என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சேனல் செய்திகள்!

க.நாகப்பன்படங்கள் : ப.சரவணகுமார்

ரஜினி ரெடியா?

சேனல் செய்திகள்!

சந்த் டி.வி-யில் தொகுப்பாளினி ப்ளஸ் செய்தி வாசிப்பாளர் என டபுள் ரோல் ஆக்ஷனில் அசத்தும் மகாலட்சுமி, இதற்கு முன் ஆல் இண்டியா ரேடியோ ஆர்.ஜே-வாக இருந்தவர்!

 '' 'ஆச்சியுடன் பேச்சு’னு 26 வாரம் ஷோ பண்ணேன். எந்தக் கேள்விக்கும் ஜாலியாப் பதில் சொல்லி நம்மைச் சிரிக்கவெச்சுட்டே இருக்கும் ஆச்சியின் அன்புக்கு நான் அடிமை! கமல், விஜய், சூர்யானு பலரைப் பேட்டி எடுத்துட்டேன். ரஜினி மட்டும் மிஸ்ஸிங். அவர்கிட்ட இதுவரை யாரும் கேட்காத எக்கச்சக்க கேள்விகளைத் தயாரா வெச்சிருக்கேன். வாய்ப்பு கிடைச்சா, ஏழெட்டு ஸ்கூப் நியூஸுக்கு விஷயம் வாங்கிருவேன்!''- என்று சிரிக்கிறார் மகாலட்சுமி.

லைஃப் ஸ்டைல் மாறணும்!

சேனல் செய்திகள்!

UFX சேனலின் ரொசெல்லாரோவைப் பார்த்தால், டிஸ்கொதெ பார்ட்டிபோலத் தெரியும். ஆனால், மிஸ்ஸுக்கு சமூக சேவை மேல் தீராக் காதல்!  

''சென்னை, பெங்களூரு சேரிப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுத்து, அவங்க லைஃப் ஸ்டைலை மாத்தணும். நல்லாப் படிக்கவெச்சு, ஃபேஷன், மீடியா உலகத்தின் வாய்ப்புகளை அவங்களுக்கு அறிமுகப்படுத்தணும். என் ஐந்து வருஷ மாடலிங் அனுபவத்தில் 10 மாடல்களையாவது உருவாக்கணும். இதுதான் என் ஆசை!'' என்பவருக்குத் தினமும் பட வாய்ப்புகள் மொபைல் தட்டுகின்றனவாம். ஆனால், இப்போதைக்கு அந்த அழைப்புகளுக்கு கால் டைவர்ட் என்கிறது ரசகுல்லா ரோசா... ஸாரி... ரொசெல்லா!

நல்லா வருவீங்ணா!

சேனல் செய்திகள்!

க்கள் தொலைக்காட்சியின் 'கொஞ்சம் அரட்டை... நிறையவே சேட்டை’ செய்யும் இமான், தூத்துக்குடி ஏரலைச் சேர்ந்தவர்!  

'' 'கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி கொடுத்த அடையாளம் சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது. 'வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யோடு நடிச்சப்ப, நான் பேசுறதைப் பார்த்துட்டு, பக்கத்துல கூப்பிட்டுவெச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார் விஜய். கிளம்பும்போது, 'நல்லா வருவீங்ணா’னு வாழ்த்தினார். ஒரு நாள் சௌம்யா அன்புமணி மேடம் போன்ல பேசினாங்க, 'நிகழ்ச்சி நல்லா இருக்கு. யாருக்குமே இது மாதிரி கேள்வி கேட்டா கோபம் வந்துடும். ஆனா, நீங்க எல்லாரையும் சமாளிச்சுச் சிரிக்கவெச்சுடுறீங்க’னு பாராட்டினாங்க. கைகலப்பு ஆகாம கலகலப்பு பண்றதுதானே வித்தைக்காரனுக்கு அழகு'' என்று சிரிக்கும் இமானுக்கு, ஆஸ்திக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றுமாக இரண்டு குழந்தைகள்!

வேட்டை ஆரம்பம் டோய்!

சேனல் செய்திகள்!

பூஜா, இனி 'எஸ்.எஸ். மியூஸிக்’ பூஜா நஹி! ராஜ் டி.வி-க்குத் தாவிவிட்டது இந்தப் பட்டாம்பூச்சி.

''நான், கிரேக் ரெண்டு பேருமே எஸ்.எஸ். மியூஸிக்ல இருந்து விலகிட்டோம். கிரேக் ஒரு புது சேனலுக்கு கிரியேட்டிவ் ஹெட்டா இருக்கார். நான் ராஜ் டி.வி. 'தமிழ் பேசும் கதாநாயகி’ நிகழ்ச்சிக்கு காம்பியரர். வசனம் பேசும் திறமை, டான்ஸ், நடிப்புனு பல டெஸ்ட் வெச்சு, தமிழ் சினிமாவுக்கு அழகான தமிழ் பேசும் கதாநாயகிகளைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கப்போறோம். வேட்டை... வேட்டை... ஆரம்பம் டோய்!'' - டிரேட் மார்க் உற்சாகப் புன்னகை பூக்கிறது பூஜாவின் இதழ்களில்!

பாப்பாவுக்கு வெயிட்டிங்!

சேனல் செய்திகள்!

'இமயம் டி.வி.’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீதர் வீட்ல விசேஷம்! பெங்களூரில் கேட்டரிங் டிப்ளமோ முடித்தவர், இமயத்துக்காக இது வரை சூர்யா, பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட 500 பிரபலங்களைப் பேட்டி எடுத்திருக்கிறார். ''ராஜ் மியூஸிக்ல இருந்து இமயத்துக்கு வந்த ஹேமாவதி என் இதயத்தில் இடம் பிடிச்சுட்டாங்க. கண்ட நாள் முதலே காதல். 10 மாசம் முன்னாடி கல்யாணம். இப்போ அவங்க அஞ்சு மாசமா இருக்காங்க. எங்க குழந்தையை எங்களைவிடப் பெரிய மீடியா ஸ்டார் ஆக்கணும். அதுதான் எங்க கனவு!''- அட்வான்ஸாகவே அப்பா பாசத்தில் திளைக்கிறார் ஸ்ரீதர்.