Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட... இந்தப் பாட்டு ‘அந்த’ப் படமா? #AllTimeClassics

நாம் விரும்பும் பாடலை எழுதிக் கேட்டுக் கொள்ளும் சிலோன் ரேடியோ யுகமல்ல இது. கையிலிருக்கும் குட்டிச்சாத்தானில், ஆயிரம் பாடல்களுடனே அலைந்து கொண்டிருக்கிறோம். படமும் பாடலும் பிரபலமாவது முதல் வகை, படம் மட்டும் பிரபலமாகி பாடல்கள் புஸ்வாணம் ஆவது இரண்டாவது வகை. பாடல் ஹிட் - படம் ஃப்ளாப் மூன்றாவது வகை. இப்படி நிறைய இருந்தாலும், ஒரே ஒரு மெலடி பாடல் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். ஆனால் அந்தப் படத்தின் பெயர் நம் நினைவுக்கு வர மூன்றாம் உலகப் போரே நடக்கும்..அப்படி நம் நெஞ்சை வருடிய சில மெலடிப் பாடல்களும் அதன் ஹிட்டாகாத படங்களும் இதோ .

”குயில் கூவுது குயில் கூவுது”: தென் தமிழக ஏரியா வாசிகளின் ஆகச் சிறந்த எஃப்.எம் ஸ்பெஷல் பாடல்களில் இதுவும் ஒன்று. குயில் கூவுது குயில் கூவுது மனசுல ரயில் ஓடுது. இந்த வரிகளுக்கு முன்பு ஆரம்பமாகும் புல்லாங்குழல் இசைக்கே காதுகள் அடிமையாகும். இந்தப் பாடலுக்கு இசை வித்யாசாகர். படம் வெல்டன். படம் பேரு பூர்வ ஜென்மத்துல கேட்ட மாதிரி இருக்கா?

”ஒரு முறை பிறந்தேன்” - நெஞ்சிருக்கும் வரை இந்தப் படம் சரியாக ஓடவில்லை. ஆனால் இந்தப் பாடல் இல்லாத கிராமத்து வாசிகளின் மொபைல்கள் இல்லை எனலாம்.

”யாத்தே யாத்தே” - இளையராஜாவின் தீவிர வெறியர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம். இளையராஜா இசையில் பவதாரிணி பாடிய மயிலு படப் பாடல். ஸ்ரீராம் பார்த்த சாரதியின் குரல் இடையில் கலப்பது மற்றொரு சிறப்பு.. 

”என் வானத்தின் சந்தன மழையே” - தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியான ஐஸ் என்னும் படத்தில் அமைந்த பாடல். இதில் சிறப்பு என்னவெனில் இப்படத்தின் அத்தனைப் பாடல்களும் இளைஞர்களின் ஹிட் சாய்ஸ் . ஆனால் படத்தின் பெயர் இங்க இருக்கு ஆனா வர மாட்டேங்குது பாணி தான்.

”ஒரு கிளி ஒரு கிளி” - இந்தப் பாடல் இப்போதும் மியூசிக் சேனல்களின் ஃபேவரிட் லிஸ்ட். மதியம் சற்று இளைப்பாறும் வேளையில் சன் மியூசிக், இசையருவி என சுற்றி வரும். படம் லீலை. சதிஷ் சக்ரவர்த்தி இசையில், ஷ்ரேயா கோஷலும், சதிஷ் சக்ரவர்த்தியும் இணைந்து பாடிய பாடல்.

”செல்லமே செல்லம்” - இப்போதும் கேர்ள்ஸ் சாய்ஸ். ஆனால் படம் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை. ஆல்பம் படத்தின் பாடல். நம் ஷ்ரேயா கோஷலுக்கு தமிழில் என்ட்ரி கொடுத்த பாடலே இதுதான். கார்த்திக் ராஜா இசையில் இந்தப் பாடலை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது.

”பூவே பூவே” - சாந்தனு, சாந்தினி நடிப்பில் சித்து +2 படத்தின் ஹிட் பாடல். இந்தப் பாடலின் குரல்கள் தான் பாட்டுக்கு ஹைலைட். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சின்மயி. இசை தரண் குமார்.

”முழுமதி முழுமதி” - ஜெய் நடித்த கனிமொழி படத்தின் பாடல். சதிஷ் சக்ரவர்த்தி இசையில் விஜய் ஏசுதாஸ், பெலா ஷெண்டே பாடிய பாடல்.

”பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்” - ஜீவா, பூஜா நடிப்பில் வெளியான பொறி படத்தின் பாடல். யுகபாரதி வரிகளில் இப்பாடலின் வரிகள் அனைத்தும் நமக்கு அத்துப்படி ஆனால் படம் அந்த அளவிற்கு வெற்றியில்லை. தீனா இசையில் மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ பாடிய பாடல்.

”காதலியே காதலியே” - ஜித்தன் படத்தின் சோகப் பாடல். ஸ்ரீகாந்த் தேவா இசையில் இந்தப் பாடத்தின் இந்த சோக கீதம் இப்போதும் காதல் தோல்வி பாடல்களின் ஹிட் லிஸ்ட். ஆனால் படம் பெரிதாக போகவில்லை.

”காதலை யாரடி முதலில்” - தகதிமிதா படத்தின் பாடல். இப்படத்தின் மற்ற பாடல்கள் எங்கே போனதென்று தெரியாது. ஆனால் இந்தப் பாடல் செம ஹிட். டி.இமான் இசையில் ஹரிஹரன், மாதங்கி பாடிய பாடல். 

”யார் இவளோ யார் இவளோ” - பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ஹீரோவாக நடித்த த்ரில்லர் படமான ”விகடன்”... இந்தப் பாடல் மட்டும் நல்ல ஹிட் ரகம். படம் வந்ததே பலருக்கும் தெரியாது.

”ஒரு சுடர் இரு சுடர்” - விஜய்யும் , அஜித்தும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படப் பாடல். இந்தப் பாடல் ஹிட். ஆனால் இப்படி ஒரு பாடல் அந்தப் படத்தில் இருப்பது பலருக்கும் ஏன் விஜய், அஜித் ரசிகர்கள் சிலருக்கே தெரியாத ரகசியம்.

”சொல்லாயோ சோலைக்கிளி ”- அல்லி அர்ஜுனா படத்தின் வரவேற்பு நாமறிந்ததே. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் பாடல் என்ன ஒரு ஹிட் என்பது மெலோடிப் பிரியர்களின் கற்பனைக்கே விட்டுவிடலாம். இந்தப் பாடலுக்கு குரல் எஸ்.பி.பி என்பது மற்றொரு சிறப்பு.

”நான் போகிறேன் மேலே” - பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளியான ”நாணயம்” படப் பாடல். இப்படத்தின் இந்த் ஒரு பாடல் மட்டும் நம் ஐபேட் சாய்ஸில் இருக்கும். எஸ்.பி.பி , சித்ரா பாடிய இப்பாடலுக்கு இசை ஜேம்ஸ் வசந்தன்.

”சாமி கிட்ட சொல்லிப்புட்ட” - ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் படத்தின் பாடல். படம் பெரிதாக போகவில்லை. ஆனால் இந்தப் பாடலில் மனம் போகாமல் இருந்ததில்லை. யுவன் இசையில் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.

- ஷாலினி நியூட்டன் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close