Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"தியாவிற்குள் ஆவி புகுந்திடுச்சு..!" - தல தீபாவளி கொண்டாடும் தொகுப்பாளினி தியா மேனன்-கார்த்திக்

சின்னத்திரையில் படு பிஸியாக இருந்த தொகுப்பாளினி தியா, திடீரென திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூருக்கு பறந்து விட்டார். சிங்கப்பூரில் இருந்தாலும் தன்னுடைய பேஷனை கைவிடாமல் அவ்வப்போது சென்னைக்கு வந்து சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கோயம்புத்தூரில் தனது தல தீபாவளியை கொண்டாட வந்திருக்கும் தியா-கார்த்திக்கிடம் பேசினோம்.

“என் நண்பர்களின் நண்பனான கார்த்திக், என்னோட பிறந்தநாளில்தான் எனக்கு நண்பராக அறிமுகமானார். நல்ல நண்பர்களாக இருந்த எங்களுக்குள் நல்ல தம்பதிகளாகவும் இருப்போம்னு தோணுச்சு. அப்புறம் ஏன் லேட் பண்ணிக்கிட்டுன்னு உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவருக்கு ஒர்க் சிங்கப்பூரில்தான், அதுனால கல்யாணம் முடிஞ்சு 15 நாள்ல நானும் சிங்கப்பூர் போயிட்டேன்” என்று கூறிய தியாவிடம், ‘அப்போ புது மாப்பிள்ளையோடு சென்னைக்குள்ள சுத்தலையா’ என்று கேட்டோம்.

 

“கல்யாணத்துக்கு அப்பறம் சென்னையில நாங்க எங்கேயும் போகலை. லவ் பண்ணும் போதே அவர் அப்பப்போ இந்தியா வரும் போது எங்கேயாவது வெளில போவோம்.  அதே மாதிரி சிங்கப்பூருக்கு போன பின்னாடியும் அவர் என்னை எல்லா இடத்திற்கும் அழைச்சிட்டு போனார்” என்று தியா கூறியதும், கார்த்திக்கிடம் தியா சமையல் எப்படி என்று கேட்டோம். 

“சிங்கப்பூர் வந்து ஒரு வாரத்துக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.  ஆனால் இரண்டு வாரத்துக்கு அப்பறம் தேவி படத்துல தமன்னாக்குள்ள ரூபி பேய் புகுந்த மாதிரி டோட்டலா மாறிட்டாங்க. வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும். அதை எப்படி பண்றதுன்னு எங்க அம்மாகிட்ட கேட்டு அப்படியே செஞ்சுக்கொடுத்தாங்க. ரொம்ப நல்லா சமைக்கிறாங்க” என்றார் கார்த்திக். ‘சிங்கப்பூர் செட்டாகிடுச்சா என்று தியாவிடம் கேட்டோம். 

 

“ம்ம்... செட்டாகிடுச்சு. ஆரம்பத்துல ஒரு மாதிரி இருந்துச்சு.  ஆனால் எல்லாம் ஒரு அளவுக்கு செட்டாகிடுச்சு. நான் இப்போ சிங்கப்பூரில் இருக்கிற தமிழ் சேனல்லையும் தொகுப்பாளினியாக வேலைப்பார்க்கப்போறேன்” என்று குஷியாக சொன்ன தியாவிடம், “தல தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்..?” என்று கேட்டோம்.

“கோயம்புத்தூரில் இருக்கிற எங்க வீட்டில்தான் தல தீபாவளி கொண்டாடப் போறோம். நல்லா பலகாரங்கள் சாப்பிட்டு ஜாலியா வெடி வெடித்து கொண்டாடப் போகிறோம்” என்று தியா சொல்லும் போது இடைமறித்த கார்த்திக், “பொதுவாக தூரத்தில் இருக்கும் இருவர்கள் காதலித்து, கல்யாணம் பண்ணிக்கிறது சாத்தியம் இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை காதலிப்பவர் மீது நம்பிக்கையும் உண்மையான காதலும் இருந்தால் எல்லாமும் சாத்தியமே” என்று தம்ஸ்அப் காட்டி முடித்தனர், தியா மற்றும் கார்த்திக்.

மா.பாண்டியராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close