Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாசமிகு அண்ணனில் தொடங்கி அதிநவீன திருடன் வரை- ரஜினியின் 40 ஆண்டுகள் ஒரு பார்வை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 40 வருட கால திரை உலகப் பயணத்தில், அவர் நடித்த கதாபாத்திரங்கள் பற்பல. அவற்றுள் மனதில் நிற்பவையும் சற்றே வித்தியாசமான கதாபாத்திரங்களையும் இங்கே பார்ப்போம்.

1. பைரவி (தங்கைக்காக) ரஜினி தனி ஒரு ஹீரோவாக நடித்த முதல் படம். இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிடத்தக்க படம். காரணம், இந்தத் திரைப்படத்திற்குப் பின் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெற்றார் ரஜினிகாந்த். தங்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மூக்கைய்யாவிற்கு ஈடு மூக்கைய்யா மட்டுமே.

2. நெற்றிக்கண் (அப்பாவைத் திருத்தும் மகன்), தனது அப்பாவான சக்கரவர்த்தியைத் திருத்தும் மகன் சந்தோஷ். ரஜினி நடித்த கதாபாத்திரங்களிலேயே கடினமான கதாபாத்திரம் இதுவேயாகும்.

3. எங்கேயோ கேட்ட குரல் (குடும்பம் சார்ந்த கதை), தன்னை வேண்டாம் என்று கூறி விட்டுச் சென்ற மனைவி, அவளது வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும்போது மீண்டும் உதவுபவனே குமரன்.

4. அன்புள்ள ரஜினிகாந்த் (அனாதைக் குழந்தைகளுக்காக), ஒரு அனாதைக் குழந்தையின் ஆசைகளை நிறைவேற்றும் நெஞ்சுருக்கும் கதாபாத்திரம். இதில் ரஜினி ரஜினியாகவே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் (ராபின் ஹூட்), ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருந்து கொண்டே, ஊரிலுள்ள ரவுடிகளைக் களையெடுப்பார். அதை காவலதிகாரியாக வருகிற பாக்யராஜ் கண்டுபிடிப்பார். மிகவும் சுவாரசியமான திரைக்கதை அமைந்த படம்.

6. ராஜாதி ராஜா (இரட்டை வேடம்), இத்திரைப்படம் சற்றே விறுவிறுப்பான படம். இதில் ரஜினி ராஜாவாகவும் சின்னராசுவாகவும் நடித்துள்ளார். அப்பாவியாகவும் புத்திசாலியாகவும் கூட.

7. தளபதி திரைப்படத்தில் (நண்பனை மையமாக வைத்தது) என்றும் அழியாத கதாபாத்திரம் தான் சூர்யா. நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரம். நட்பின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கும் படம்.

8. எஜமான் (எஜமான் தான்), மக்களுக்காக நேர்மையாக வாழும் ஊர்த்தலைவன். வானவராயன் மற்றும் வல்லவராயனின் பகையின் விளைவும் முடிவுமே கதைப்பின்னல்.

9. மூன்று முகம் (மூன்று கதாபாத்திரங்கள்), அருண், அலெக்ஸ் பாண்டியன் , ஜான் என மூன்று வெவ்வேறு வேடங்களில் நம்மை ஆட்கொண்டவர் ரஜினி. போலீஸ் என்றால் அலெக்ஸ் பாண்டியன் போல் இருக்க வேண்டுமென்று கூறும் அளவிற்கு புகழப்பட்ட கதாபாத்திரம்.

10. படையப்பா (ஸ்டைல்), படையப்பா ஸ்டைலானவன்! இன்றளவும் அந்தப் படத்திற்கு இணை அந்தப் படமே. ரம்யாகிருஷ்ணனுக்கென்று  ஒரு அடையாளம் உருவானதும் இந்தப் படத்தில் தான்.

11. பாபா (கற்பனை கலந்த படம்), ஒரு நாத்திகனான பாபா கடவுள் இருப்பதை உணர்ந்து 7 வரங்களையும் பெற்று வருவதுதான் கதை.

12. சந்திரமுகி (அமானுஷ்ய கதை), இப்படத்தின் தனித்துவம் யாதெனில் ஒரு பெயர் பெற்ற கதாநாயகன் ஒரு பெண் பாத்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பதாகும். இதனை ஜோதிகாவே கூறியுள்ளார்.  சரவணனின் கண் பார்வையும் நடிப்பும் பிரமிக்க வைக்கும்.

13. சிவாஜி (ஊழல்), மக்களுக்காகச் சேவை செய்ய வருபவன் படும்பாட்டை மிக நுணுக்கமாக எடுத்துக்காட்டிய படம் சிவாஜி. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என அறிந்தும் மக்கள் எப்படி சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்கள் என நடித்துக் காட்டினார் சிவாஜி.

14. எந்திரன் (அறிவியல் சார்ந்த படம்), இப்படத்தைப் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. காரணம், இப்படி ஒரு பிரம்மாணடமான படத்தைத் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கவில்லை. வசீகரனாகவும், சிட்டியாகவும் நம்மை அவர் உள்ளங்கையில் பம்பரம் போல் சுழற்றினார் ரஜினி.
 

15. லிங்கா (அதிநவீன திருடன்), இப்படியெல்லாம் கூட திருடலாமா என மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு நடித்துள்ளார். நாட்டிற்காக அணைக்கட்டு கட்டிய ஒரு அரசனை கண்ணெதிரில் காண்பித்தவர் ராஜா லிங்கேஷ்வரர்.

- ந.ஆசிபா பாத்திமா

(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close