Published:Updated:

" 'ராஜா ராணி' சீரியல்ல அந்த எமோஷனல் சீன்ல நடிக்கிறதுக்குள்ள..!” - பவித்ரா

" 'ராஜா ராணி' சீரியல்ல அந்த எமோஷனல் சீன்ல நடிக்கிறதுக்குள்ள..!” - பவித்ரா
" 'ராஜா ராணி' சீரியல்ல அந்த எமோஷனல் சீன்ல நடிக்கிறதுக்குள்ள..!” - பவித்ரா

" 'ராஜா ராணி' சீரியல்ல அந்த எமோஷனல் சீன்ல நடிக்கிறதுக்குள்ள..!” - பவித்ரா

விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியலில் பாசமான காதலியாக ரசிக்கவைத்த பவித்ரா, இப்போது கொடூர வில்லியாக மாறியிருக்கிறார். அவருடன் ஒரு காஃபி, சந்திப்பு! 

''படிச்சிட்டு இருக்கும்போதே மீடியாவுக்கு வந்துட்டீங்களே..?!" 

'' 'நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்'னு விஜய் டி.வியில ஒரு புரோகிராம் நடந்துச்சு. 'சரி ட்ரை பண்ணி பார்க்கலாமே'னு அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். ஒவ்வொரு ரவுண்டா செலக்ட் ஆகி முன்னேறினேன். நடுவுல ஒரு ரெண்டு மாசம் எந்தத் தகவலும் வரலை. நான் வழக்கம்போல காலேஜ் போயிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் விஜய் டி.வி-ல இருந்து போன் வந்துச்சு. 'ஆஃபீஸ் சீஸன் - 2' சீரியல்ல வாய்ப்புக் கொடுத்தாங்க. அப்படியே பிக் அப் பண்ணிட்டேன்!" 

'' 'சரவணன் மீனாட்சி' சீரியல்ல மாற்றுத்திறனாளியா நடிக்கிற அனுபவம் பற்றி..?" 

''ஆரம்பத்துல, அந்த கேரக்டருக்கு நிறைய தயங்கினேன். வாக்கிங் ஸ்டிக் வெச்சு நடிக்கிறது சிரமமில்லை, ஆனா அந்த வாழ்க்கையோட வலியை நடிப்புல வெளிப்படுத்தணுமேனு யோசிச்சேன். அப்புறம் செட் ஆகிட்டேன். ஷூட்ல அந்த ஸ்டிக்கை வெச்சு நடக்கும்போது வலிக்கும். இப்போ வெளியில் அந்த ஸ்டிக் வெச்சு நடக்கும் மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும்போதெல்லாம், சட்டுனு கண்கள் கடந்துடாது. 'ஒரு டேக் எடுக்கவே நமக்கு கை வலிக்குதே... இவங்க வாழ்நாள் முழுக்க இந்த வலியைச் சுமக்குறாங்களே'னு கவலையா இருக்கும்.''

'' 'ராஜா ராணி' சீரியல்ல பவித்ராவை முதல் முறையா நெகட்டிவ் ரோல்ல பார்க்குறோம்...'' 

''என்னை அந்த நெகட்டிவ் ரோல்க்காக கேட்டப்போ, சிரிப்புதான் வந்தது. ஏன்னா, நான் அமைதியான பொண்ணு. யார்கிட்டயும் நானா போய்க்கூட பேச மாட்டேன். என்னால எப்படி நெகட்டிவ் ரோல் பண்ண முடியும்னு நினைச்சேன். 'ஒரே மாதிரி நடிச்சா போர் அடிச்சிடும்... இப்படி எல்லா கேரக்டர்களிலும் நடிச்சாதான் கலர்ஃபுல்லா இருக்கும்'னு எல்லோரும் சொன்னாங்க. ஓ.கே சொன்னேன். என் முகத்துக்கு இந்த நெகட்டிவ் ரோல் செட்டாகுதா மக்களே?! நீங்கதான் சொல்லணும்..!" 

''நெகட்டிவ் ரோல் கமென்ட்ஸ் என்னவெல்லாம் வந்தது..?"

''ஃப்ரெண்ட்ஸ்தான் மாறி மாறி போன் பண்ணினாங்க. 'காலேஜ்ல நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருப்ப. இப்போ உன்னையும் வில்லி ஆக்கிடுச்சே இந்த சின்னத்திரை! சொல்லப்போனா, உன்னை நெகட்டிவ்வா காட்ட ஆரம்பிச்சப்போ, 'சேச்சே... பவித்ரா இந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டா... அப்புறமா மனசு மாறிடுற மாதிரி காட்டிடுவாங்க'னு நினைச்சோம். ஆனா, நீ பிறவி வில்லி மாதிரி நடிப்புல கலக்குறியேடி!'னு கலாய்ச்சுட்டும், உற்சாகப்படுத்திட்டும் இருக்காங்க!"

''இன்னும் நீங்க ஸ்டூடன்ட்தானாமே?"

''ஆமாங்க... இப்போதான் தொலைநிலைக் கல்வியில எம்.பி.ஏ முடிச்சிருக்கேன். அடுத்து எம்.ஃபில் படிக்கப் போறேன். படிக்குறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நடிப்புக்காக படிப்பை விடமாட்டேன்!" 

''சினிமா ஆர்வம் இருக்கா?!"

''ஆசை நிறைய இருக்கு. ஆனா எங்க வீட்டுல மீடியாவுக்கு வந்திருக்கிற முதல் ஆள் நான்தான். அதனால எனக்கு அதுக்கான கான்டாக்ஸ்லாம் தெரியாது. ஏதாச்சும் ஆஃபர் வந்தா, அந்தக் கதை பிடிச்சிருந்தா நடிப்பேன்!" 

''ஷூட்டிங் அனுபவங்கள்?!"

'' 'ராஜா ராணி' சீரியல்ல ஒரு சீன்ல, என் காதலருக்கு அவங்க வீட்டுல வேலை பார்க்குற பொண்ணுகூட கல்யாணம் நடக்கும். அப்போ நான் கல்யாண மண்டபத்துல அழுது, கத்தி சண்டை போடுவேன். அந்த சீனை பேப்பர்ல படிக்கும்போதே அழுதுட்டேன். பெர்சனலா நான் ரொம்ப ஃபீல் பண்ணி நடிச்ச காட்சி அது!" 

''ஃபீல் அதிகமா இருக்கே... நீங்க கமிட்டடா..?"

''ஹைய்யோ அதெல்லாம் இல்லைங்க. நிறைய லவ் புரொப்போசல்ஸ் வந்துருக்கு. ஆனா, எனக்கு யாரையும் பிடிக்கல. இப்போதைக்கு சீரியல், படிப்பு ரெண்டில்தான் என் கவனம்!" 

''உங்க வார்ட்ரோப் கலெக்‌ஷன் எப்படியிருக்கும்?" 

''எனக்கு விதவிதமா கம்மல் போடுறது ரொம்பப் பிடிக்கும். 15 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை நிறைய நிறைய வாங்கி அடுக்கி வெச்சிருக்கேன். சீரியல்ல நீங்க பார்ப்பீங்களே... நல்லாயிருக்கா?!"

அடுத்த கட்டுரைக்கு