Published:Updated:

` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்!’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்

` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்!’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்
` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்!’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்

`சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலமாக ஃபேமஸானவர்கள், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. அந்த நிகழ்ச்சியில் இந்தத் தம்பதி  பாடிய பாட்டுகள் செம ஹிட். குறிப்பாக, 'என்ன மச்சான்' பாட்டு. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 'கரிமுகன்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்  செந்தில்.  இப்படத்தின் பாடல்கள், கதை, வசனம் ஆகியவற்றை எழுதி, இயக்கவும் செய்துள்ளார் செல்வ.தங்கையா. படத்தின் ஹீரோயினாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார். 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. படக்குழுவைச் சேர்ந்த பலருடன், இயக்குநர் வசந்தபாலன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர். வசந்தபாலன் பேசும்போது, ''இந்த வருடம் தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கு.  'பரியேறும் பெருமாள்', 'வட சென்னை' படங்கள் கண்டிப்பா தேசிய விருதுகள் வாங்கும். 

அதே மாதிரி, '96' படத்தில் நடிகை த்ரிஷாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். படம் முழுக்க அவருக்கு ரெண்டே ரெண்டு காஸ்ட்யூம்தான். த்ரிஷா இருந்தால் படத்தில் கண்டிப்பா நடனக் காட்சிகள் இருக்கும். ஆனா, இந்தப் படத்தில்  த்ரிஷா எதார்த்தமா நடிச்சிருந்தாங்க. தமிழ் சினிமா நிறைய மாறியிருக்கு. தலை நிமிர்ந்து தமிழ் சினிமாவைப் பார்க்கிற நிலைமைக்கு நம்ம வந்துட்டோம்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி, ``செந்தில் கணேஷூம் அவருடைய மனைவி ராஜலட்சுமியும் பாடுன பாட்டை யூ-டியூபில் பார்த்தேன். ரொம்ப அழகா பாடிட்டு இருந்தாங்க. 'யார் இந்தப் பையன்'னு என்னோட உதவி இயக்குநரிடம் கேட்டேன். ரெண்டு பேரையும் பத்தி சொன்னார். செந்தில் பாடுன எல்லா பாட்டும் கேட்டேன்.  இந்தப் பையனை நம்ம படத்துல பாட வைக்கணும்னு நினைச்சேன். செந்திலை நேரில் சந்தித்துப் பேசும்போதுதான் தோணுச்சு, 'படத்திலேயே நடிக்க வைக்கலாம்'னு. என்னோட அடுத்த படம் 'கிட்டா'வில் சின்ன ரோலில் செந்தில் நடிச்சிருக்கார். கூடிய சீக்கிரமே முக்கியமான ரோலில் என்னோட படங்களில் செந்தில், ராஜலட்சுமி நடிப்பாங்க’’ என்றார். 

பின் செல்ல