Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதைத் தவிர வேறென்ன சொல்வது... லவ் யூ ராஜா!#HBDIlayaraja

குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களால் மொழி உருவாகிறது. அதன் பின்னர் அதே நிலப்பரப்பில் இருக்கும் மக்களிடம் பண்பாடு உருவாகிறது. ஒரே நிலப்பரப்பு, ஒரே மொழி மற்றும் குறிப்பிட்ட பண்பாடு ஆகியவை  இணையும் புள்ளியில் அந்தப் பகுதிக்கான இறைமை உருவாகிறது. இதன் துணைப்பிரதிகளாக இசை, உணவு  உள்ளிட்டவை தோன்றுகின்றன. இதுதான் தேசிய இனத்தின் உருவாக்கம். இப்படி உருவாகிவிட்ட தேசிய இனத்துக்கு என்று பொது ஆன்மம் (Soul) வந்துவிடுகிறது. பல்வேறு சிந்தனைகள் இருந்தாலும் இந்த ஆன்மம் என்பது அதற்குள்தான் இயங்குகிறது. அப்படி உருவான தமிழ் தேசிய இனத்தின் பல்வகை உட்பண்பாடு, வழக்குச் சொல் வேறுபாடுகளைக் கடந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு கலைச்செயல் ஒட்டுமொத்தமாக இணைத்தது. அதன் பெயர் இசை. ஆம் இளையராஜாவின் இசை வகைதொகையின்றி பன்மையான அடையாளங்கள் கொண்ட தமிழ் சமுதாயத்தை இசையால் இணைத்தது.

நட்சத்திர விடுதியின் இருண்ட பார்களில் மெலிதாக ஒலிக்கும் இன்ட்ஸ்ருமென்டல் இசையாகவோ, ஷேர் ஆட்டோக்களின் நெருக்கடியில் "கார்கால மேகம் வரும்... கல்யாண ராகம் தரும்" எனக் ஹெட்போனில் ஒலிக்கும் பண்பலையின் வாயிலாகவோ, அமைதியாக இருக்கும் அலுவலகத்தில் யாரோ ஒருவரின் ரிங்டோனாகவோ, அல்லது வெற்றிகரமான ஒரு திரைப்படத்தின் இடையே வரும் சின்னஞ்சிறிய பீட்டில் ஒலிக்கும் பாடலாகவோ என இளையராஜாவைத் தவிர்க்கவே முடியாது. நீங்கள் தமிழ்நாட்டில் வாழும்போது எப்படி தமிழை தவிர்க்க முடியாதோ அதைப்போல் இளையராஜாவையும் தவிர்க்கவே முடியாது. 

இளையராஜா

எளியமக்கள் இருக்கும் தெருக்களை இரவினில் கடக்க நேர்ந்தால் யார் வீட்டிலாவது மெல்லிய குரலில் ஜென்சியோ, ஜானகியோ உருக்கியபடி இருக்கின்றனர். "நான் என் வேலையை மட்டுமே செய்கிறேன்" என்று சிலநாட்களுக்கு முன்கூட ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் இளையராஜா. ஆனால் அவரின் வேலையை அவர் செய்து முடித்தாலும் அதன் வினைப்பயன்களும் அது தமிழ் மனநிலையுடன் வாழும் மனிதனுக்கு எப்படி எல்லாம் அனுசரணையாக இருக்கிறது என்று சொற்களால் சொல்லுவதை விட இதோ இந்த இரண்டு சாமன்யர்களின் குரலில் கேளுங்கள். ஒருவர் மலையாளக் குறும்படங்களில் நடிக்கும் நடிகர் வினோத். மற்றொருவர் சிதம்பரம் அருகில் உள்ள கீழனுவம்பட்டு பாலு . நாம் நெகிழ்ந்த, மகிழ்ந்த, அழுத அனைத்துக் கணங்களிலும் உடன் இருந்த, இருக்கப்போகும் இளையராஜாவுக்கு அவரது பிறந்தநாளில் நன்றிகளை அன்றி வேறென்ன சொல்ல முடியும்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close