Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா! #HBDRajamouli

டோலிவுட்டின் பிரம்மாண்டம் ராஜமௌலிக்கு இன்று பிறந்தநாள். இவர் எடுத்த எல்லா படங்களும் பாக்ஸ் ஆஃபீசை அலறவைத்து ஹிட் ஆகும். இவர் பற்றி சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ...

1. ராஜமௌலி படம் இயக்கும் முன்பு  ஈநாடு தெலுங்கு சேனலில் சில தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார். 

2. சிம்ஹாதிரி துவங்கி பாகுபலி 2 வரை அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் கதை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திரப் பிரசாத் தான். ஆனால், இவரின் முதல் படமான 'ஸ்டூடெண்ட் நம்பர் 1' ப்ருத்விராஜ் கதை வசனம் எழுத, அவரது குருநாதர் ராகவேந்திரராவ் திரைக்கதை அமைத்திருந்தார்.

3. ராஜமௌலிக்கு ஜக்கன்னா என்ற செல்லப் பெயர் உண்டு. ராஜமௌலிக்கு நெருக்கமான பலரும் இந்த பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். இந்தப் பெயரை ராஜமௌலிக்கு வைத்தது அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரில் நடித்த ராஜீவ் கனகலா.

4. ராஜமௌலி இயக்கியதிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம், ஹாலிவுட் படமான 'அவர் ஹாஸ்பிடாலிடி' படத்தின் இன்ஸ்பிரேஷனில் தான் இயக்கிய 'மரியாத ராமண்ணா' (தமிழில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்). 

5. இவர் இயக்கிய எம தொங்கா, ஈகா, பாகுபலி தவிர மற்ற எல்லா படங்களும் ரீமேக் ஆகியிருக்கிறது. (தமிழில் ஈகா - பை லிங்குவல். சந்தானம் போர்ஷன் மட்டும் சேர்க்கப்பட்டது)

6. எடுத்த எல்லா படங்களிலும் சிக்சர் அடிக்கும் இவர் ஓர் இன்ஜினியரிங் பட்டதாரி. 

7. இவருக்கு சரித்திர படங்கள் மேல் ஆர்வம் வர அமர சித்ர கதா என்ற காமிக்ஸ் காரணமாக இருந்தது போல, படங்களில் இடம் பெறும் எமோஷனல் காட்சிகளுக்கு இன்ஸ்பிரேஷன் பாலிவுட்டில் ஷாரூக் கான் - சல்மான் கான் நடித்த கரண் அர்ஜுன். 

8. ராம் சரணுக்கு மிகப் பெரிய ஹிட்டாக அமைந்த மகதீரா படம் விஷுவல் எஃபக்ட்ஸ் எல்லாம் சேர்த்து முடித்து ஃபைனல் புராடக்ட் ராஜமௌலியிடம் கொடுக்கப்பட்டது சரியாக பட ரிலீஸுக்கு 24 மணிநேரம் முன்பு.

9. 100 வருட இந்திய சினிமா வரலாற்றுக்காக பிபிசி தயாரித்த ஆவணப்படத்தில் ரிலீஸ் ஆகும் முன்பே இடம் பெற்ற ஒரே படம் ராஜமௌலி இயக்கிய பாகுபலி மட்டுமே. 

10. ராஜமௌலிக்கு இன்னும் நிறைவேறாத ஆசை மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தான். இரண்டாவது படத்திலேயே அவரை இயக்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது. ஆனால் பாகுபலி 2க்குப் பிறகு கண்டிப்பாக அவரை இயக்குவேன் எனக் கூறியிருக்கிறார் ஜக்கன்னா.

ஹேப்பி பர்த்டே ஜக்கன்னா!

- பா.ஜான்ஸன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close