்தா மெண்டல் ஸ்ட்ரெஸ் வரும்? இல்ல படப்பிடிப்பு முடிஞ்சு போய் தூங்கணும்னு நெனைக்கற இயக்குநருக்கு அது வராது. எப்பவுமே ரொம்ப டீட்டெய்ல்ஸ் பார்த்து பண்றவரு. பெரிய உயரத்துக்கு போவார்ங்கறது உறுதி.

நான் ரொம்ப தூரத்துல இருப்பேன். அட்லி அவ்ளோதூரத்துல இருந்து ஓடி வந்து சட்டையோட ஓரத்துல இருக்கற மடிப்பை எடுத்துவிடுவார். ‘அட.. இவ்ளோ கவனிக்கறாரா’ன்னு இருக்கும் எனக்கு. அதேமாதிரி, செண்டிமெண்ட்ஸ். திரைல செண்டிமெண்ட்ஸை கையாள்றது அவ்ளோ சுலபமில்ல. ரொம்ப ஆழமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அண்டா பாயாசத்தை தரையில ஊத்தறமாதிரி அசிங்கமா போய்டும். இன்னொரு உதாரணம் சொல்லணும்னா, சில டாக்டர் ஊசி போட்டா நாள்பூரா வலிக்கும். ஒருசிலர் போடுவார்னு கையக்காட்டிட்டு இருப்போம். அவர் போட்டாச்சும்பார். தெரியவே தெரியாது. அப்பறம் அந்த மருந்து நமக்குள்ள வேலை செய்யும்போதுதான் அவர் ஊசி போட்டார்னு தெரியும். அட்லி, செண்டிமெண்ட் காட்சிகளை எடுத்திருக்கறதும் அப்படித்தான்.

அப்பறம் இளையதளபதி விஜய். மிகைப்படுத்திச் சொல்லல. சாதாரணமா டிரெய்ன்ல, ஃப்ளைட்ல போறப்ப வாகனம் அவ்ளோ ஸ்பீடா போய்ட்டே இருக்கும். அவ்ளோ உயரத்துல போற விமானத்தோட சத்தமோ, வேகமோ உள்ள இருக்கற நம்மை பாதிக்காது. அந்த மாதிரிதான் விஜய். அவர் திரைத்துறைல இன்னைக்கு இருக்கற உயரத்தை, செட்ல காமிச்சுக்கவே மாட்டார். அற்புதமான மனிதர். நல்ல மனிதனா இருந்தா மட்டும்தான் இவ்ளோ பெரிய உயரம் அடைய முடியும்.

அதேமாதிரி அவர் எடுக்கற ரிஸ்க். ஒரு மரசேரை உடைக்கற சீன்ல, உடைச்சுட்டார் விஜய். சீன் முடிஞ்சதும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜோட அசிஸ்டெண்ட் கிட்ட கேட்டேன். ‘அது ஒரிஜினல் ஆணியா’ன்னு. ஆமா சார். வேற எதுவும் செட் ஆகல. அதான் ஆணியே அடிச்சுட்டோம்னார். எனக்கு பக்னுச்சு. விஜய்கிட்ட இவ்ளோ ரிஸ்க்லாம் எடுக்காதீங்கன்னேன். இதுமாதிரி பலதை சொல்லலாம்.

தாணு சாருக்கும் என் நன்றி. அவரோட நட்பு, சகோதரத்தன்மைக்கும் நன்றி!”

முழுப்பேச்சையும் நின்றுகொண்டே தெளிவாக பேசி கைதட்டல்களை அள்ளினார் மகேந்திரன்.

டெய்ல் பீஸ்: - இயக்குநர் மகேந்திரன் பேசும்போது ஒருவிஷயத்தை கவனிக்க முடிந்தது. கையை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டே பேசும் உடல்மொழி, ரஜினிக்கு மகேந்திரனிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்!
 


  -சத்ரியன்

 

தொடர்புடைய பதிவுகள்:-

விஜய் சொன்ன குட்டிக்கதை - ‘தெறி’யில் ஃப்ரீ அட்வைஸ்

’தெறி’ படம் சொல்லும் கதை என்ன? - இயக்குநர் அட்லி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close