Published:Updated:

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2
ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

சீனியர்களால் இன்னமும் உருப்படியாக எதையும் ‘பற்ற வைக்க’ முடியாத சுவாரஸ்யமின்மை பிக்பாஸ் வீட்டில் நீடித்தாலும் ‘கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க்கின் தொடர்ச்சியும் ‘ஃபினாலே (என்னவொரு விநோதமான வார்த்தை!) டிக்கெட்’டிற்கான டாஸ்க்கும் இன்றைய நிகழ்ச்சிக்குச் சற்று சுவாரஸ்யத்தை அளித்தன. 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

மிக முக்கியமாக, ‘இந்த வார நாமினேஷனுக்கு’ என்று சொல்லி சென்றாயனை ஏமாற்றி விட்டார் என்று ஐஸ்வர்யாவின் மீதிருந்த அவப்பழி அழுத்தமாகத் துடைக்கப்பட்டது. இதைப் பற்றி அந்தந்த நாள்களின் கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். ‘அடுத்த வாரம் –னு சொல்லலை. இந்த வாரம்-னு ஐஸ்வர்யா மாத்திச் சொன்னாங்க. பொய்யைச் சொல்லிட்டு அதை அப்படியே தக்க வைச்சாங்க’ என்று கமல் முன்பு மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிய ரித்விகாவும் ஜனனியும் சம்பந்தப்பட்ட குறும்படத்தைப் பார்த்தவுடன் வெட்கச் சிரிப்புடன் அப்படியே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தானாகவே முன்வந்து ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. காயத்ரி சொன்ன பிறகு ஜனனி மன்னிப்பு கேட்டார். ரித்விகா கேட்கவில்லை. இதைப் பற்றிய மெல்லிய குற்றவுணர்ச்சியோடு பிறகு இருவரும் பேசிக் கொண்டதோடு சரி. 

நினைவுப்பிசகினால் அவர்கள் அப்படிச் சொன்னது கூட மன்னிக்கக்கூடியது. ஆனால் வீடியோவை நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் கமல் கூட இதை தவறவிட்டது முறையானதல்ல. இத்தனைக்கும் இதே குறும்படம் அந்த வாரத்தில், அவர் முன்பே ஒளிபரப்பானது. இந்த வாரத்தின் இறுதியிலாவது கமல் இதைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்ப்போம். 

**

88-ம் நாள் தொடங்கியது. நேற்று விஜய் பாட்டு போட்டால் இன்று அஜித் பாடல் போடுவதுதானே மரபு. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘வீர விநாயகா’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பானது. வாசலில் கோலமிட்டு, பிக்பாஸ் தந்திருந்த அழகிய பிள்ளையாரை வைத்து மக்கள் வழிபட்டார்கள். ‘நான் யாரு.. நான் யாரு..’ என்ற பாடல் ஒலிக்க, ஹெல்மேட் அணிந்த ஓர் ஆசாமி பைக்குடன் உள்ளே நுழைந்தார். மக்கள் பக்திப்பரவசத்துடன் பூஜை செய்ததில் பிள்ளையாரே பைக்கில் வந்துவிட்டாரோ என்று நினைத்தேன். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

‘கணேஷா இருக்குமோ?” என்று பாலாஜி தவறாகக் கணிக்க, ‘இது ஆரவ்தான்’ என்று பெண்கள் அணி மிகச்சரியாகக் கண்டுபிடித்தது. ஆரவ்வுடன் பழகிய சீஸன் ஒன்று போட்டியாளர்கள் மட்டுமல்ல, யாஷிகா உள்ளிட்ட சீஸன் இரண்டு போட்டியாளர்களும் சரியாகக் கண்டுபிடித்ததில் ஆரவ்வின் புகழ் தெரிகிறது. யாஷிகாவை அருகே பார்த்ததில் பயந்து போனாரோ, என்னமோ, ‘பிக்பாஸ், இவங்களுக்கு மேக்கப் பொருள்களையெல்லாம் திருப்பிக் கொடுங்களேன், பாவம்” என்று இரக்கப்பட்டார். குசல விசாரிப்புகள் முடிந்ததும், மும்தாஜின் பீறிட்ட அழுகை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ‘கேள்விக்கென்ன பதில்’ டாஸ்க் மீண்டும் தொடங்கியது. 

மும்தாஜ் தொடர்பான டாஸ்க் ரித்விகாவுக்கு அளிக்கப்படுவதும், அவர் மும்தாஜிடம் சென்று ‘ஊத்தப்பம் எப்படித் தயாரிக்கப்பட வேண்டும்’ என்பதை வர்ணித்து விதம் விதமாக கன்வின்ஸ் செய்ய முயல்வதும், அதை மறுத்து ‘மாஸ்டர் ஊத்தப்பம்’ என்று ஒரே வார்த்தையில் மும்தாஜ் விஷயத்தை முடிப்பதுமான காட்சிகள் ஒளிபரப்பாகின. 

‘டெலிபோன் ஆசாமி, இந்த டாஸ்க் ‘மும்தாஜூக்கு என்று சொன்னதும் நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?” என்று விநோதமான கோணத்தில் ஒரு கேள்வியை ரித்விகாவின் முன்வைத்தார் வையாபுரி. ‘அவங்களை எப்படி ஒத்துக்க வைக்கறது –ன்ற தயக்கம்தான் அப்படிச் சிரிப்பா வந்தது’ –என்பது போல் ரித்விகா சொல்வார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு மாறாக, ‘பச்சை வண்ணத்தில் அவரது தலைமுடியைக் கற்பனை செய்து பார்த்தேன்” என்று எதிர்பார்க்கவே முடியாத பதிலைச் சொன்னார் ரித்விகா. ராஜமாதாவை அப்படிக் கற்பனை செய்து பார்த்தால் ‘ஹாரர்’ காமெடியாகத்தான் இருக்கிறது. 

“இந்த விஷயத்துல மும்தாஜ் சரியா விளையாடினாங்க. ஐஸ்வர்யா ஸ்மார்ட்டா விளையாடினாங்க. நாமினேஷன்-ன்றது வழக்கமான விஷயம்தான். ‘நல்ல பேர் வாங்கறதுக்காக மத்தவங்க இதைச் செஞ்சீங்க. அது தேவையில்லை” என்கிற நிதர்சனமான உண்மையைப் போட்டு உடைத்தார் காயத்ரி. ஒரு விளையாட்டை இத்தனை மன அழுத்தத்துடன் ஆடத் தேவையில்லை என்பது அவரது வாதம். “எல்லோருக்கும் டாஸ்க் முடிச்சு கடைசியாத்தான் எனக்கு வந்தது. வீடே எனக்கு எதிரா ஒண்ணு கூடி என்னை கன்வின்ஸ் செய்யப் பார்த்தாங்க. என் மேல் ஏற்கெனவே நிறைய அவப்பழிகள் இருக்கின்றன. ஆனால் என்னால் அந்த டாஸ்க்கை செய்ய முடியலை-ன்றதுதான் உறுதியான பதில்” என்பது போல் சொன்னார் மும்தாஜ். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

“தியாகம் செய்யறதுதான் அந்த டாஸ்க்கோட முக்கியமான விஷயம். அதுக்காக மும்தாஜ் செஞ்சிருக்கலாம்” என்று லாஜிக்காக மடக்கினார் விஜி. ஆனால், ‘உத்தி என்கிற அளவில் ஸ்மார்ட்டாக விளையாடியது மும்தாஜூம் ஐஸ்வர்யாவும்தான்” என்று மறுபடியும் சொன்னார் காயத்ரி. இதன் மூலம் கமல் அத்தனை தூரம் ஆவேசப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக நின்றார் காயத்ரி. அந்தத் துணிச்சலுக்குப் பாராட்டு. 

இதற்குப் பிறகு சீஸன் 1-ல் ரணகளமாக நிகழ்ந்த ‘பலூன் ஒட்டும் டாஸ்க்’ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் சிநேகனுக்கும் சுஜாவுக்கும் நடந்த குடுமிப்பிடி சண்டைகள் ஆவேசமாக இருந்தன. “எங்களுக்கெல்லாம் புத்திமதி சொன்னீங்களே?” என்பது மாதிரி வந்து நின்றார் பாலாஜி. ‘இங்க எல்லோருமே பலத்தை நிரூபிக்க வந்திருக்கோம். இந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும் அன்பு –ன்றது பலவீனம். அறிவு –ன்றது பலம்” என்பது போல் தத்துவார்த்தமாக பதில் சொன்னார் சிநேகன். (இதெல்லாம் உடனே புரியாது. வீட்டுக்குப் போய் யோசிச்சாதான் புரியும். எம்.ஏ. பிலாஃஸபி!). ‘எனக்கும் டாஸ்க்ல வெறியிருக்கு. கச்சேரியை வெச்சுக்கறேன்” என்று வழக்கமான வெட்டி வீறாப்புடன் கிளம்பினார் பாலாஜி.

அடுத்ததாக, ‘இந்த வாரம்’ என்று ஐஸ்வர்யா பொய் சொன்னதாகச் சொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான காட்சி. ‘அடுத்த வாரத்துக்குத்தான் நாமினேஷன்’ என்று ஐஸ்வர்யா சொல்லுவதும் ஜனனி குழப்பிய பிறகே ஐஸ்வர்யாவும் குழம்புவதும் காட்டப்பட்டன. ‘நான் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன். பொய் சொல்லணும்னு நெனக்கல’ என்று இதற்கான விளக்கத்தைச் சொன்னார் ஜனனி. 

‘அன்றும் – இன்றும்’ என்ற தலைப்பில் இரண்டு சீஸன்களிலும் நடந்த கொடூரக்காட்சிகள் ஒளிபரப்பாகின. முதல் சீஸனில் ஆர்த்தி மற்றும் கணேஷுகு நடக்கும் சிறப்பு அபிஷேகக் காட்சிகள் ரணக்கொடூரமாக இருந்தன. சீஸன் இரண்டில் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டும் காட்சி வந்தது. இரண்டையும் ஒப்பிடும் போது எல்.கே.ஜி வகுப்பையும் பிஎச்டி வகுப்பையும் எட்டிப் பார்த்தது போல் இருந்தது. குப்பையை அகற்ற வந்தவர்களை ‘ஹீரோ’ போன்ற பாவனையுடன் பாலாஜி துரத்தியதை ஆர்த்தி கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். ‘அடிச்சாச்சுல..இனி ஒரு பய என் முன்னாடி நிக்கக் கூடாது. கிளம்புங்க’ என்கிற வடிவேலு காமெடியை ஆரவ் நினைவுகூர்ந்தார். வெட்கச் சிரிப்புடன் அமர்ந்திருந்தார் பாலாஜி. “பாராட்டுகள். நீங்க பண்ணின டாஸ்க் எல்லாம் சத்தியமா என்னால பண்ண முடியாது” என்று சீனியர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் மும்தாஜ். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

தான் ஒரு ஐஸ்வர்யா ஆதரவாளர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார் காயத்ரி. ஓவியாவைக் குறிப்பிட்டு முன்பு மறைமுக டிப்ஸ் தந்தார். ஐஸ்வர்யா ஸ்மார்ட்டாக விளையாடினார் என்று பாராட்டவும் செய்தார். இப்போது ஜனனியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். “கமல் கோபமாக பேசியவுடன் ஐஸ்வர்யா அழுதுகொண்டிருந்தாரே, நீங்கள் ஏன் சென்று அவரைச் சமாதானம் செய்யவில்லை?” “இல்லை. அவ எப்ப என்ன செய்வான்னு எதிர்பார்க்கவே முடியாது. அந்தச் சமயம் சிக்கலானது என்பதால் அருகில் நெருங்க தயங்கினோம்” என்றார் ஜனனி. ‘அவங்க அம்மா வந்த போது பைத்தியம் மாதிரி கத்திக்கிட்டு ஓடினா. அவ கிட்ட எப்படிப் போக முடியும்?’ என்று மிகைப்படுத்தி பயப்படுவது போல் பாவனை செய்தார் விஜி.

“போன சீஸன்ல அப்படி அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா ரெட் கார்டு யாரும் வாங்கலையே?” என்பது போல யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘அவங்க டாஸ்க் முடிச்சப்புறம் இயல்பாப் பேசிக்கிட்டாங்க. இங்க நாம பேசாம அந்தக் கோபத்தைத் தொடர்ந்தோம். பரஸ்பர புரிதலோட டாஸ்க் நடந்தா பிரச்னை வராது” என்று விளக்கமளித்தார் பாலாஜி. ‘இங்க வந்து மாறினவங்களும் இருக்காங்க. பிறப்பிலேயே சில குணங்கள் இருக்கறவங்களும் இருக்காங்க’ என்பது அவரது விவாதம். 

சாக்லேட்டுக்காக இன்னொரு போட்டி நடந்தது. வீட்டிலுள்ளவர்கள் மூன்று அணிகளாகப் பிரிய வேண்டும். சீஸன் ஒன்று மற்றும் இரண்டின் போட்டியாளர்கள் தலா ஓர் அணியில் இருக்க வேண்டும். காயத்ரி இதற்கு நடுவர். ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் சாக்லேட் வடிவில் போடப்பட்டிருக்கும் குழியில் பந்துகளை எறிய வேண்டும். எவர் அதிக எண்ணிக்கையில் சரியாகப் போடுகிறாரோ அவரே வெற்றியாளர். இதில் சிநேகன் – விஜி கூட்டணி வெற்றி பெற்றது. இதற்காக கிடைத்த சாக்லேட் பரிசுகளில், பிக்பாஸின் அனுமதியில்லாமல் கூடுதலாக ஒன்றை எடுத்துக் கொண்டார் காயத்ரி.

ஐஸ்வர்யா தொடர்பாக ஒளிபரப்பான குறும்படம், காயத்ரியின் கேள்வி ஆகியவை தொடர்பாக ரித்விகாவும் ஜனனியும் பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஐஸ்வர்யா செஞ்சது அவ்ள பெரிய தப்பு இல்லை போல’ என்று அவர்கள் பேசினாலும் தாங்கள் செய்த தவறு பற்றிய குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ அவர்களிடம் இல்லை. விளையாட்டுப் பிள்ளைகள் போல் பரஸ்பரம் சிரித்துக்கொண்டார்கள். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

‘ஒரு வெள்ளை ரோஜா இருந்துச்சாம். அது மேல ஒரு குருவிக்கு காதலாம். நான் சிவப்பு நிறத்துல மாறினேன்னா உன்னைக் காதலிக்கிறேன் –ன்னு வெள்ளை ரோஜா சொல்லிச்சாம். அந்த முள்ளு மேல குத்திக் குத்தி தன் ரத்தத்தையெல்லாம் ரோஜா மேல போட்டதாம் குருவி. ரோஜா சிவப்பாகிடுச்சாம். ஆனா குருவி செத்துப் போச்சாம்.” என்று டி.ராஜேந்தர் உருக்கமாகச் சொன்ன கதை போல ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். மதிய நேரத்தில் பொங்கல் சாப்பிட்டது போல் அனைவரும் மயக்கத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். “சீதைக்கு ராமன் யாரு?” என்பது போல் கதையின் இறுதியில் ஆர்த்தி ஒரு கேள்வியைக் கேட்க, ஜாலியாகக் கோபப்பட்டார் மும்தாஜ். ‘காதல் என்பது தடுக்க முடியாதது, ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் ஒரே சமயத்தில் வரக்கூடும்’ என்பது போல் ஆங்கிலத்தில் சொன்னார் யாஷிகா. அது அவருடைய சமகால சொந்தக் கதை போல.

**

‘Ticket to finale’ டாஸ்க் பற்றிய அறிவிப்பை வாசிக்கத் தொடங்கினார் ஆரவ். ‘சுத்திச் சுத்தி வந்தீக’ என்பது இதன் பெயர். இதைக் கேட்டதும் சீஸன் 2 போட்டியாளர்கள் உற்சாகமாக குரல் எழுப்பத் தொடங்கினார்கள். ஆளுக்கொரு வண்ணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் குடுவையை கையில் தாங்கியபடி, வட்டவடிமான குறுகிய படிக்கட்டில் சுற்றி வர வேண்டும். காலை கீழே வைத்தால் அவுட். பஸ்ஸர் ஒலித்ததும் எவருடைய குடுவையில் தண்ணீர் அளவு குறைந்திருக்கிறதோ, அவர் வெளியேற்றப்படுவார். போட்டி தொடர்ந்து நடக்கும். இப்படியே நபர்கள் குறைந்து குறைந்து எவர் இறுதியில் மிஞ்சுகிறாரோ, அவர் வெற்றியாளர். அவர் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதியாவார். இந்த வார நாமினேஷனிலிருந்தும் காப்பாற்றப்படுவார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஐஸ்வர்யா டென்ஷனுடன் காணப்பட்டார். இதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற உறுதி அவரது முகத்தில் காணப்பட்டது. மற்றவர்கள் உதவியுடன் தண்ணீர்க்குடுவையை கையில் வாங்கிய படி போட்டியாளர்கள் மெள்ள சுற்றத் தொடங்கினார்கள். யாஷிகா உடை மாற்றியிருந்தார். மும்தாஜ் பிரார்த்தனையுடன் நகர்ந்துகொண்டிருந்தார். கையில் மூட்டுவலி பிரச்னையிருப்பதால் அது தொடர்பான அவஸ்தை தெரிந்தது. சீனியர்கள் இவர்களுக்கு உற்சாகமும் ஆதரவும் தந்தார்கள். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

ஒரு கட்டத்தில் பாலாஜி குடுவையிலிருந்த தண்ணீர் அதிகமாக சிந்தியது. ‘ஸ்ரெயிட்டா போங்க’ என்று எவரோ சொல்ல, ‘ரவுண்டாத்தானே போகணும்” என்று அந்த நிலையிலும் ஜோக் அடித்தார் பாலாஜி. “ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா கேளுங்க’ என்று சீனியர்கள் சொன்ன போது ‘இதைப் பத்து நிமிஷம் பிடிங்க” என்றார் பாலாஜி. ஒன்றன் பின் ஒருவராக அவர்கள் மெள்ள நகர்ந்து கொண்டிருந்த போது “இந்தச் சமயத்தில் பாலாஜி ‘டர்’ என்று வெடிகுண்டைக் கிளப்பினால் என்னவாகும்?” என்கிற அசந்தர்ப்பமான நகைச்சுவைக்கு சிரிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பஸ்ஸர் அடித்ததும் பாலாஜி குடுவையிலிருந்த தண்ணீரின் அளவு குறைவாக இருந்ததால் அவர் வெளியேறினார். அடுத்த சுற்றில் ஐஸ்வர்யா வெளியேறினார். அவர் அதிக பதற்றமாக இருந்த போதே இது தெரிந்து போயிற்று. பிறகு மும்தாஜூம் வெளியே வந்தார்.

ஒரு பிரேக்கில் யாஷிகா அதிகம் சோர்ந்து போய் பின்பு சுதாரித்துக்கொண்டார். பிறகு ரித்விகா அவுட் ஆகி வெளியே வந்தார். கோயிலில் அடிப்பிரதட்சணம் செய்வது போல் இவர்கள் நடந்துகொண்டிருந்த டாஸ்க் தொடர்ந்துகொண்டிருப்பதோடு இன்றைய நாள் முடிந்தது. நாளைதான் இதன் முடிவு தெரியும்.

இந்த டாஸ்க்கைப் பார்த்த போது ஒரு புராணக்கதை எனக்கு நினைவுக்கு வந்தது. மஹாவிஷ்ணுவை முப்பொழுதும் நினைத்து தொடர்ந்து வழிபட்டுக்கொண்டிருப்பதான ஒரு தற்பெருமை நாரதருக்கு இருந்தது. அந்தத் தற்பெருமையை உடைக்க வேண்டும் என்று விஷ்ணு முடிவு செய்தார். ‘நாரதா, இந்த உலகில் யார் என்னை அதிகம் நினைக்கிறார்களோ, அவர்களின் முகம் இதில் தெரியும்” என்ற படி ஒரு கண்ணாடியைக் காட்டினார். அதில் ஒரு குடியானவனின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் நாரதர் பதறிப் போனார். ‘ஐயனே.. இது என்ன கொடுமை. உங்களை அனுதினமும் ஒரு நொடி கூட தவறாமல் நினைத்துக்கொண்டிருக்கும் என்னுடைய முகம் தெரியாமல் ஒரு சாதாரண குடியானவனின் முகம் தெரிகிறதே?” என்று கலங்கினார். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

“நீ சென்று அந்தக் குடியானவன் என்ன செய்கிறான்” என்று பார்த்து விட்டு வா” என்று நாரதரை அனுப்பினார் விஷ்ணு. நாரதரும் அந்தக் குடியானவனின் வீட்டுக்குச் சென்று கண்காணித்தார். அவர் பெரிய சம்சாரி. வீட்டில் வறுமை. எனவே அது தொடர்பான ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள். என்றாலும் காலையில் எழும் போது ‘நாராயணா’ என்று ஒருமுறை சொல்வார். தன் பணிகளை கவனித்து விட்டு இடையில் கிடைக்கும் ஓய்வில் ஒரு முறை ‘நாராயணா’ என்பார். பின்பு தூங்கும் போது ஒருமுறை ‘நாராயணா”. அவ்வளவுதான். நாரதர் திரும்பி வந்து ‘மகா பிரபோ.. அவர் ஒரு நாளில் மூன்று முறைதான் உங்கள் பெயரை உச்சரிக்கிறார். நானோ ஒவ்வொரு நொடியும் உங்கள் நாமத்தை ஆராதனை செய்துகொண்டிருக்கிறேன். அவரைப் போல் உங்கள் தீவிர பக்தன் என்று சொல்கிறீர்களே?” என்று புலம்பினார் நாரதர். 

“அப்படியா? சரி. நான் ஒரு விஷயம் சொல்கிறேன். அதைச் செய்து விட்டு வா” என்றார் கிருஷ்ணர். ‘இது எண்ணைய் நிரம்பிய பாத்திரம். வழிய வழிய இருக்கிறது. இதில் ஒரு துளி கூட கீழே சிந்தாமல் இந்த மரத்தைப் பத்து முறை சுற்றி வா” பிறகு சொல்கிறேன் என்றார் விஷ்ணு. விஷ்ணுவே சொல்லி விட்டாரே என்கிற காரணத்தினால், மிகுந்த கவனத்துடன் அந்த எண்ணைய்க் குடுவையை எடுத்துக் கொண்டு ஒவ்வோர் அடியாக மெள்ள மெள்ள வைத்து நகர்ந்து சென்றார் நாரதர். ஒரு துளி கூட விழக் கூடாது என்கிற கவனமும் உறுதியும் அவரிடம் தென்பட்டது. தன் ‘டாஸ்க்கை’ வெற்றிகரமாக முடித்ததும் ‘பிரபோ.. நீங்கள் சொன்னதை வெற்றிகரமாக முடித்து விட்டேன். இப்போதாவது நான்தான் உங்களின் சிறந்த பக்தன் என்பதை ஒப்புக் கொள்வீர்களா?” என்று ஆவலாகக் கேட்டார் நாரதர். 

ஐஸ்வர்யாவைத் தப்பா நினைச்சுட்டாங்களே... தட்டிக் கேட்பாரா கமல்? #BiggBossTamil2

மர்மமான புன்னகையுடன் விஷ்ணு கேட்டார். “நீ எண்ணைய்ப் பாத்திரத்தை எடுத்துச் சுற்றி வரும் போது ஒரு முறையாவது என்னை நினைத்தாயா?” என்று கேட்டதும் முகம் வெளிறிப் போன நாரதர் ‘ஐயோ.. இல்லை பிரபோ” என்று பதற்றமடைந்தார். “ஒரு சாதாரண எண்ணைய்ப் பாத்திரம். அதைச் சுமந்துகொண்டு சிறிது நேரம் சுற்றி வந்ததற்கே என்னை நீ மறந்து விட்டாய். ஆனால் பாவம், அந்தக் குடியானவன். வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்களை சுமந்துகொண்டிருந்தும் கூட தினமும் மூன்று முறை என்னை நினைத்து வழிபட்டார். இப்போது சொல். யார் சிறந்த பக்தர்? என்று விஷ்ணு கேட்டதும் வெட்கமடைந்த நாரதர் தன் தவற்றை உணர்ந்தார். 

பிக்பாஸ் டாஸ்க்கிற்கும் இந்தப் புராணக் கதைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று யோசிக்காதீர்கள். எதுவுமில்லை.

பின் செல்ல