Published:Updated:

`உணர்ச்சிகளைக் கொன்னாலும் அதுக்குப் பெயர் கொலைதான்' - விஜய் சேதுபதியின் `சீதக்காதி' ட்ரெய்லர்!

`உணர்ச்சிகளைக் கொன்னாலும் அதுக்குப் பெயர் கொலைதான்' - விஜய் சேதுபதியின் `சீதக்காதி' ட்ரெய்லர்!
`உணர்ச்சிகளைக் கொன்னாலும் அதுக்குப் பெயர் கொலைதான்' - விஜய் சேதுபதியின் `சீதக்காதி' ட்ரெய்லர்!

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் எடுத்திருக்கும் படம், 'சீதக்காதி'. விஜய் சேதுபதி லீட் ரோலில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், படத்தின் வில்லனாக நடிகர் வைபவனின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். இவரின் முதல் படமும் இதுதான். காமெடி ஜானரான இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று இணையத்தில் வெளியானது.

மூன்று நிமிடம் வரையான இந்த ட்ரெய்லரில் விஜய் சேதுபதி, அர்ச்சனா, பக்ஸ் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். '96' கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதியின் மனைவி கேரக்டரில் அர்ச்சனா நடித்துள்ளார். நீதிபதியாக இயக்குநர் மகேந்திரன் நடித்துள்ளார். படத்தின் காட்சி அமைப்புகள், இசை அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது.

பின் செல்ல