Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ரு படம் ரிலீஸாகும் முன்பே அதன் ஒரு பாட்டு ஆந்திராவைத் தாண்டியும் சார்ட் பீட்டில் அலறிக் கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நடித்த `கீத கோவிந்தம்’ படத்தின் ரொமாண்டிக் பாட்டுதான் அது. லிரிக்கல் வீடியோ, ஒரிஜினல் வீடியோ என இரண்டையும் தாண்டி ஆங்காங்கே வெவ்வேறு தமிழ் வரிகளைப் போட்டு தமிழ் கவர் வெர்ஷனும் பாடி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் யூத்துகளின் ஏகபோக சாய்ஸ் இப்போ ‘இன்கே இன்கே காவாலி’ என்ற அந்த தெலுங்குப் பாட்டுதான். குழல் வளர்ந்து அலையானதே 

இன்பாக்ஸ்

பாலிவுட்டின் திடீர் ஹாட் கேக்காகி இருக்கிறார் டாப்ஸி பன்னு. ஆகஸ்ட் 9-ல் ரிலீஸான ‘மன்மர்ஸியான்’ படத்தின் டிரைலரில் முத்தக் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் அந்தப் படத்தில் விக்கி கௌஷாலுடன் நிறைய லிப்-லாக் இருக்கிறது! `பஞ்சாப்பில் நடக்கும் இந்தக் கதையில், ஒரே நேரத்தில் இரண்டு பேர் மீது காதல் வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பயணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று குறும்பாக சொல்லியிருக்கிறார் அனுராக். அபிஷேக் பச்சனும் விக்கியும் போட்டி போட்டுக் காதலிக்கும் அழகியை டிரைலரில் பார்த்தே பாராட்டுகள் குவிவதால் டாப்ஸி செம ஹாப்பி!. டாப்பா வருவீங்க டாப்ஸி!

இன்பாக்ஸ்

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை, முன்னாள் மிஸ் இந்தியாவுமான இஷா குப்தாவுக்குக்குமிடையே திருமணம் என பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுத்தன. இதையடுத்து நடிகை ஈஷா இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. தனது கல்யாணம் நடக்கும்போது எல்லோரையும் கூப்பிட்டு விருந்துவைக்கிறேன் இப்போ ஆளைவிடுங்க என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமுக்கும் காதல் என்று கிசு கிசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ப்ளேபாய் பாண்டியா!

இன்பாக்ஸ்

த்தமவில்லன் படத்தில் ‘ஏப்ரிலியா காப்போனார்டு’ டூரர் பைக்கில் வரும்போதே தெரிந்திருக்கும் கமல் ஒரு பைக் பிரியர்என்று. ‘மேட்ச்லெஸ் ஸ்கிராம்பிளர்’ என்னும் 1950-களில் விற்பனைக்கு வந்த வின்டேஜ் பைக்கை பத்திரப்படுத்தி தன் வீட்டில் வைத்திருக்கிறார் கமல். நீண்ட நாள்களாக பயன்படுத்தாததால்  ஸ்டார்ட் ஆக மறுக்கும் இந்த பைக்கை ரெஸ்டோர் செய்ய ஆள் தேடிக்கொண்டிருக்கிறார் கமல். வின்டேஜ் கலெக்டர்கள் கமல் வீட்டை ‘மய்யம்’ கொள்ளலாம். டபுச்சிக்கு டபுச்சிக்கு மேட்ச்லெஸ்

இன்பாக்ஸ்

கஸ்ட் 18-ம் தேதியோடு சர்வதேச அரங்கில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் விராட் கோலி. அன்று மாற்று ஓப்பனராகக் களம் கண்டவர், இன்று கிரிக்கெட் உலகையே மாற்றிக்கொண்டிருக்கிறார். `ஆங்ரி பாய்’, `இம்மெச்சூர்ட் கிரிக்கெட்டர்’ என திட்டிய பேனாக்களும், கீபோர்டுகளும் இன்று ‘கிங் கோலி’ என்று புகழாரம் சூட்டுகின்றன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெளிநாட்டுப் மண்ணிலும் ஆதிக்கம் செலுத்துகிறது அவரது பேட். இளம் இந்திய அணியை உலகக் கோப்பையையும் நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கும் கிரிக்கெட் சூறாவளியின் 10-வது ஆண்டு நிறைவை வெறித்தனமாகக் கொண்டாடக் காத்துக்கொண்டி ருக்கிறது விராட் ஆர்மி. வீறுநடை போடும் விராட்!

இன்பாக்ஸ்

‘தங்கல்’, ‘பாகுபலி’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ என இந்தியப் படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்து வருகின்றன. இதனால் சீனாவில் இந்தியப்படங்க ளுக்கு பெரிய சந்தை உருவாகி இருக்கிறது. சீன திரைப்பட நிறுவனங்கள் இந்தியப்படங்களை வாங்கி டப் செய்து வெளியிட ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் அடுத்து ‘மெர்சல்’ திரைப்படத்தை மேண்டரின் மொழியில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆளப்போறான் தமிழன்!

இன்பாக்ஸ்

கேரளாவே தென்மேற்குப் பருவமழையில் மூழ்கித் தத்தளிக்கிறது. இதுவரை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் இதுவரை 29 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலி என்ணிக்கை கூடும் என அரசு தரப்பில் அறிவித்திருப்பது மாநிலம் தாண்டியும் கவலை ரேகையைப் படர விட்டிருக்கிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் இடம்பிடித்த பல இடங்கள் உருத்தெரியாமல் மாறிக் கிடப்பதால் அந்தப் படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரியும், படத்தின் கதாசிரியர் செம்பன் வினோத்தும், ஹீரோ ஆன்டனி வர்கீஸும் ஒரு டீமாக புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கப் போகிறார்கள். விரைவில் அங்கமாலி பழையப் பொலிவைப் பெறும் என்கிறார்கள். கடவுள் தேசம் மீண்டெழட்டும்

இன்பாக்ஸ்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் திரையில் தோன்றி 50 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், கடைசியாக வெளியான 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரேக்தான் பாண்ட் வேடத்தில் நடித்திருந்தார். முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை நடிக்கவைக்கலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் தரப்பு. அனேகமாக இட்ரிஸ் எல்பா பாண்ட் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல சாய்ஸ்!