Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேட்டிய மடிச்சுக் கட்டு!' தமிழ் சினிமாவில் தெறி வேட்டி சீன்ஸ்!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின்  தெறிக்கவிட்ட சில  மாஸான வேட்டி சீன்கள்தான் இதெல்லாம். ஏன் இதைப் பார்க்கப் போகிறோம் என்றால் இன்னைக்கு வேட்டி தினமாம் மக்களே ஆங்க்!

வேட்டி தினம் - சிறப்புப் பகிர்வு

* இது 'முரட்டுக்காளை' படத்துல வந்து மெரட்டு மெரட்டுனு மெரட்டுன பாட்டு. வேற ஹேர் ஸ்டைல், வேற மேனரிசம்னு ரஜினிகாந்துக்கே இது வேற மாதிரியான படம்.

 

* சிவாஜி இறந்தபின் அவரோட கேரக்டருக்கு கமல்ஹாசன் ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகிற மாஸ் சீன். படம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் அந்த காஸ்ட்யூம் அப்படியே கண்ணு முன்னாலதான் நிற்குது.

 

 

* பொதுவா எப்போதும் பேன்ட் சர்ட்லேயே வந்து காட்டு காட்டுனு காட்டி டான்ஸ் ஆடிட்டுப் போகிறவர் திடீர்னு வேட்டி சட்டைல ஸ்லோமோஷன்ல வந்ததும் ரசிகர்களுக்கே செம சர்ப்ரைஸ் கொடுத்து ஆட்டம் போட வெச்சது இந்த 'அழகிய தமிழ் மகன்' பாட்டு.

 

 

 

* கோட்டோ, வேட்டியோ எதுவா இருந்தாலும் அது அஜித்துக்குனே செஞ்சு வெச்ச மாதிரி அவ்வளவு கரெக்டாக அந்த  கேரக்டருக்குப் பொருந்திப்போகும். அதிலேயும் படத்துல எதிர்பார்க்காத இடத்தில் வரும் இந்த பாட்டுல திடீர்னு வேட்டியில் வந்து குத்தாட்டம் போடுவாரு பாருங்க.. வேற லெவல்!

 

* சிம்புவோட அப்பாவாக சிம்புவே நடிச்ச இந்தப் பாட்டு 'சிலம்பாட்டம்'. அதிகமா வேட்டியில் பாக்க முடியாத சிம்புவை புது ஹேர்ஸ்டைல், புது மீசைனு புது ஆளாகக் காட்டியது இந்தப் படம்.

* ஒல்லியா இருக்கிறவங்களுக்கும் வேட்டி கெத்துதான் பாஸுன்னு வந்து நிரூபிச்சது தனுஷோட இந்தப் படம்.  மாரீஈஈஈ... ன்னு வந்து கெத்து காட்டுற ஒரே சீன்ல ரவுடி கேரக்டரை அப்படியே ஸ்க்ரீனில் கொண்டு வந்திருப்பார்.

 

 

 

* ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு ஊருக்குள் சங்கங்கள் வெச்சிட்டுத் திரியறவங்களோட அட்ராசிட்டீசை அந்த  கேரக்டராகவே மாறி பண்ணிருப்பார் சிவகார்த்திகேயன். சிறுசுகள் முதல் இளசுகள்வரைக்கும் ஆட வெச்சது இந்த 'வ.வா.சங்கம்'.

 

* இது 'ஆரஞ்சு மிட்டாய்'. என்னத்த சொல்லுறது?! இப்போ  விஜய் சேதுபதி டைப் டான்ஸ்னே ஒண்ணு புதுசா உருவாகிக்கிட்டு வருது. அதுவும் அந்தப் படத்துல வயசான கேரக்டர்ல ஃபாஸ்ட் நம்பர் குத்து சாங்குக்கு வேட்டியில ஆடி, பார்க்கிறவங்களையும் சேர்த்து ஆட வெச்சிருப்பார் பாருங்க.. சூப்பர் ஜி சூப்பர் ஜி.

- ஜெ.வி.பிரவீன்குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close