Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்மையைப் போற்றும் படங்கள் - மகளிர் தின ஸ்பெஷல் அலசல்!

ருப்பு வெள்ளை படங்கள் தொட்டு, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்குத்தான் மவுசு அதிகம். நண்பி, காதலி, மனைவி, தாய் என்று உறவுகள் வேறாயினும்.. பெண்ணின் பெருந்தக்க யாவுள?

மார்ச் 8. மகளிர் தினம். 

நம்மூரில் எல்லாக் கதைகளுமே, ஹீரோக்களை காம்பஸ் முள்ளாக வைத்து தான் அவர்களை சுற்றி வட்டம் போடும். அப்படி இருக்கும் இந்த ஆணாதிக்க-சண்முகத்தில் பெண்களை, கேர்ள்'ஸை, லேடிஸை, விமன்'ஸை..அட ஆமாப்பா..  அவங்கள மையமா வெச்சு வந்த சில அட்ரா சக்கை படங்களைப் பார்ப்போம்.

அவள் ஒரு தொடர்கதை 

மிடில்க்ளாஸ் குடும்பம், விதவையான அக்கா, தங்கை, உதவாக்கரை தம்பி, ஒரு பார்வையில்லாத சின்னத் தம்பி, வயதான அம்மா என மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கி நிற்கும் பெண்ணாக சுஜாதா நடித்திருப்பார், கண்களிலேயே வீட்டில் உள்ளோரை மிரட்டுவதும், விரக்தி, கைகூடாத காதல், குடும்பம் பாரம், எல்லாவற்றையும் தியாகம் செய்து மீண்டும் குடும்பத்தை காப்பற்ற வேலைக்கு செல்வது என சுஜாதாவின் கேரக்டர் பாலசந்தரின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும்.

~கண்ணிலே என்ன உண்டு~

மனதில் உறுதி வேண்டும்

பல போராட்டங்களை சந்திக்கும் ஒரு நர்ஸ். குடும்பம், ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகாரத்து என அவ்வளவு போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண் அவளது வாழ்வு என அந்தக் கேரக்டருக்கு அளவான நடிப்பும், மிடுக்கும் கொடுத்து அப்ளாஸ் அள்ளியதோடு பல பெண்களுக்கு மனதில் உறுதி வேண்டுமென வகுப்பெடுத்ததும் சுகாசினியாகத்தான் இருக்கும்.

 ~சங்கத் தமிழ் கவியே ~

புதுமைப் பெண்

 தவறேதும் செய்யாமல் ஜெயிலுக்குப் போன கணவனை காப்பற்ற போராடும் பெண்.ஓயாமல் உழைத்து , பல துன்பங்கள், போராட்டங்களைக் கடந்து வெளியே வரும் கணவன் தன்னைத் தவறாகப் பேச அதே பெண் எப்போது என் குணத்தில் சந்தேகப்பட்டாயோ உன்னோடு வழ முடியாது என தூக்கி எரிந்து வீட்டை விட்டு வெளியேறும் புரட்சி பெண். “ எண்ணை ஊத்தி திரியப் போட்டாதான்யா விளக்கெரியும், எரிக்கமாலயே எரியறது பொம்பள மனசு தான்” இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. பாரதிராஜா செதுக்கிய பாத்திரத்தை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருப்பார் ரேவதி.

~ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே ~

வைஜெயந்தி IPS

என்னா அடி, என்னுமளவிற்கு ஆக்‌ஷன், வில்லன்களின் சூழ்ச்சி வலை, அரசியல்வாதிகளின் கிடுக்கிப் பிடி என இப்போது வரை ஆக்‌ஷன் குயின் என்றால் தமிழ் சினிமாவின் விஜய சாந்தி தான் என்னும் அளாவிற்கு அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது போனதற்கு இந்தப் படம் தான் முக்கியக் காரணமும் கூட. கோட் சூட், போனி டெயில் ஹேர் ஸ்டைல், என வைஜெயந்தி IPS சபாஷ் பெண் கேரக்டர்.

~ தி லேடி சூப்பர் ஸ்டார் ~ 

கல்கி

ஆதிக்கம் செலுத்தும் கணவன் அவரது அடுத்தடுத்த பெண் தேடல் திருமணம் என அவரை திருத்த களமிறங்கும் பெண், படம் முழுக்க பெண் சுதந்திரத்தை மிக ஆழமாக அழுத்தமாக சொல்லிய படம். தவறாக பேசும் பாஸை அறைவது, ஷாப்பிங் மாலில் ரவுடியை பொறுமையாக அடக்குவது, எய்ட்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் நின்றால் தவறா என கேட்பது இப்படி படம் முழுக்க ஆண் ஆதிக்கத்தைப் பேசிய பெண் ஆதிக்கப் படமாகவே இருக்கும். ஒரிரு படங்களே நடித்த ஸ்ருதியை ஒரு நடிகையாக கல்கி மறக்க முடியாதபடி செய்துவிட்டது.

~எழுதுகிறேன் ஒரு கடிதம் இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்கள் தாம் உண்டோ~

 கன்னத்தில் முத்தமிட்டால் :

கொஞ்சம் சென்சிடிவான படம். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளில் ஒரு பெண் விடுதலைப் புலியாக நந்திதா தாஸ், உடையில் கம்பீரமும், தன் குழந்தையைப் பல ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது நம் கண்களில் ஈரமும் ஏற்படச் செய்துவிடுவார்.  மாதவனும் சிம்ரனும் தன் பெற்றோர் இல்லை என்பதை அறியும் ஒன்பது வயதாகும் கீர்த்தனா உடைந்துப் போவது, நம்மை உருக்கிவிடும். தொலை தூரத்தில் இருக்கும் தாயையும், அவளின் தொடர்கதையாக இருக்கும் மகளையும் வைத்து இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்கு இந்தப் படத்தை எடுத்துபோகும். 

~இலங்கையில் பெண்களின் நிலை பற்றி பேச வேண்டிய பதிவு~

அபியும் நானும் :

சின்னப் பாப்பாவாக இருக்கும் த்ரிஷாவை பிரகாஷ் ராஜ் ஸ்கூலில் சேர்ப்பதில் இருந்து தொடங்குகிறது அப்பா-மகள் அன்பு அட்ராசிட்டீஸ். சைக்கிள் ஓட்டும் போது, பாடிகார்டாக பின்னாலேயே போவது, காலேஜில் ஒரு பையன் பிரப்போஸ் செய்யும் போது அதை பக்குவமாய் ஹேண்டில் செய்ய கற்றுக் கொடுப்பது என அக்மார்க் அப்பாவிற்கு இருக்கும் எல்லா அடையாளங்களையும் பிரகாஷ் ராஜ் கொண்டிருப்பார். ஆனால், சிங் பையனுடன் லவ் என்று வந்தவுடன்,   பாசத்தில் கொந்தளிப்பவர், அதை ஓப்பனாக வெளிக் காட்ட முடியாமல், சப்பாத்தி-ராஜாம்மா? இட்லி இல்லையா? என வெடிப்பார். இறுதியில் டாடி'ஸ் டாட்டருக்கு டான்ஸோடு டும்டும்டும். 

~ஐ நோ வாட் அயம் டூயிங் குழந்தைகள் இன்று ஜாஸ்தியாகி விட்டனர்~

அழகி :

சின்ன வயதில் நாம் பார்த்து பின்னால் சுற்றிய பெண்ணொருத்தி, பின்னாளில் நம் வீட்டிலேயே வேலையாளாகச் சேர்ந்தால், இருவருக்கும் ஏற்படும் மனோபாவம் குறித்தே கதை பேசுகிறது. ஏழையாகப் பொலிவிழந்து வரும் நந்திதாவும், கணவனை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் தேவயாணியும், பார்த்திபன் கனவிலும் நினைக்காத சூழலைத் தந்து, அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுத்தச் செய்வதே இந்தப் படம்.  

மொழி :

காது கேட்காத வாய் பேச முடியாத பெண் மீது ஒரு இசை அமைக்கும் ஹீரோவிற்கு காதல் வருகிறது. அவள் அவனை ஏற்க மறுக்கிறாள். ஏதேதோ காமெடி செய்து மனதில் இடம் பிடித்துவிட்டாலும், ரியாலிடிக்கு இது செட் ஆகாது என நினைக்கும் ஜோ'விடம் அவர் மொழியிலேயே பேசி, அவரையும் சேர்த்து, நம்மையும் அழவைத்து விடுவார் ப்ரித்வி ராஜ். கைத் தாளங்களில் இருந்து ஓசையை உணர முயல்வது, கார் ரேடியோவில் வால்யூமை ஏற்றி, பக்கத்தில் இருப்பவரை குதிக்க வைப்பது என இந்தப் படம் பேசாமல் பேசிய மொழிகள் ஏராளம்.

~காற்றின் மொழி ஒலியா இசையா?~

பச்சைக்கிளி முத்துச் சரம் :

மிஸ்டர் மெட்ராஸ் சரத் குமாரை நேருக்கு நேர் சந்திக்க, பல வில்லன்களே முந்தைய படங்களில் பயந்து போக, ஒரு லேடி டான் எதிர்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் அது ஜோதிகாவாக இருந்தால்?
திருமணமாகிக் குழந்தை இருக்கும் கட்டத்தில் சரத்திற்கு ஜோவின் மேல் ஒரு காதல் வருகிறது. அது காதல் அல்ல, ஒரு பண மேட்டரில் இவரை சிக்க வைக்க, ஜோ விரித்த வலை என்பது தெரிய வருகிறது. படம் நெடுக சேலையில் வருபவர், க்ளைமாக்சில் மட்டும் ஜீன்ஸ் ஷர்ட் என வாயில் பீடா போட்டு, அசல் டானைப் போலவே வந்து நிற்பது ஒரு செக்கண்ட் அல்லு.  

~டானுக்கெல்லாம் டான் நம்ம ஜோதிகா தான்~

நீ எங்கே என் அன்பே

 கணவனைத் தேடிச் செல்லும் ஒரு மனைவியின் போராட்டம். அவள் சந்திக்கும் பிரச்னைகள். அதே வேளையில் அந்தக் கணவன் கெட்டவன் எனத் தெரிந்தது தைரியமாக எடுக்கும் முடிவு என நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக மாறினார் என்பதற்கு மைல் கல் படங்களில் நீ எங்கே என் அன்பே படத்தின் அனாமிகா கேரக்டரை தவிர்க்கவே முடியாது.

~அனேகமா தங்கத் தாரகை பட்டம் அடுத்து இவங்களுக்குதானோ~ 

ஆரோகணம்

பைபோலார் டிஸ்ஸார்டர் பெண். ஆனாலும் குடும்பச் சூழல் ஏழ்மை. இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கணவன். இங்கே குழந்தைகள் என விஜி சந்திரசேகர் நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். அந்தப் படம் சரியாக ஓட வில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது படத்திற்கு சரியான விளம்பரம் இல்லை என்பதே உண்மை. மக்களிடம் படம் குறித்த தகவல் சென்றைடையும் போது படம் தியேட்டரை விட்டே சென்றுவிட்டது. இந்தப் படமும் விஜி சந்திரசேகரின் வித்தியாச நடிப்பிற்காகவும் கேரக்டர் வடிவைமைப்பிற்காவும் பெரிதாக பேசப்பட்ட படம். 

~அன்னையின் அற்புதத்தை வித்யாசமாக காட்டிய படம்~ 


அருந்ததி :

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்று கதை சொல்லிய காலம் எல்லாம் போக, பெருமையாக ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாங்களாம் ! என சொல்ல வைத்த படம் இது. அப்படிப் பட்ட ஒரு வெயிட்டான கதாப்பாத்திரம். பல ஆண்டுகள் கழித்து, "அந்த" ஊருக்கு வரும் அனுஷ்காவின் மேல் அவரது ஆவி குடி ஏறிக் கொள்கிறது. அதை வைத்து அழுக்கு வில்லனாக "பொம்மாயி..." என பல்லு விலக்காமலேயே பாட்டு பாடும் சோனு சூதை எப்படி விரட்டி அடிக்கிறார் என்பதே கதை. அனுஷ்காவின் உயரம் ஒரு படத்தில் அவரை உயரத் தூக்கி சென்றதென்றால், அது அருந்ததி தான்.

~நல்லவங்களுக்கு அருந்ததி. கெட்டவங்களுக்கு அருந்த தீ தான் !~

36 வயதினிலே

மேரேஜ் ஆன பிறகு ஒரு பெண்ணை அவுட்ரேஜ் ஆகச் செய்யும் சமூகம். ஸ்மூத்தாக பயணித்துக் கொண்டிருக்கும் கதையில் திடீரெனெ ஒரு ஸ்பீட்பிரேக்கராக, கணவனும் பிள்ளையும் படிப்பிற்காக வெளி நாடு சென்று விடுகின்றனர். அப்போது இந்தப் பெண் தனிமையில் தன்னை உணர ஆரம்பிக்கிறாள். மாடித் தோட்டம் போட்டு, இயற்கை காய்கறிகள் செய்கிறாள். இறுதியில் ஒரு செம்ம மெசேஜோடு படம் "சுபம்" ஆகிறது.

~இந்தப் படம் பார்த்து மாடியில் தோட்டம் போட்ட பொண்ணுங்களும், சுந்தரி சில்க்ஸிற்கு விசிட் அடித்த பொண்ணுங்களும் ஏராளம்~

இறுதி சுற்று :

எத்தனை நாளைக்குத் தான் பையன்களே பாக்சிங் செய்வது? பாக்சிங் ரிங்கிற்கே அலுத்துப் போய் விட்டது என்பதற்கு, எதிராளியை ஜெயித்து விட்டு ரித்திகா சிங் போட்ட குத்து டான்ஸே சாட்சி. அந்தக் கடவுளே மாஸ்ட்டரா வந்தாலும் நான் இப்படித் தான் என அதகளம் செய்யும் இவரது சேட்டைகள் ஒரு கட்டத்தில் இவருக்கு நிலைமையை உணர்த்த, கோச் மாதவன் போட்ட கோட்டில் பயணித்து, கடைசியில் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி, குட்டிப் பிள்ளையாட்டம் எகிறி, மாதவனைத் தொற்றிக் கொண்டு கெத்து காட்டும் சாதனைப் பெண்!

~கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து !~

மு.சித்தார்த்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close