Published:Updated:

மதுரையில் சங்கமம் ஆகும் 16 வயதினிலே கூட்டணி!

மதுரையில் சங்கமம் ஆகும் 16 வயதினிலே கூட்டணி!
மதுரையில் சங்கமம் ஆகும் 16 வயதினிலே கூட்டணி!

மதுரையில் சங்கமம் ஆகும் 16 வயதினிலே கூட்டணி!

பொம்மலாட்டம்' படத்தினைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கி இருக்கும் படம்  'அன்னக்கொடியும் கொடிவீரனும்'.

புதுமுக நடிகர் லட்சுமண், 'கோ' கார்த்திகா, மனோஜ் மற்றும் பலர் நடித்து  இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா தயாரித்து  இயக்கி இருக்கிறார்.

##~~##
இப்படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு  இருக்கிறார் பாரதிராஜா. '16 வயதினிலே' படக்கூட்டணியான ரஜினி, கமல், ஸ்ரீதேவி  ஆகியோரைக் கொண்டு இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
மூவரிடமும் தேதிகள் கேட்டு இருக்கிறார்கள். விரைவில் மூவரும் கலந்து கொண்டு  'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தின் இசை வெளியிட இருக்கிறார்கள்.

தேதி கிடைத்துவிட்டால் '16 வயதினிலே' கூட்டணி மதுரையில் சங்கமமாகும்.

பின் செல்ல