Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்வாள்தேவனின் மனைவி யார்? அந்த உண்மை தெரிஞ்சாகணும்!

ஒரே ஒரு காட்சியில் மட்டும் தலையைக் காட்டிவிட்டு உலக பிரபலம் ஆன கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிறைய உன்டு. ஆனால், பல்வாள்தேவனின் மனைவி, `காற்று வெளியிடை' ரவி போல் ஒரு காட்சியில்கூட முகத்தை காட்டாமலே ஆர்வத்தைத் தூண்டிய கதாபாத்திரங்கள் இவை...

ஆடுகளம் நாகவள்ளி அக்கா

`ஆடுகளம்' நாகவள்ளி அக்கா :

`ஆடுகளம்' படத்தில் 'ஊள' எனும் கதாபாத்திரத்தில், தனுஷின் நண்பனாக நடித்திருப்பார் முருகதாஸ். படத்தில் அவர் காதலிக்கும் பெண்ணின் பெயர் தான் நாகவள்ளி. `ஒத்த சொல்லால...' பாடலில் தனுஷ் கைலியை கட்டிக்கொண்டு களிப்பில் ஆடிக்கொண்டிருக்கையில், `ஏய் என்னையும்தான்யா நாகவள்ளி லவ் பண்றேன்னு சொல்லுச்சு. நான் என்ன இப்படியா ஆடுனேன்..!' என கேட்பார். அதே பாடலில், கல்யாண கோஷ்டியோடு சேர்ந்து இருவரும் குத்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில் `நாகவள்ளி அக்கா இங்கே பாருங்களேன்' என கூட்டத்தில் பெண் குரல் ஒன்று கேட்கும். உடனே, அங்கிருந்து நடையை கட்டிவிடுவார் முருகதாஸ். அதேபோல், `கம் டு மை ஹோம்' எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பள்ளிச்சிறுமிகளிடம் முருகதாஸ் கேட்கையில் `செருப்பு பிஞ்சுரும். இரு நாகவள்ளி அக்காகிட்டே சொல்லித்தர்றேன்' என மிரட்டுவார்கள்.

துள்ளாத மனமும் துள்ளும் அம்மா

`துள்ளாத மனமும் துள்ளும்' அம்மா :

அந்த படத்தில் வரும் விஜய்யின் அம்மா கதாபாத்திரம் முக்கியமானது. அவர் இறந்த செய்தியை கேட்டுத்தான் கழிவறை கதவை பூட்டிக் கொண்டு கதறி அழுவார் விஜய். அவரது இறந்துபோன அம்மாவின் கண்களைதான் பார்வையிழந்த சிம்ரனுக்கு பொருத்துவார்கள். படத்தில் பல இடங்களில் தனது அம்மாவை பற்றி பேசுவார் விஜய். அவருக்கு கடிதம் எழுதிப்போடவும் செய்வார். ஆனால், அந்த அம்மாவின் முகத்தை சின்ன போட்டோவில் கூட காட்டியிருக்கமாட்டார்கள்.

வேலையில்லா பட்டதாரி தங்கபுஷ்பம்

`வேலையில்லா பட்டதாரி' தங்கபுஷ்பம் :

`வேலையில்லா பட்டதாரி' படத்தில் வரும் விவேக்கின் மனைவி கதாபாத்திரம்தான் தங்கபுஷ்பம் (எ) கோல்டன் ஃபிளவர். தன் மனைவிக்கு போன் செய்து பேச `செல்' முருகனிடம் செல்போனை வாங்கும் காட்சியில் தங்கபுஷ்பம் பற்றி சொல்வார்கள். விவேக் அடுத்து நடித்த `என்னை அறிந்தால்' படத்திலும் தங்கபுஷ்பம் கதாபாத்திரத்தை பற்றி சொல்வார். அதிலும், அந்த பாத்திரத்தின் முகத்தை காட்டியிருக்கமாட்டார்கள்.

மைனா செந்தாமரை

`மைனா' செந்தாமரை:

`மைனா' படத்தின் சில இடங்களில் தம்பிராமய்யாவின் மனைவி செந்தாமரை எனும் கதாபாத்திரம் அவருக்கு போன் செய்து பேசுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இறுதிகாட்சிக்கு முந்தைய காட்சியில் விதார்த்துடன் போனில் பேசும் அந்த செந்தாமரை கதாபாத்திரம், விதார்த் `அம்மா' என அழைத்ததும் அழுவதாக சொல்லியிருப்பார்கள். இத்தனைக்கும் படத்தின் ஒரு இடத்தில் கூட அந்த செந்தாமரையின் குரலோ, முகமோ பதிவு செய்யப்பட்டிருக்காது. ஆனால், அவர் அழுதுக்கொண்டிருப்பதாக தம்பிராமைய்யா சொல்லும் அந்த இடம்... மனதை ஏதோ செய்யும். 

காற்று வெளியிடை ரவி

`காற்று வெளியிடை' ரவி :

`காற்று வெளியிடை' படத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம், நாயகி லீலாவின் அண்ணனான ரவி கதாபாத்திரம். ரவி தான் நாயகனை பற்றி நாயகிக்கு சொல்லியதாக படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால், அவரது முகத்தை காட்டியிருக்கவே மாட்டார்கள். 

பல்வாள்தேவனின் மனைவி

`பாகுபலி / பாகுபலி -2' பல்வாள்தேவனின் மனைவி :

இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்த கதாபாத்திரம். `பாகுபலி' படத்தின் முதல்பாகத்திலேயே ராணாவிற்கு மகன் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஆனால், அவரது மனைவியை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய அரண்மனையில் அவரது சின்ன ஓவியம் கூட இடம்பெற்றிருக்காது. `பாகுபலி-2' படத்திலும் அதேபோல் தான் ராணாவின் மனைவியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. யார் தான் பல்வாள்தேவனின் மனைவி?

`மேட்டுகுடி' படத்தில் தவறிப்போய் கவுண்டமணிக்கு வந்துவிடும் அந்த கடிதத்தை எழுதிய ராமசாமியின் மனைவி கமலாவையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். ஹிஹிஹி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close