Published:Updated:

'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்

'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்
'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்

'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்

மே-7ம்தேதி நடக்க இருக்கும் 'காலா' ஆடியோ நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு பரபரப்பாக விநியோகிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். 'எந்திரன்' படத்தின் ஆடியோ விழாவைச் சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக கொண்டாடினர். அடுத்து 'லிங்கா' படத்தின் ஆடியோ வெளியீட்டைச் சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தினர்.  முன்பு நடந்த இரண்டு சினிமா நிகழ்ச்சிகளும் தனி அரங்கில் நடத்தப்பட்டபோது சினிமா மற்றும் உலக புள்ளிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இப்போது 'காலா' படத்தின் ஆடியோ விழா முதன்முதலாகப் பொதுவெளியில்  ரஜினி ரசிகர்கள் முன்னிலையில், பொதுமக்கள் மத்தியில் நடப்பதைச் சினிமா உலகமும், அரசியல் உலகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறது. 

'காலா' பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்

வழக்கமாகத் தனது படத்தின் நிகழ்ச்சிகளை சிம்பிளாக நடத்தும் எண்ணம் கொண்டவர் ரஜினி. 'கபாலி வெற்றி விழாவைச் பிரம்மாண்டமாக கொண்டாட 'கலைப்புலி' தாணு விருப்பம் தெரிவித்தார்.  அப்போது ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் 'இப்போதுள்ள சூழ்நிலையில் என் படத்துக்கு பாராட்டு விழா நடத்துவது சரியல்ல' என்று தவிர்த்து விட்டார், ரஜினி. இப்போது ' அங்கிள் 'காலா' படத்தோட ஆடியோ ஃபங்ஷனை பப்ளிக்ல பிரம்மாண்டமா நடத்த ஆசைப்படறேன்' என்று தயாரிப்பாளர் தனுஷ் சொல்ல, மறுப்பேதும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டிவிட்டார், ரஜினி. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில்  பிரம்மாண்ட மேடை அமைக்கும் வேலையில் களமிறங்கி உள்ளனர். 'காலா' மேடையின் நடுவில் பிரம்மாண்டமான எல்ஈடி டிவி வைக்கப்படுகிறது. அதில் 'காலா' படத்தின் போட்டோக்களை ஸ்கிரீனில் காட்டுகின்றனர். அடுத்து 'காலா'வில் பாடல்கள் பாடியுள்ள பாடகர்களை அழைத்து மேடையில் ஒரு பக்கத்தில் இசைக்கச்சேரி நடத்துகின்றார். அப்போது மேடையில் நடுவே இரண்டு பாடல்களுக்கு நடன மாஸ்டர் பிருந்தாவும், இரண்டு பாடல்களுக்கு நடனமாஸ்டர் சாண்டியும் தன் குழுவினரோடு நடனம் ஆடுகின்றனர்.  'காலா' படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை விஜய்டிவி ஒளிபரப்புகிறது. 

அடுத்த கட்டுரைக்கு