Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’என் திருமணநாளன்று மறக்காமல் வாழ்த்துச் சொன்னார் விஜய்..!’’ - நெகிழும் நடிகர் சாந்தனு

மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது 'மெர்சல்' படத்தின் ஆடியோ லான்ச். இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக் ஏற்கெனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் அனைத்து பாடல்களையும் இசை வெளியீடு நடத்தி வெளியிட்டிருக்கிறது படக்குழு.

சாந்தனு

தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படமான இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் சூழ, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது. இந்த நிகழ்வில் நடிகர் சாந்தனு தனது நடனத்தின் மூலம் பலரையும் ரசிக்க வைத்தார். இன்று சாந்தனுவின் திருமணநாள். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் இவரது திருமணம் விஜய் கைகளால் தாலியை எடுத்துக் கொடுக்க நடைப்பெற்றது. விஜய்யுடன் இவரின் உறவுமுறை குறித்து பகிர்ந்துகொண்டார் சாந்தனு.

''என் தந்தையின் திருமணத்தின்போது அவருக்குத் தாலி எடுத்துக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என் திருமணத்தின் போது என் அப்பா என்னிடம் வந்து, 'உன் திருமணத்துக்குத் தாலியை யாராவது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசையுள்ளதா' என்றார். 'எனக்கு விஜய் அண்ணாவை மிகவும் பிடிக்கும். அதனால் அவர் எடுத்துக் கொடுத்தால் நன்றாகயிருக்கும் என்று கூறினேன்.' அதேபோல் விஜய் அண்ணா தலைமையில்தான் எனக்குத் திருமணமும் நடந்தது. ஆனால், விஜய் அண்ணா அவர் கைகளால் தாலி எடுத்துக் கொடுக்க மிகவும் கூச்சப்பட்டார். ஏனென்றால், விஜய் அண்ணாவைவிட வயதில் மூத்தவர்கள் எல்லாம் என் திருமணத்தில் பங்கேற்றனர். அதனால், அவர் மிகவும் சங்கடப்பட்டார். திருமணம் முடிந்து இரவு எனக்கு போன்பண்ணி, 'எவ்வளவு பெரிய காரியம் செய்ய வைத்துவிட்டாய் நண்பா' என்று கூறினார். 

விஜய் அண்ணா படத்தின் அனைத்து ஆடியோ லான்சிலும் கலந்துகொள்வேன். நேற்று எனக்கு மிகவும் முக்கியமான வேலை இருந்தது. இருந்தாலும் நான் விஜய் அண்ணாவுக்காகத்தான் வந்து நடனம் ஆடினேன். நேற்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போதும்கூட 'என்ன அவசரம்' என்று கேட்டார். இன்று, காலையில் போன் பண்ணி ஞாபகம் வைத்து எனக்கு திருமணநாள் வாழ்த்துகள் சொன்னார்'' என்று விஜய் பற்றி நெகிழ்கிறார் நடிகர் சாந்தனு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close