தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ங்கிலாந்தின் கவுன்ட்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது ஐந்து போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் கோலி. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இவர் தலைமையில் இந்திய அணி மீண்டும் இங்கிலாந்து செல்கிறது. உலகின் அனைத்து ஏரியாக்களிலும் கில்லியாக மிரட்டிய விராட் இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்ப முடிவெடுத்துள்ளார். விறுவிறு விராட்!

இன்பாக்ஸ்

யீஃப் அலிகானின் மூத்த மகள்  சாரா அலிகான் நெகுநெகுவென வளர்ந்து நிற்கிறார். ஃபேஷன் ஷோ ஒன்றில் பூனை நடை போட்ட சாராவைப் பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் அசந்து போயிருக்கிறது. `என்னுடைய கனவான சட்டப்படிப்பை முடித்ததும் சினிமாதான்’ என்று கறாராக இருக்கிறார் சாரா.  கோலிவுட்டுக்கும் பூனை வரணும்!

இன்பாக்ஸ்

ஜாக்கிசானின் மகள் எட்டா என்ஜி ஒருபால் ஈர்ப்பு கொண்டவர். இதனால் தாயார் எலைன் என்ஜியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, சாலை யோரங்களிலும் மேம்பாலங்களுக்கு அடியிலும் வசித்து வருகிறார்.  ஜாக்கிசானுக்கும் அவரது முன்னாள் காதலியான எலைன் என்ஜிக்கும் பிறந்தவர் எட்டா. ஜாக்கி சான் இப்போது மனைவி ஜோவன் லின்னுடனும் மகன் ஜேசி சானுடனும் வசித்து வருகிறார். `எட்டாவைக் கவனிங்க ஜாக்கி’ என குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். மகளைக் கவனிங்க ஜாக்கி!

இன்பாக்ஸ்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, `மாம்’ படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன் தந்தை போனி கபூர் மற்றும் தங்கை குஷி கபூருடன் இணைந்து  இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். விழாவில் ஜான்வி அணிந்திருந்த புடவை ஸ்ரீதேவியுடையது. தெலுங்கு நடிகர் ராம்சரணின் திருமணத்தின்போது ஸ்ரீதேவி உடுத்தியிருந்த உடை அது.  மிஸ் யூ மயில்!

விவாகரத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகளாக டாம்க்ரூஸ் சிங்கிள்தான்.  இந்நிலையில் டாமுக்கு `மிஷன் இம்பாசிபிள் 6’ ஹீரோயின் வெனிஷா கிர்ப்பியுடன் காதல் என்றும், இருவரும் டேட்டிங் போகிறார்கள் என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கிசுகிசுக்கள் எழுதிவந்தன. ``இந்த நூற்றாண்டின் அழகான ஜோக் இதுதான். அதை நானும் என் பாய் ஃப்ரெண்டும் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தோம். அவருடன் ஒரு லிப்-லாக் சீனில் நடித்ததாலேயே காதல் என்று எழுதுவதெல்லாம் சுத்த போர்’’ என்று சொல்லியி ருக்கிறார் கிர்ப்பி. ஆனால்   டாம்க்ரூஸ் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை. சிங்கிளே சிறப்பு!

இன்பாக்ஸ்

ஜானி டெப் ஒரு படத்துக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவர். தற்போது இவர்மீது சம்பளப் பாக்கி புகாரை எழுப்பியுள்ளனர் இவரது பாதுகாவலர்கள். கடந்த இரண்டு வருடங்களாக ஓவர்டைம் வேலை கொடுப்பதோடு இதர சலுகைகளையும் தராமல் இழுத்தடிக்கிறார் டெப் என்று அவர்கள் பேட்டி கொடுக்க, டெப் தரப்பு கப்சிப் ஆகிவிட்டது. நியாயமா டெப்?

இன்பாக்ஸ்

ஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்-2’ எடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார் கௌதம் மேனன். ‘என்னை அறிந்தால்’ நேரங்களில் நடந்த பல குளறுபடிகள் களையப்பட்டு அஜித் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரியான படமாக இதை இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். மெல்லிசா ரெண்டாவது கோடு!