Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்கிறார்..! எங்கே...எப்போ? #VikatanExclusive

நடிகர் ரஜினிகாந்த் வரும் 15ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1980ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தன் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இப்படி சென்னை வந்து ரஜினியை சந்தித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் வழியில் மூன்று ரசிகர்கள் சாலை விபத்தில் இறந்தனர். அதில் மனம் வருந்திய ரஜினி 2008ம் ஆண்டுக்குப்பிறகு ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். 

இந்த நிலையில் 2011 மே மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். அப்போது அவர் குணம்பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினர். சிகிச்சை பெற்று குணமாகி திரும்பிய ரஜினி, தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களை சந்திக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அந்த சந்திப்பு உடனடியாக நடைபெறவில்லை. 

இதற்கிடையில் பொங்கல், தீபாவளி, தன் பிறந்தநாளில் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெளியே திரண்டிருக்கும் ரசிகர்களை சந்திப்பார். ஆனால் அது திட்டமிடப்பட்ட சந்திப்பாக இல்லாமல் கூடி நிற்கும் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து அவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லி, அவர்களின் வாழ்த்துகளை இவர் பெற்று என யதேச்சையாக நடக்கும் சந்திப்பாக இருக்கும்

ரஜினிகாந்த்

பின்னர் தன் பிறந்தநாளில் ஏற்கெனவே சந்தித்ததுபோல தெளிவாக திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களை சந்திக்கலாம் என ரஜினி திட்டமிட்டார். இந்த நிலையில் ‘2.0’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினி வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினர் அவரின் இலங்கைப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினி. 

ரஜினிகாந்த்

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆறு நாட்களில் சுமார் 10 ஆயிரம் ரசிகர்களை சென்னையில் தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சத்திய நாராயணா, சுதாகரன், அனைத்து மாவட்ட மன்ற தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டமும் நடந்தது. தினமும் 1,500 பேர்கள் என மொத்தம் மொத்தம் 10 ஆயிரம் ரசிகர்களை ரஜினி சந்திப்பார் என கூறப்பட்டது. 

இந்த நிலையில் திடீரென்று அந்த ரசிகர்கள் சந்திப்பு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ‘ஒவ்வொறு நாளும் 6 மாவட்ட நிர்வாகிகளுடன் ரசிகர்களை சந்திக்கவும் புகைப்படமெடுக்கவும் தீர்மானிக்கும்பட்சத்தில் சுமார் 1800 பேரை தனித்தனியே புகைப்படம் எடுப்பது நடைமுறையில் சாத்தியப்படாததால், 8 பேருக்கு ஒரு புகைப்படம் என்று திட்டமிட்டோம். ஆனால் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்வதைவிட தலைவருடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்வதில்தான் அவர்களுக்கு விருப்பமென்று தெரிவித்ததால், அவர்களுடைய விருப்பத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டு இப்போது நடத்தவிருந்த போட்டோஷூட்டை தள்ளிவைத்து, தினம் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ரசிகர்களை சந்தித்து தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமென்றும் கால அவகாசத்திற்கு ஏற்றார்போல் பிறகு நடத்தாலமென்று முடிவு செய்திருக்கிறோம், நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று அவரின் மன்ற நிர்வாகி அறிவித்தார். 

இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாளொன்றுக்கு மூன்று மாவட்டம் என ஐந்து நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 15ம் தேதி வரும் திங்கட்கிழமை முதல் நாள் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 250 ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. இந்த முதல்கட்ட ரசிகர் சந்திப்பை 19ம் தேதி வெள்ளிக்கிழமை முடிப்பவர் அன்று திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 

இதுகுறித்து கரூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகியான கே.எஸ்.ராஜாவிடம் பேசினோம். 
ரஜினிகாந்த்‘‘இது எங்களோட நீண்ட நாள் கோரிக்கை. இப்பதான் நிறைவேறப்போகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இன்னைய தேதியில் தலைவர்தான் மாஸ் நடிகர், மாஸ் லீடர். ஒரு விஷயம் பண்றதுக்கு முன்ன ‘இப்படி பண்ணினா என்ன ஆகும்’னு எல்லா கோணங்கள்லயும் யோசிப்பார். அப்படி அவரோட அரசியல் அழைப்பை பற்றியும் நிறைய யோசிக்கிறார். ‘எது பண்ணினாலும் மிகச்சரியா பண்ணணும்னு நினைக்கிற நமக்கு அரசியல் சரியா வருமா?’னு யோசிப்பார். அவரை நாங்க கட்டாயப்படுத்த விரும்பலை. ஆனால் எங்க விருப்பம், அவர் அரசியலுக்கு வரணும் என்பதுதான். ‘நீங்க வாங்க, மத்ததை நாங்க பாத்துக்குறோம்’னு அவர்ட்ட பலமுறை சொல்லிட்டோம். ஆனாலும் யோசிக்கிறார். எங்களைப்பொறுத்தவரை அவரும் நல்லா இருக்கணும்; இந்த நாடும் நல்லா இருக்கணும் அவ்வளவுதான்’’ என்கிறார் கே.எஸ்.ராஜா. 

ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வருமான வரித்துறை சோதனை, விசாரணை, கைதுகள்... என மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் பரபரப்பாகஇயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிரிந்த அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் ஓரணியாகப்போகிறது என்று சொன்னதும் நடக்காது என தெரிகிறது. ரஜினியும் சில அரசியல் புள்ளிகளை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நடக்கும் இந்த ரசிகர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close