Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதவனை இயக்கும் அந்த இருவர் இவர்கள்தான்! #Verified

வைகை அணையை தெர்மாகோல் போட்டு மூடுன கதை ஒருபக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் பரபரப்பா பேசப்பட்டுக்கொண்டிருக்கிற டாபிக் மாதவன். மாதவனை உண்மையில்  இப்ப  இயக்குவது யார்ங்கிற கேள்விதான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது. கிடைத்த சிலபல தகவல்களை வைத்து இப்போது அதுவும் கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

மாதவனை  வைத்து பலபேர் இயக்குவது ஊரறிந்த விஷயம். ஆனாலும் இப்போது இயக்குவது யார் என்பதுதானே கேள்வியே, அதனால் கேள்விக்குள் வருவோம். அதற்கு முன் மாதவன் இயக்கப்பட்டதையும் அதன் சில சுவாரஸ்யங்களையும் அவருக்கு நெருக்கமான சிலரையும் பற்றிப் பார்க்கலாம்.

சீமான்

இப்போது பலபேர் மாதவனை வைத்து இயக்கிக்கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் அரசியல் சார்ந்து அவரைத் திருப்பி  சிந்திக்கவைத்ததில், இயக்கியதில் முங்கியப்பங்கு ஒருவருக்கு உண்டு என்றால் அது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்தான்.

அவரா... இவரா... அந்த அணியா, இந்த அணியா என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் சீமானும்தான் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார் எனச்சொல்லும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறதா; அப்படித்தான் இருக்கும்.  அதைத்தெரிந்துகொள்ள வேண்டுமானால், கமல்ஹாசன் பாணியில் நாம்  சில காலங்கள் பின்னோக்கிப் போய் பார்க்கவேண்டும். மாதவனுக்கும் சீமானுக்கும் இன்று நேற்று அல்ல; 2004ல் இருந்தே தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இவர்களது இணைப்பில் முக்கியக் காரணமான ஒருவர் மேனேஜர் நசீர். தனது மேனேஜர் நசீர் மூலமாகத்தான் முதலில் சீமான் மாதவனை அணுகி இருக்கின்றார். அவர் மூலமாகத்தான் சீமானின்  பல விசயங்களைக் காதுகொடுத்தே கேட்க ஆரம்பித்திருக்கிறார் மாதவன். அதன்பிறகு அவருடைய வழிகாட்டுதலின்படிதான் முழுக்க முழுக்க இயங்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

மாதவன்

அடுத்ததாக அவரது இந்த பயணத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும் ரொம்பவே பங்கு இருக்கிறது என்பது நெருங்கிய பல வட்டாரங்களுக்குத் தெரிந்த விசயமே. பல நேரங்களில் அவரோடு சேர்ந்து மாதவன் இயங்கி இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்குள் பல அணிகள் உருவாகி தமிழ்நாடே சிதற ஆரம்பித்த காலத்திலேயே ட்விட்டரில் மறைமுகமாக தனது ஆதரவைத் தெரிவித்த கமல், தனக்கு அவ்வளவு பெரிய ஆளுமைத்திறன் இருந்தும் எதாவது பண்ணி ஆகணும் மாதவன்  என அவரிடமே போய்க்  கேட்கிற அளவுக்கு அவ்வளவு நெருக்கம் ஆனார்கள். அதன் மூலம் கமலுக்கும், மாதவனுக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகமானது. இதுபோல மாதவனுக்கு நெருக்கமானவர்கள் லிஸ்ட் இங்கும் மட்டும் இல்லை, அது டெல்லி வரைக்கும்  நீ...ண்டு பரவிக்கிடக்கின்றது.

உண்மை

இப்படியான சூழ்நிலையில் மாதவனை இப்போது யார்தான் இயக்குவது என்றால் மேல் சொன்ன  அவருக்கு நெருக்கமான சீமானும் இல்லை கமல்ஹாசனும் இல்லை என்பதுதான் பதில். மாதவனை உண்மையில் இப்போது இயக்கிக்கொண்டிருப்பது புஷ்கர்-காயத்ரி என்கிற இருவர் அணிதான். ஆம் இப்போது மாதவன் நடித்துக்கொண்டிருக்கும் 'விக்ரம் வேதா' படத்தை இயக்குபவர்கள் அந்த இயக்குநர்கள்தான். ஆமா, நீங்க வேற மாதவனை ஏதும் மனசுல வச்சுக்கிட்டு இந்த ஆர்டிக்களைப் படிக்கலையே...?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close