பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா திருமணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கவிருப்பதையொட்டி, பாலிவுட் உலகமே விழாக்கோலத்தில் இருக்கிறது. கடந்த சில நாள்களாகவே, இதையொட்டிய பதிவுகள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை, சோனம் கபூருக்கு மெஹந்தி வைக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், மும்பையில் இன்று நண்பகல் திருமணம் நடக்கவிருக்கிறது.
PC: www.instagram.com/dolly.jain/
பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கும் இந்தத் திருமணம் பற்றியும், சோனம் கபூர்-ஆனந்த் அஹூஜா பற்றியும் சில சுவாரஸ்யத் தகவல்கள்!
* ஆனந்த் அஹூஜாவும் சோனம் கபூரும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தாலும், ஊடகங்களில் இவர்களைப் பற்றிய செய்திகள் வெளிவரும்போதெல்லாம் இருவருமே அமைதி காத்துவந்தனர். 'நான் ஊடகங்களில் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசமாட்டேன்' என்றார் சோனம் கபூர். தன் சமூகவலைதளப் பக்கங்களில், மிகச் சமீபத்தில்தான் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்தார்.
*ஆனந்த் அஹூஜா, ‘பானே’ என்ற டெக்ஸ்டைல் பிராண்டின் உரிமையாளர். 2012-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த், அமெரிக்காவில் அறிவியல், எக்கனாமிக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் படித்தவர், எம்.பி.ஏ முடித்தவர்.
PC: www.instagram.com/karanjohar/
* இந்த ஜோடி, திருமண அழைப்பிதழ்கள் எதுவும் அச்சடிக்கவில்லையாம். காகிதங்களை வீணடிக்கக்கூடாது என்ற கொள்கையுடன், எல்லோருக்கும் இ-அழைப்பிதழ் அனுப்பியிருக்கின்றனர்.
* மெஹந்தி நிகழ்ச்சியில், பிரபல டிசைனர் அனுராதா வகில் வடிவமைத்த ‘பீச்’ நிற லெஹங்காவை அணிந்திருந்தார் சோனம். ஆனந்த் அஹூஜா குர்தா மற்றும் நேரு கோட் அணிந்திருந்தார்.
* மெஹந்தி நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளை அணிந்திருந்தனர். பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர், கரண் ஜோஹர், நடிகை ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* பாலிவுட்டில் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உடை அணிந்து அசத்துபவர் சோனம். இவரது திருமண உடையை வடிவமைத்திருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிடமும் எழுந்தது. இந்நிலையில், பிரபல பிரிட்டன் டிசைனர் பிராண்ட் ரால்ஃப் அண்ட் ரூசோ, இவரின் திருமண உடையை வடிவமைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிசைனர்தான், இம்மாதம் 19-ம் தேதி நடக்கவிருக்கும், பிரிட்டன் இளவரசர் ஹாரி - மார்கேலின் திருமண உடையையும் வடிவமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
via: twitter.com
* இன்று காலை, மும்பையிலுள்ள பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும், மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.
* திருமணம் நடந்துமுடிந்த பிறகு, சோனம் கபூர் பங்கேற்கும் கேன்ஸ் விழா, 'வீரே தி வெண்டிங்'கின் விளம்பர வேலைகள், ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஏசா லாகா’ மற்றும் 'தி சோயா ஃபாக்டர்' திரைப்படங்களின் ஷூட்டிங் என அடுத்தடுத்த வேலைகளில் செம்ம பிசி மேடம். அதனால், அவர்களின் ஹனிமூன் திட்டத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்திருக்கின்றனர். கேன்ஸ் விழா வரும் 14, 15-ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இதில் ஆனந்த் அஹூஜா கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவித்திருக்கிறார் சோனம் கபூர்.
* திருமணத்துக்குப் பிறகு, ஆனந்த் அஹுஜா சோனம் கபூருக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். 'படுக்கையறையில் இருவரும் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது' என்பதுதானாம் அது!
அட!