Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிப்ரான் வாகைசூட கமல் வாழ்த்து

  அப்பாஸ்அக்பர் என்பருடைய இயக்கத்தில் புதியநடிகர்கள் கோகுல்ஆனந்த், அஞ்சுகுரியன் உட்பட பலர் நடிக்கும் புதியபடம் சென்னை டூ சிங்கப்பூர்.

இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். படத்தில் ஆறுபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம். அவற்றை சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதற்கு கமல் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடும் புதியமுயற்சியில் ஜிப்ரான் இறங்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்,

இது தமிழனுக்குப் புதிய விசயமல்ல, தஞ்சாவூரிலிருந்து ஏற்கெனவே போயிருக்கிறார்கள், அவர்கள் போனதால் அது சிங்கபுரம் என்றும் சொல்வார்கள். கடாரம்கொண்ட சோழன் அவ்வழியாக சிங்கப்பூர் சென்றார்,

இப்போது இவர்கள் இசையால் ஆள்வதற்காக செல்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டிய விசயம் என்றும் சொல்கிறார்கள் அப்படி நடப்பதற்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close