Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய், சிம்பு சின்சியர் ஷூட்டிங்! # ரிலீஸ் எப்போ? 

பைரவா.. அடுத்தது என்ன? 

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், சதீஷ் நடிக்கும் படம் பைரவா. ராஜமுந்திரியில் நடக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், சண்டைக்காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வெளிநாடுகளில் பாடல்காட்சிகளை படமாக்கவிருக்கிறது படக்குழு. சந்தோஷ்நாராயணன் இசையமைக்கும் பைரவா, 2017 பொங்கல் ரிலீஸ்

இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார் விஜய். அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கும்ப டத்திற்கு, விஜய் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். தெறி படத்தின் ஹிட்டினால், விஜய்யின் அடுத்தப் படத்தை, அட்லீ தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் தெறி 2ம் பாகம் மட்டுமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அட்லீ.  

தள்ளிப்போகாமல் நெருங்கிவிட்டது பாடல்! 

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்தும், தள்ளிப்போகாதே பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நடக்காமல்  இழுபறியில் இருந்தது. கெளதம் மேனன், சிம்பிவிற்கிடையேயான கருத்துவேறுபாடினால், சென்ற மாதமே ரிலீஸாகவேண்டிய இப்படம் தள்ளியும் சென்றது. இறுதியாக தள்ளிப்போகாதே பாடலுக்கான படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருக்கிறது படக்குழு. சிம்பு ட்விட்டரில் இதை உறுதிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கான டப்பிங்கும் முடிந்துவிட்ட நிலையில், பாடலை முடித்த கையோடு, சென்சாருக்கு அனுப்பவும் தயாராகிவருகிறது படம். எப்படியும் செப்டம்பர் 30ல் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 

தெலுங்கு வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழிலும் தயாரானால் மட்டுமே இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடியும் என்பதால் தெலுங்கு வெர்ஷன் அச்சம் என்பது மடமையடா சிம்புவால் வெயிட்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

-பி.எஸ்-

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close