Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’என் முகத்துக்கு நெகடிவ் ரோல்தான் செட் ஆகுது!” - ’யாரடி நீ மோகினி’ பரத்

‘அரசி’  சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி ‘பொம்மலாட்டம்’ சீரியலில் பாஸிடிவ் ரோலில் பெயர் வாங்கினார். இன்று "யாரடி நீ மோகினி" சீரியலில் மருது கேரக்டரில் வில்லனாக வெளுத்து கட்டிக் கொண்டிருக்கிறார் சின்னத்திரை நடிகர் பரத். பார்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் அவருடன் ஒரு ஜாலி பேட்டி:  

யாரடி நீ மோகினி பரத்

எப்படி மீடியா வாய்ப்பு கிடைச்சது..?

என்னோட பிரண்ட்ஸ் மீடியாவுல இருக்காங்க. அவங்க கூட சும்மா சூட்டிங் ஸ்பாட்டுக்கு போவேன். அங்க வச்சு என்னை பார்த்துட்டு சினிமாவுல நடிக்க கூப்டாங்க. சினிமாவுல ஹீரோவா ஒரு படம் பண்ணேன். ஆனா அது அந்த அளவுக்கு ரீச் ஆகல. பிறகு பாலசந்தர் சார் இயக்குற சீரியலுக்கு வாய்ப்பு கிடைச்சது. அங்க இருந்து தான் இயக்குநர் சமுத்திரக்கனியுடைய அறிமுகம் கிடைச்சது. சமுத்திரக்கனி இயக்கத்துல "அரசி" சீரியல்ல நடிச்சேன். அந்த  சீரியல்தான் எனக்கு நடிகன்னு ஒரு அங்கீகாரம் கொடுத்துச்சு.

யாரடி நீ மோகினி சீரியல்ல சீனியர் ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு..?

 நான் கேமரா முன்னாடி நடிக்கும் போது யாரப்பத்தியும் கவலைப்பட மாட்டேன். எனக்கு என்ன தோணுதோ அதை பண்ணிடுவேன். பாத்திமா பாபு மேடம்ம நிறைய தடவை டிவியில பார்த்துருக்கேன். நேர்ல அவங்க கூட நடிக்கப் போறேனு கேள்வி பட்டதும் கொஞ்சம் படபடனு இருந்துச்சு. ஆனா, பாத்திமா மேடம் "நல்லா நடிக்கிறடா கண்ணா"னு பல முறை என்னை பாராட்டிருக்காங்க. அங்க சீனியர், ஜூனியர்னு எந்த பேதமும் இல்லாம எல்லாரும் ரொம்ப ஃபிரெண்ட்லியா பழகுவாங்க.

 

சிவகாசில ஒரு கேரக்டரா வந்தீங்க. அதுக்கு அடுத்து வெள்ளித்திரையில அவ்வளவா பார்க்க முடியலையே..?

சிவகாசிக்கு அடுத்து கொஞ்ச படங்கள்ள நடிச்சிருக்கேன். வெள்ளித்திரையில நடிக்கக் கூடாதுனு எண்ணம் இல்லை. வெங்கட் பிரபு சார் "பிரியாணி"க்கு முன்னாடி அவரோட படத்துல என்னை யூஸ் பண்றேனு சொல்லி இருந்தாரு. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை பண்ண முடியல. இனிமே ஏதாவது வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்.

பரத்

விருப்பப்பட்டு தான் நெகட்டிவ் ரோல் பண்றீங்களா..?

என்னோட முகத்துக்கு நெகட்டிவ் ரோல் தான் செட் ஆகும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா "பொம்மலாட்டம்" சீரியல்ல பாசிட்டிவ் ரோல் பண்ணேன். அதுல என்னோட நடிப்ப பார்த்துட்டு நிறைய பேர் என்னை பாராட்டினாங்க. மக்கள் என்னை அவங்க வீட்டு பிள்ளையா நினைக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் நெகட்டிவ் ரோல் பண்ண ஆர்வம் இல்லாம இருந்துச்சு. இப்போ மறுபடி யாரடி நீ மோகினி சீரியல்ல நெகட்டிவ் ரோல் பண்ண கூப்டாங்க. ஸ்டோரி நல்லா இருந்துச்சு அதான் நெகட்டிவ்கு ஓகே சொல்லிட்டேன்.

 

பல இடங்களில் டப்பிங் சீரியலுக்கு எதிரா பேசுறீங்களே..?

தமிழனை தமிழன் தான் அழிக்கிறான். டப்பிங் சீரியலினால் நிறைய தமிழ் கலைஞர்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படுது. தமிழ் தெரியாத நடிகர்களை தமிழ் சீரியலில் நடிக்க வைச்சு தமிழ் கலாச்சாரத்தையே மாத்த முயற்சி பண்றாங்க. வாயசைப்பே சரியா இல்லாதவங்கள நடிக்க வைக்கிறதுக்கு பதிலா திறமையான தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே..!! டப்பிங் சீரியலை ஒழிக்குறது தான் என்னோட லட்சியம்..அதுக்கான முயற்சியையும் நான் தொடர்ந்து எடுத்துட்டு தான் இருக்கேன்.

 

சமுத்திரக்கனி உங்களை பாராட்டினாராமே..?

அவரோட நாடகத்துல நடிச்சதுல இருந்து அவரு தான் என்னோட குரு.. ஒரு ரியாலிட்டி ஷோல "இவன் என்னோட பையன் ; அவனோட வளர்ச்சியை கண்ணால பார்க்குறேன் ; ரொம்ப பெருமையா இருக்குனு சொன்னாரு.." என்னோட வாழ்க்கையில அது மறக்க முடியாத பாராட்டு.. அவரு என்னை பாராட்டனும்னு அவசியமே இல்ல.. அது தான் அவரோட எளிமை..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close