Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.கவில் அஜித்: விவேகம் போஸ்டர் சொல்லுது குறியீடு!

ஊரே அஜித் அ.தி.மு.க-காரர், அவர்தான் அ.தி.மு.க-வுக்கு அடுத்த வாரிசுனுலாம் ஒருபக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாலும் இப்போ வந்திருக்குற 57வது படமான விவேகம் படத்தோட ஃபர்ஸ்ட்லுக்கை உட்கார்ந்து குண்டக்க மண்டக்க ஆராய்ஞ்சு பார்த்தா அவரு தி.மு.க-ன்னுதான் குறியீடாக சொல்லவாராரோன்னுதான் நினைக்கத்தோணுது மக்களே...

விவேகம்

* போஸ்டர்ல அஜித் ரெண்டு கையிலேயும் மாட்டியிருக்கிற கிளவ்ஸைக் கவனிச்சீங்கனா அது கறுப்பு சிவப்பு கலர்ல இருக்கு. தி.மு.க-வோட கட்சிக்கொடியும் அதே கலர்தான். இதைப் பார்த்தா தி.மு.க-வைக் குறிக்கத்தான் அப்படி அணிஞ்சு வந்திருப்பாரோன்னுதான் நினைக்கத் தோணுது.

* அந்த போஸ்டர்ல ரெண்டு பக்கமும் பார்த்தீங்கனா ஹெலிகாப்டர் சுத்திக்கிட்டு இருக்கும். ஆனா அதை எல்லாம் கண்டுக்காம கெத்தா ஸ்டைலா ஃபார்வர்டுல வந்து நிற்கிறார் அஜித். இது எதுக்கான குறியீடுன்னு நினைச்சீங்க? ஹெலிகாப்டர் சப்தத்தைக் கேட்டாலே கையெடுத்து கும்பிட ஆரம்பிக்கிற குரூப் அ.தி.மு.க. ஆனா இவர் அதையெல்லாம் கொஞ்சம்கூட சீண்டாம எனக்கென்னான்னு நிற்கிறார்னா என்னா அர்த்தம் மக்களே? ஆங் அதேதான்...

* டைரக்டர் சிவா-அஜித் காம்போவுல ஏற்கெனவே வந்த 'வீரம்' படத்துலேயும் சரி அடுத்து வந்த 'வேதாளம்' படத்துலேயும் சரி அண்னன்-தம்பிகள் சென்டிமென்ட், அண்ணன்-தங்கச்சி செண்டிமென்ட் கான்செப்ட்தான். இதிலேயும் அதே மாதிரி கான்செப்ட் இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. சரி  இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்னுதானே கேட்கிறீங்க. மூச்சுக்கு முன்னூறு தரம் உடன்பிறப்புகளே உடன்பிறப்புகளேன்னு சொல்லுற கட்சி தி.மு.க. இப்படி உடன்பிறப்புகள் கான்செப்டுகளாக செலெக்ட் பண்ணி நடிக்கிறதே தி.மு.க-வோட அனுதாபினு காட்டத்தானோன்னுலாம் நினைக்கத் தோணுமா தோணாதா நீங்களே சொல்லுங்க பாஸ்!

* போஸ்ட்டரைப் பார்க்கும்போது காஸ்ட்யூம் மாத்திருக்கார், உடம்பை சேஞ்ச் ஓவர் பண்ணிருக்காங்க. ஆனா அந்தத் தலை மட்டும் அப்படியே தனியாக இருக்கு. எது... அந்த  வெட்டி ஒட்டி வெச்சது மாதிரி இருக்கே... அதுவான்னு விதண்டாவாதமாகல்லாம் பேசக் கூடாது மக்களே. அப்படியே இங்கிட்டு தி.மு.க. பக்கம் வந்தீங்கனா அதே மாதிரிதான்  சமீபத்துல கட்சியில பெரிய மாற்றம்லாம் நடந்துச்சு. ஸ்டாலினுக்கு செயல்தலைவர் போஸ்டிங்னுகூட சுத்தி வளைச்சுதான் கொடுத்தாங்க. ஆனா தலைவரை மட்டும் மாத்தவே இல்லை. அங்கே தலைங்கிறது இங்கே தலைமைங்கிறதுக்கான குறியீடுனு உங்களுக்கு சொல்லித் தெரியணுமா என்ன?

* அட அவ்வளவு ஏன் பாஸ்... 'வேதாளம்', 'வீரம்' டைட்டில் V-லதான் ஸ்டார்ட் ஆகுது இப்போ விவேகமும் V-ல தான் ஸ்டார்ட் ஆகுது. சிவா அஜித் காம்போவுக்கு ராசியான எழுத்துனு இப்பவும் அதே எழுத்துல தலைப்பு வெச்சுருக்காங்கனு அஜித் ஃபேன்ஸ் சொல்றாங்க. மச்சி இது விவேக் ஓபராய் படம் போலடா அதான் அதுக்கு மேட்ச்சா விவேகம்னு டைட்டில் வெச்சுருக்காங்கனு விஜய் ஃபேன்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. ஆனா கருணாநிதி எழுதி  பஸ்ல ஒட்டியிருந்த அந்த 'விவேகம் என்னும் வெள்ளி முளைத்து...' ங்கிற ஃபேமஸான வாசகத்துல இருந்துதான் இந்தப் படத்துக்கு விவேகம்னே பேர் வெச்சுருப்பாங்களோன்னு டவுட்டா வருது மக்களே..அவ்வ்வ்!

- ஜெ.வி.பிரவீன்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close