பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தெர்ல மிஸ்!?

தெர்ல மிஸ்!?
பிரீமியம் ஸ்டோரி
News
தெர்ல மிஸ்!?

தெர்ல மிஸ்!?

தெர்ல மிஸ்!?

``எனக்கு வயது 18. சினிமாவில் சாதிக்கும் ஆசை உண்டு. ஆனால் சினிமா உலகில் பெண்கள் என்றாலே வேற்றுப்பார்வை உண்டே... அதே தயக்கம்தான் எனக்கும். திரைத்துறையில் சாதிக்க

தெர்ல மிஸ்!?

நினைக்கும் பெண்களுக்கு முறையான அமைப்பு அல்லது வழிமுறை ஏதும் உள்ளதா? இன்னும் சினிமா உலகம் என்றால் பெண்கள் பயப்படும் நிலைதான் உள்ளதா?’’

- மகேஸ்வரி, ஈரோடு

``பெண்கள் திரைத்துறையில் இருப்பது பற்றி வேற்றுப்பார்வை கண்டிப்பாக உண்டு. அதைப் பற்றிக் கவலைப்பட்டு, திரைத்துறைக்கு வரத் தயங்குகிறீர்கள் என்றால்,  உங்களிடம் எனக்கொரு கேள்வி உண்டு... எல்லாத் துறைகளிலும் பெண்களை வேற்றுப்பார்வை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்தானே? மற்ற எந்தத்  துறையைக் காட்டிலும் மனவலிமை பிரதானமாய்த் தேவைப்படும் துறை இது.  நம்மை நாமே வடிவமைப்பதுதான் இங்கு நிற்க வழிமுறை. யாரையும் பின்தொடராமல் எல்லாப் படைப்பு களிலிருந்தும் கற்றுக்கொண்டு, தன் கலையில் தனித்துவம் படைப்பதுதான் இங்கு சாதிக்க வழிமுறை.’’

தெர்ல மிஸ்!?

உஷா கிருஷ்ணன், சினிமா இயக்குநர்

``மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அச்சமாக இருக்கிறது. நேரடியாக நானே ஆன்லைனில் இன்வெஸ்ட் பண்ணலாமா அல்லது முகவர் மூலமாகப் பண்ணலாமா?’

- விவேக், தேன்கனிக்கோட்டை

தெர்ல மிஸ்!?

``ஒரு முதலீட்டாளருக்கு ஃபண்டுகள், அதன் வகைகள், எப்படி சிறப்பானவற்றைத் தேர்வு செய்வது, எப்படி நிதித் திட்டம் வகுப்பது போன்ற கேள்விகளுக்கு சொந்தமாகச் சிந்தித்து, ஆய்வு செய்து பதில்  கூற முடியுமென்றால், அவர் கண்டிப்பாக நேரடியாக முதலீடு செய்யலாம். மேலும், முதலீடு செய்த பிறகு, முதலீடுசெய்த ஃபண்டுகளைத் தொடர்ந்து கண்காணித்து, பரிசீலனை செய்து, சரிபார்க்கவும் தெரிய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு நேரமும் இருக்க வேண்டும். இவ்வாறல்லாமல், வெறுமனே வருடத்திற்கு சுமார் 1 % மிச்சம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே நேரடி முதலீட்டிற்குச் செல்வது சரியானதாக இருக்காது. ஏனெனில்,  மியூச்சுவல் ஃபண்டுகள், சாதாரண சந்தைப் பொருள்கள் அல்ல. ஒன்றுக்கொன்று மாறுதல்கள் கொண்டவை. தவறான பங்குகளில் முதலீடு செய்யும் போது நஷ்டம் எதிர்பாராதவகையில் இருக்கும். சாதக பாதகங்களை அலசிப்பார்க்கும்போது பெரும்பான்மை யானோருக்கு நிதி ஆலோசகர் மூலமாகச் செல்வதே புத்திசாலித்தனமானது.’’

தெர்ல மிஸ்!?

ஸ்ரீகாந்த் மீனாட்சி,

இயக்குநர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம்

`அடிக்கடி செல்போனை மாற்றிக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 10,000-15,000 செலவு செய்வது தேவையற்றது என்று உணர்கிறேன். ஒரு கேட்ஜெட்டை எத்தனை காலத்திற்கு வைத்துக்கொள்வது ‘ஐடியலா’க இருக்கும்?’’

- சந்தோஷ்குமார், பெங்களூரு


​``ஒரு கேட்ஜெட்டோ அல்லது மொபைலோ அதற்கு இவ்வளவு நாள்தான் ஆயுட்காலம் என்று இலக்கெல்லாம் வைத்து​த்​ தயாரிக்கப்படுவதில்லை. புதிய வசதிகளை நம்மால் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமோ அல்லது புதிய வசதிகளைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமோதான் உங்களை அடிக்கடி செல்போனை மாற்றத் தூண்டுகிறது. இது முழுக்க முழுக்க உங்கள் மனது  சார்ந்த விஷயம்தான்.  குறிப்பிட்ட மாத இடைவெளிகளில் புதிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உண்மைதான். இந்த நடைமுறையை மொபைல் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் உத்தியாகக் கடைப்பிடிக்கின்றன. இப்போதெல்லாம் மொபைல்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் மூலமாகவே புதிய வசதிகள் கிடைத்துவிடுகின்றன. அதன்படி பார்த்தால் நீங்கள் அப்டேட் செய்ய விரும்புவது ஹார்டுவேர் மட்டும்தான். எந்த நிறுவனத்தின்  மொபைலாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறைதான் ஹார்டுவேரில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்கிறது​​.​ எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஒரு மொபைலைப் பயன்படுத்தலாம், ஆனால், மூன்று மாதங்கள் என்பது மிகவும் குறைவு மற்றும் அவசியமற்றது.’’ 

தெர்ல மிஸ்!?

​-​ லுத்துஃபுர் ரஹ்மான், செல்போன் விற்பனை மைய உரிமையாளர்

`` இது தேர்வுக்காலம். பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவுகளைச் சொல்ல முடியுமா? - பிரியதர்ஷினி, கோவை

 `` தேர்வு நேரத்தில் காலை உணவை நிச்சயம் தவிர்க்கக் கூடாது. மூளை மந்தத்தைக் குறைக்க, ஆற்றலை மேம்படுத்த, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலையில் எழுந்ததும் பாதாம், வால்நட்டுடன் பால்  சாப்பிடலாம். அடுத்ததாக, அவித்த அல்லது பொரித்த முட்டையுடன் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். முட்டை சாப்பிடாதவர்கள் கேழ்வரகுக் கஞ்சி, ஓட்ஸ், வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். தேர்வு நேரத்தில் பழங்கள், நட்ஸ் சாப்பிட வேண்டியது மிக அவசியம். இரவு தூங்குவதற்கு முன்னதாக மஞ்சள் தூள் கலந்து பால் குடிக்கலாம்.

படிக்கும்போது டீ, காபி அருந்த வேண்டாம். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். வெள்ளரிக்காய் கலந்த மோர், பருப்பு ரசம், இளநீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். பொட்டுக்கடலை, பொரி உருண்டை, எள்ளுருண்டை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.  வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லது. ஏற்கெனவே சாப்பிட்டுப் பழக்கமில்லாத  எந்தப் புது உணவையும் தேர்வு நேரத்தில் சாப்பிட வேண்டாம்.’’

தெர்ல மிஸ்!?

- மீனாட்சி பஜாஜ், டயட்டீஷியன்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!