Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாராவின் சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக்!

ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் வித்தியாசம் காட்டி தமிழில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. முதல் தமிழ் படத்திலேயே முன்னணி நடிகரான சரத்குமாருடன் 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.  தொடர்ந்து இவர் கொடுத்த பட வெற்றிகளும் அவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் இவரை நம்பர் ஒன் நடிகையாக மாற்றியது. இவரின் நடிப்பின் மூலம் திருப்புமுனை கொடுத்த  படங்ககளைப் பற்றியான ஒரு சின்ன கொசுவர்த்தி ரிவைண்ட்..

யாரடி நீ மோகினி:

 

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷுடன் 2008ல் இணைந்து நடித்தப் படம் யாரடி மோகினி. கீர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் அறிமுக காட்சியிலேயே ஸ்கோர் செய்திருப்பார். “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடல் இன்றும் தனி ரகம். மழையும், வெள்ளைச் சுடிதார் காம்பினேஷனும் இந்தப் பாடலுக்கும் சரி, நயன்தாராவுக்கும் பெஸ்ட் ஆஃப் தி சாங்காக மாறியது. தனுஷை முதலில் காதலிக்க மறுத்துவிடும் நயன்தாராவை தனுஷின் நண்பராக வரும் கார்த்திக் குமாரை குடும்ப வற்புறுத்தலால் திருமணம் செய்யவிருப்பார். கடைசி நேரத்தில் நயன்தாராவிற்குள் இருக்கும் காதலை மறைத்து கல்யாணத்திற்கு முன்தின இரவில் தனுஷை சந்திக்கும் காட்சி படத்திற்கு மட்டுமல்லாமல் நயன் நடிப்பிற்கும் ப்ளஸ்.

ராமராஜ்யம் (தெலுங்கு)

நயன் சீதை வேடத்தில் நடித்து தெலுங்கில் வெளியான படம் தான் ராமராஜ்யம். நந்தமுரி பாலகிருஷ்ணன் ராமராக நடித்திருப்பார். தமிழில் டப்பாகி வெளியான இப்படம் நயன்தாராவிற்கு கடைசி படமென்றும் பல செய்திகள் வெளியானது. படப்பிடிப்பின் இறுதி நாளில் கண்ணீர் விட்டு அழுததாகவும் செய்திகள் பரவின.  அனைத்திற்கும் நயன்தாரா இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சீதையாக க்ளாசிக் ரோலில் கலக்கியிருப்பார் நயன்தாரா. இளையராஜா இசையமைத்த இப்படத்தில்  சிறிதும் பெரிதுமாக 15 பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இந்தப் படத்தில் ராமரைப் பிரிந்திருக்கும் சீதை, தன்னுடைய மகன்களான லவ குசனுடன் தனித்து வாழ்ந்து வருவார்.  ஒரு காட்சியில் கணவருடனேயே போருக்கு தயாராகும் மகன்களாக லவ குசன். இருவருக்கும் மத்தியில் சீதை படும் வேதனையை நடிப்பால் நம் கண்முன் நிறுத்தியிருப்பார் நயன்தாரா.

பாடிகார்ட் (மலையாளம்)

தமிழில் விஜய் நடித்து வெளியான "காவலன்" படத்தின் மூலப்படம். பாடிகார்ட் படத்தில் நயனின் நடிப்புக்கு முன் அசின் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லத்தோணும். அதிலும் குறிப்பாய் திலிப்பை மீண்டும் சந்திக்கும் காட்சியில் குற்றவுணர்ச்சியிலும், ஆற்றாமையிலும் பெர்ப்பாமென்ஸ் பிண்ணியிருப்பார். நயனின் பெஸ்ட்களில் கண்டிப்பாக இந்தபடமும் ஒன்று.

ராஜாராணி:

ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) படத்திற்குப் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துவந்தார். பல சர்ச்சைகள், வதந்திகள் என்று அனைத்தையும் முறியடித்து ரீ எண்ட்ரி கொடுத்தப் படம் தான் “ராஜா ராணி”. அட்லி இயக்கத்தில் ரெஜினாவாக கம்பீரமாக நடித்திருப்பார். இந்தப் படம் நயன்தாராவின் சினிமா வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தப் படம் என்றே கூறலாம். துணிச்சலான பெண்ணாக, காதலன் இறந்து விட்டான் என்று தெரியவரும்போது உடைந்து அழும் காட்சிகளில் தனியாக ஸ்கோர் செய்திருப்பார். ராஜாராணி படம் முழுவதும் இவரின் நடிப்பே பேசப்பட்டது.

நானும் ரவுடிதான்:

பிக் பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நயன்தாரா. கதாநாயகிகள் என்றால் ஹீரோவிற்கு ஆதரவாக இருக்கும் கதாப்பாத்திரம் மட்டுமே இருக்கும் என்ற ட்ரெண்டை உடைத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இறங்கி நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வெளியாகி ஹிட் அடித்திருக்கும்படம் நானும் ரவுடிதான். இந்தப் படத்தில் காதுகேட்காத பெண்ணாக நடித்திருப்பார். காதம்பரியாக வரும் நயன்தாரா சின்ன சின்ன நடிப்பிற்கும் மெனக்கெட்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் க்ளைமேக்ஸில் பார்த்திபனை கொல்ல சென்று விட்டு, உன்னை வேறயாராவது கொல்லுவாங்க என்று சொல்லி அழும் காட்சி இந்தப் படத்தில் இவரின் மாஸ் நடிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close