Published:Updated:

``முறைப்படி வளைகாப்பு முடிஞ்சது... அவர் செம ஹேப்பி!'' - கயல்விழி சென்றாயன்

``முறைப்படி வளைகாப்பு முடிஞ்சது... அவர் செம ஹேப்பி!'' - கயல்விழி சென்றாயன்
``முறைப்படி வளைகாப்பு முடிஞ்சது... அவர் செம ஹேப்பி!'' - கயல்விழி சென்றாயன்

பிக்பாஸ் வீட்டின் மனம் கவர்ந்த போட்டியாளர்களுள் நிச்சயம் சென்றாயனுக்கும் இடம் உண்டு. வெகுளியான அவருடைய செயல் பலரையும் ஈர்த்தது. சென்றாயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் நான்கு ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. சென்றாயன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த தருணம் கயல்விழி கர்ப்பமானார். நூறு நாள்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜெயித்துவிட்டு வரும் தன் கணவரிடம் சஸ்பென்ஸாக இதைச் சொல்ல வேண்டும் என்று வைராக்கியமாக இருந்த கயல்விழி, போட்டியாளர்களை அவர்கள் குடும்பத்தினர் சந்திக்கலாம் என்ற நாளில் சர்ப்ரைஸ் பிளானை போட்டுடைத்தார்.

அந்தத் தகவலைக் கேட்டு சென்றாயன் துள்ளிக் குதித்ததும், பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே அவருக்குப்  போட்டியாளர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடத்தப்பட்டதும் நாம் அறிந்ததே. தற்போது, கயல்விழிக்கு ஐந்தாவது மாதம் நடத்தப்படும் வளைகாப்பு அவர்களுடைய வீட்டில் வைத்து நடத்தப்பட்டிருக்கிறது. 

`` கடந்த பன்னிரண்டாம் தேதி என்னோட தங்கைக்கு வளைகாப்பு நடந்துச்சு. அதுக்காகச் சென்னையிலிருந்து வந்தார். அப்போதான் என் கணவரை நேர்ல பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தார். பிக்பாஸ் வீட்டுல எப்போ தூங்குறோம், எப்ப சாப்டுறோம்னே தெரியாதுல. வீட்டுக்கு வந்ததும் சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாம, தூங்க முடியாம கஷ்டப்படுறார். என்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ஏன்னா, இதுக்காக நாங்க நாலு வருஷம் காத்திருந்தோம்..! 

'பாப்பா ஏன் இவ்வளவு குட்டியா இருக்கு..', 'உதைக்க ஆரம்பிச்சிருச்சா'ன்னு கேட்டுட்டே இருந்தார். தங்கச்சி வளைகாப்பு முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு பதினான்காம் தேதி எங்க வீட்டுல வைச்சு சின்னதா எனக்கு வளைகாப்பு நடத்தினாங்க. அப்போ நெகிழ்ச்சியில கண்ணெல்லாம் கலங்கி என்னை சந்தோஷமா பார்த்துட்டே நின்னார். பொதுவா வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க... என்ன வயித்துல புள்ள என்ன செய்யுதுனு கேப்பாங்க. அவர் இப்ப பிக்பாஸ் சென்றாயன் ஆனதுனால... என்ன குட்டி பிக்பாஸ் என்ன செய்றாருனு கேக்குறாங்க. அப்ப பாக்கணுமே அவர் முகத்த... பூரிச்சு போயிடுறார். எங்கம்மாகிட்ட 'நானே அவள நல்லா பார்த்துப்பேன். என்னோட அனுப்பி வைங்கனு சொல்லியிருக்கார். என்னைச் சென்னை கூப்பிட்டுப் போகப் போறார். கயல்விழி சூப்பர் டூப்பர் ஹேப்பி அண்ணாச்சி'' என்று கை வளையல்கள் குலுங்க சிரிக்கிறார்.

ஹேப்பி பேபி...

பின் செல்ல