
வலைபாயுதே
twitter.com/Thaadikkaran
என்னவெல்லாம் கொஸ்டின் கேக்கணும்னு முடிவு பண்ணிட்டு, டாக்டர் ரூமுக்குள்ள போனதும் அவர் ஒண்ணு கேட்க, நாம கேட்க வந்தது எல்லாம் மறந்துபோய் வெளிய வந்து புலம்புறதெல்லாம் டிசைன்ல இருக்கு..!

facebook.com/ranjith.devi.5
வாழ்வில் செட்டில் ஆகிவிட்டது என்பது எந்தப் பிரச்னையும் இல்லாமல் இஎம்ஐ கட்டுவது!
twitter.com/iKrishS
‘அழகிரி எங்கள் கட்சியில் இணைய முன்வந்தால் பரிசீலிப்போம்’னு தீபா அறிக்கை விடணும்.
twitter.com/meenammakayal
வாட்ஸ்-அப்ல மெசேஜ் அனுப்பி ரிப்ளை வராம இருக்குதுன்னா.. ஒரு நாலஞ்சு மெசேஜ்கள் அனுப்பிட்டு உடனே டெலிட் செஞ்சிடணும்.. curiosity wins
twitter.com/morattumama:
இவனைத் திருத்தவே முடியாதுனு ஒரு இமேஜ் நம்ம மேல வந்துட்டாலே போதும். சுதந்திரமா இருக்கலாம்.
twitter.com/MJ_twets
பத்து நிமிஷம் பஸ்ல போனாகூட பெரிய இவனாட்டம் வர்றியே... தைரியம் இருந்தா நைட்ல வா, பாக்கலாம்! - தூக்கம்

twitter.com/iyyanars
மாதக்கடைசியில் கடைப்பிடிக்குற சிக்கனத்தை மாத ஆரம்பத்துலயே கடைப்பிடிக்கறவன்தான் பணக்காரன்!
twitter.com/mekalapugazh
கலைஞர் அழவைத்தார்..
எடப்பாடி கோபப்பட வைத்தார்..
ஸ்டாலின் போராடி சிரிக்கவைத்தார்..
#கலைஞர் மரணநாள்.
twitter.com/amuduarattai
பேசும்போது, போதை ஏறினால், ‘மனைவியாகப் போகிறார்’ என்றும், பேசும்போது, ஏறிய போதை இறங்கினால், ‘மனைவியாகிவிட்டார்’ என்றும் அறிக.
twitter.com/Aruns212
ஜெயலலிதாவின் மரணத்திற்கும் அழுது, கலைஞரின் மரணத்திற்கும் அழும் இயல்பைப் பெற்றவளுக்கு ‘அம்மா’ என்று பெயர்.

twitter.com/ameerfaj
சாமானியர்களுக்குக் கிடைக்காத சகல சௌபாக்கியங்களும் ‘சாமியார்’களுக்குக் கிடைத்துவிடுகிறது நம் நாட்டில்..!
twitter.com/karukkan
‘’பிசினஸ்ல இன்ட்ரஸ்ட் இருக்கா... 60 லட்சம் கொடுங்க, பியூட்டி பார்லர் ஃப்ரான்சைஸி எடுத்துடலாம்’’கிறான் ஒருத்தான். அடேய்... 60 லட்சம் அக்கவுன்ட்ல இருந்தா நான் வேலைக்கே போகாம வாழ்ந்திருவேன்டா!
facebook.com/ Sriramsathiyamoorthy2690
ஆண்டவரே... நீங்க, நா மட்டுமல்ல அந்த ஒமரே நெனச்சாலும் ஜலால் இங்கிலாந்தில M.Tech படிக்க முடியாது. ஏன்னா அங்க M.Techனு ஒரு படிப்பே இல்ல!
facebook.com/umar.ibu.3
கலைஞர் சமாதியில காதை வைத்துக் கேட்டால் கடிகாரச் சத்தம்லாம் கேக்காது. போராட்டச் சத்தம்தான் கேக்கும்...
twitter.com/Aruns212
செருப்பை எடுத்துக் காட்டினால், கூலாக ‘வேற எடுத்துக் காட்டுங்க’னு சொல்ற ஒரே இடம் செருப்புக் கடை மட்டுமே.

facebook.com/karthekarna
மோடி சசிகலா தலையில வச்சது இடதுகை, கனிமொழி தலையில வச்சது வலதுகை. ஆகவே... #வாட்ஸ்-அப் ஜோசியர்கள்
facebook.com/jvp.sachin
அமெரிக்கா : எங்ககிட்ட இருக்குற ஒரே ஒரு பட்டனை அமுக்கினா போதும், உங்க கட்சியே காணாமல் போயிடும்.
எளிய தமிழ்ப் பிள்ளைகள்: எவ்வளவு ஆயுதம் வேணாலும் உபயோகப்படுத்திக்கங்க. ஆனா நாங்க பனங்கொட்டைகளையே எறிகற்களாக்கி வீசுவோம். பச்சைப் பனை ஓலைகளைப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்துவோம். கிட்டிப் புல் செதுக்கிக் குறிபார்த்து அடிப்போம்.

அமெரிக்கா: நீங்க அந்தளவுக்குலாம் வொர்த் இல்ல. நாங்க சொன்ன ஒரே ஒரு பட்டன், வாட்ஸ் அப் சர்வீஸையே டோட்டலாக கட் பண்றது. உங்க கட்சியே அதை வச்சித்தான் ஓடிக்கிட்டு இருக்கு. அதைக் கட் பண்ணிட்டாலே போதும்.
twitter.com/amuduarattai
அதிக ‘தோற்றப் பிழைகளுக்கு’ உள்ளானது, ஆண் - பெண் நட்பாகத் தான் இருக்கும்.
twitter.com/MJ_twets
உலகின் மிகச் சிறந்த அறிவுரை ‘அட்வைஸ் பண்ணி யாரையும் திருத்த முடியாது!’ என்பதுதான்.
twitter.com/saravananucfc
மனைவி: உங்களுக்குப் பேசவே தெரியலைங்க.

கணவன்: இங்க பாரு நட்ராஜ் ஜாமின்டரி பாக்ஸ். எட்டாம் வகுப்பு பேச்சுப்போட்டியில் நான் வாங்கியது.
facebook.com/gunacm96
படுத்துக்கிட்டே ஜெயித்தது எம்.ஜி.ஆர்.
இறந்த பின்பும் ஜெயித்தது கலைஞர்.
facebook.com/vk.kannan666
ஹிஸ்டரிய புத்தகத்துல படிங்கடா, வாட்ஸ் அப்ல படிக்காதீங்க...
சைபர் ஸ்பைடர்