ஆசை : விழிமொழி அபிநயம்

'நாங்கள் 'லிட்டில் ஃப்ளவர் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி’ மாணவர்கள். எங்களைப் போன்ற மாற்றுத்திறன்கொண்ட
ஜன்னல்கள், வராண்டாக்கள், மாடி கைப்பிடிச் சுவர்கள் என பள்ளி வளாகம் எங்கும் ஆவல் பொங்கும் முகங்களுடன் மாணவர்கள். அபிநயா உள்ளே நுழைந்ததுமே அத்தனை பேரும் ஆர வாரமாக ஓடி வந்து அபிநயாவைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரையும் அணைத்துக்கொள்ள அபிநயாவுக்கு இரு கைகளும் போதவில்லை. விரல்கள் நர்த்தனமாட, புருவங்கள் உயர்ந்து தாழ... சைகை மொழி வரவேற்பு அளித்தார்கள் மாணவிகள். அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்வதுபோல் கால்களை லேசாக மடித்து, பணிந்து பதில் வணக்கம் சொல்கிறார். கொஞ்சம் கூச்சப்பட்டு ஒதுங்கி நின்ற மாணவிகளைக் கைப்பிடித்து இழுத்துத் தன்னருகே அமர்த்திக்கொண்டார். சிற்சில நிமிடங்களில் அபிநயா அவர்களின் மௌன உலகத்துக்குள் ஐக்கியமாகிவிட்டார். அபிநயாவின் பெற்றோர் அவர்களது மௌன மொழியை நமக்கு மொழிபெயர்த்தார்கள்.
''எப்படி உங்களால் சினிமாவில் சிரமம் இல்லாமல் நடிக்க முடியுது?''- எஸ்தரின் கேள்வி.

''எனக்கு இங்கிலீஷ் நல்லா எழுத வரும். பேசினாலும் புரிஞ்சுப்பேன். அதனால் ஸீன், டயலாக்குகளை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். அதை எப்படிப் பேசி நடிக்கணும்னு இயக்குநர் சொல்லிக் கொடுப் பார். எந்தக் கஷ்டமும் இல்லை!'' என்று அபிநயா அபிநயிக்க, கோரஸ் அப்ளாஸ் மாணவிகளிடம்!
''நீங்க எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?'' என்று வினவினார் அமீனா.

''நான் அழகா இருக்கேனா... ஹைய்யோ... தேங்க்ஸ்!'' என்று கண்கள் விரித்து நன்றி தெரிவித்த அபிநயா, ''எப்பவும் நல்லது மட்டுமே நினைச்சு மனசை நிம்மதியா, அமை தியா வெச்சுக்கிட்டா எல்லாருமே அழகா இருக்கலாம். இனி, நீங்களும் அப்படியே இருப்பீங்களா?'' என்று கேட்டார். இரு கைகளையும் உயர்த்தி உதறி ஆமோதித்தார்கள் அத்தனை மாணவிகளும்!

''எப்போ உங்களுக்குக் கல்யாணம்?'' என்று ஒரு மாணவி ஜாலியாகக் கேட்க, ''இந்த உலகில் எந்தக் கணவன் - மனைவிக்கு இடையிலான அன்பைக் காட்டிலும் என் மேல பாசமாக இருக்குறவங்க என் அம்மா. அதனால் அவங்கதான் என் ஹஸ்பென்ட்!'' என்று அபிநயா அம்மாவைக் கைகாட்ட, ஹேமலதா முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு. தொடர்ந்த கேள்வி - பதில் நேரத்தின் இறுதியில் துவங்கியது டான்ஸ் செஷன்!

'நாடோடிகள்’ படத்தின் பாடலுக்கு மாணவிகளோடு சேர்ந்து உற்சாகமாக ஆடினார் அபிநயா.
முழுதாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலே அங்கே செலவழித்த அபிநயா கிளம்ப ஆயத்தமாக, மாணவிகளின் முகத்தில் வருத்த நிழல்! ''மறுபடியும் வருவீங்களா?'' என்று ஒரு சிறுவன் சைகை புரிய, ''கண்டிப்பா!'' என்று அவனை அணைத்துக்கொண்டார் அபிநயா.
நா.கதிர்வேலன், ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்
