Published:Updated:

`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைத் தடைசெய்ய கோரிக்கை!

`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைத் தடைசெய்ய கோரிக்கை!
`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைத் தடைசெய்ய கோரிக்கை!

நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்துள்ள, `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தடைசெய்ய வேண்டுமென சீர்மரபினர் நலச்சங்கத்தினர் இன்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து சீர்மரபினர் நலச்சங்கத்தினரிடம் பேசினோம், "பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் வகையில், காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இது, சட்டப்படி குற்றமாகும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரமுடன் போராடியவர்களை ஒடுக்குவதற்காகவும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும், குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரை என அடையாளப்படுத்திவந்தனர். இது ஒரு கொடுமையான விஷயம் என்று பல தலைவர்கள் போராட்டம் நடத்தி, குற்றப்பரம்பரைச் சட்டத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின்பு, சுதந்திர இந்தியாவில் குற்றப்பரம்பரையாகக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், கல்வி, வேலை வாய்ப்பில் பங்குபெறும் வகையில் சீர்மரபினராக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை அந்தச் சமூகத்தின்மீது பயன்படுத்தக்கூடாது என்று ஐ.நா மன்றமே உத்தரவிட்டு இந்திய அரசுக்கு அனுப்பியது.

`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைத் தடைசெய்ய கோரிக்கை!


இந்தியாவில் குற்றப்பரம்பரையாகக் கருதப்பட 200-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில், `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. பிறப்பால் ஒருவன் குற்றவாளியாகிறான் என்று சித்திரிப்பது, சமூக அநீதியாகும். இந்தப் புரிதல் இல்லாமல் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இதை ஊடகங்களும் பாராட்டி எழுதுகின்றன. எல்லா சாதியிலும் மோசமானவர்களும் இருக்கிறார்கள் நல்லவர்களும் இருக்கிறார்கள். அதனால், இப்படத்தில் குற்றப்பரம்பரையினர் என்று வரும் வசனங்களையும் அதைக் குறிக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டுமென்று படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தற்போது கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லையென்றால், உயர் நீதிமன்றத்துக்கு செல்வோம்" என்றனர்.