Published:Updated:

பியான்ஸே நோல்ஸ் - ஹிட்ஹாட் வீடியோஸ்

பியான்ஸே நோல்ஸ் - ஹிட்ஹாட் வீடியோஸ்

கடும் உழைப்பும் தணியாத ஆர்வமும் இருந்தால் எவராலும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடிக்கலாம் என்பதற்கு பியான்ஸே நோல்ஸின் வாழ்க்கை ஒரு உதாரணம்!

பியான்ஸே இசைப் பயணத்தின் ஹைலைட் வீடியோக்கள் இங்கே..!

பியான்ஸே குழுவின் No No No 2 ஆல்பத்தை 'யெஸ் யெஸ் யெஸ்’ என அமெரிக்கர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.  

பியான்ஸேவின் பதினாறாவது வயதில் டெஸ்டினிஸ் சைல்ட் ஆல்பம் வெளியாகி, அரை மில்லியன் காப்பிகள் விற்று அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு பாதை அமைத்தது.

Bootylicious பாடலில் பியான்ஸேவின் 'பின்னசைவு’ நடனம், அந்தச் சொல் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுமளவு பிரபலமானது.

பிரசவத்துக்குப் பின் ஒரே மாதத்தில் உடல் எடையை எல்லாம் குறைத்துக் கொண்டு பியான்ஸே, அடுத்தடுத்த வேலைகளில் களமிறங்கினார்.  ஐந்தாவது ஆல்பம் Beyoncé  அதிரிபுதிரி ஹிட்..!

பியான்ஸே தன் வாழ்க்கையிலிருந்து சொல்லும் பாடம் இதுவே:

'நீ முதலில் உன்னை உயர்வாக எண்ண வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள். உன் குறைபாடுகளை மறந்துவிடு. தன்னம்பிக்கையே மூலதனம். எப்போதும் தன்னம்பிக்கைதான் பெண்ணின் நிஜ அழகு.’

அடுத்த கட்டுரைக்கு