சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/itzkarthik_v

டிசம்பரில் கட்சி   தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என ரஜினியின் சகோதரர் சத்தியநாரயணராவ் தகவல்! அது ஒண்ணுமில்ல.... ‘பேட்ட’க்கு புரோமோசன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க

வலைபாயுதே

www.facebook.com/rajeshwar.k.jesh

நீ கேட்ட கேள்விக்கு வந்த பதில் புரியலைனா அது ஆண்டவர்!  நீ கேட்ட கேள்வியே புரியலைனா அது தலைவர்!

www.facebook.com/elambarithi.k

தூக்கமும் வருது, வேலையும் நிறைய இருக்கு. தூக்கத்துல நடக்குற மாதிரி, தூக்கத்துல வேலை பாக்குற நோய் இருந்தா நல்லாயிருக்கும்

www.facebook.com/viewhaamid

எவனோ ஒருத்தன் ‘10 நாள் கழிச்சு பாருங்க ப்ரோ ‘சிம்டாங்காரன்’ மாஸ் ஹிட் ஆகும்’னு சொன்னான்... இன்னையோட 30 நாள் ஆச்சு!

வலைபாயுதே

www.facebook.com/aaranyan.yatchinipriyan

நான் ஸ்கூல் படிக்கும் போது எந்தப் படம் நல்லாயிருந்தாலும் ‘இது அஜித் நடிக்க வேண்டிய படம்’னு சொல்லுவாங்க. இப்ப அதே டயலாக்கை சிம்புக்கு சொல்றாங்க. சின்ன தல எஸ்.டி.ஆர்ன்னா சும்மாவா!

facebook.com/Cauvery Manickam

திங்கட்கிழமை மதியச் சாப்பாட்டு டப்பாவில், ஞாயிற்றுக்கிழமையின் நான்-வெஜ் வாசம்!

twitter.com/Kozhiyaar

கையிலேயே வச்சிருக்கும் போது ஒருத்தனும் கூப்பிட மாட்டான். பக்கத்து கடைக்குப் போய்ட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்டு கால்!

வலைபாயுதே

twitter.com/Suyanalavaathi

“கழுவுற மீனில் நழுவுற மீன் ரஜினி” - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு #மீன் வளத்துறை அமைச்சராம்.. ஐ மீன் வாட் யூ மீன்!

twitter.com/gips_twitz

முன்னெல்லாம் போனஸ் பணத்துல நகை, டிவி, ஃபிரிட்ஜ் வாங்கணும்னு நினைப்பாங்க ஆனா இப்ப டூவீலர் டேங்க் ஃபுல்லா பெட்ரோல் போட்டா போதும்னு நினைக்குறாங்க...!

twitter.com/indiavaasan

இங்கு எல்லா கேள்விக்கும் ஒரே பதில்தான் - நீ மட்டும் யோக்கியமா?

twitter.com/Kozhiyaar

வலைபாயுதே

வாரண்டி கார்டு என்பது வாரண்டி பீரியடில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காதது!

twitter.com/shivaas_twitz

கைக்குழந்தையை தூக்கும் லாவகம், ஆஃபாயில் சாப்பிடும்போது..!

facebook.com/umanathselvan

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் அலுவலகம் திரும்பியபின்னர் சந்திக்கும் சிக்கலே, ‘என்ன பாஸ்வேர்ட் வெச்சேன்? அதுவா இருக்குமோ, இதுவா இருக்குமோ?’

Harry Potter also dealing the same problem?

twitter.com/skpkaruna


மனிதர்களின் தவறு, பொறுப்பின்மை, அலட்சியம், திமிர்த்தனம் இவையெல்லாம் வழக்கம் போலவே விபத்து என அழைக்கப்படுகின்றன போலிருக்கு!

#amritsartraintragedytwitter.com/ jk13071961


“சூரியனிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரிய பகவான் கோபப்படுவார்” - அசோக் சக்சேனா, பாஜக.எம்.பி. அப்போ பூமியிலிருந்து மீத்தேன் எடுக்குறீங்களே.. பூமாதேவி செருப்பால அடிக்காதா?

வலைபாயுதே

twitter.com/akaasi

பக்கத்து கடைத்தெருதானே, ஹெல்மெட் போடாமல் போகலாமே என்ற சலனத்தை அடக்கி ஹெல்மெட்டுடன் வந்திருக்கிறேன், இங்கே ஒரு போலீஸ் அதிகாரி வெறுந் தலையோட வண்டியில போயிட்டிருக்கார்.

வலைபாயுதே



twitter.com/mrithulaM


எப்பேர்ப்பட்ட எதாக இருந்தாலும் ஒருநாள் சலித்து போகத்தான் செய்யும்.

facebook.com/suresh.kannan.1806


இந்த ‘96’ திரைப்படம் வந்தாலும் வந்தது, எல்கேஜி பசங்க கூட ஃபீலிங்க்ஸ்ல சுத்துதுங்க.

“இப்பத்தானேடா… எல்கேஜி… அதுக்குள்ள என்னடா?” –ன்னு கேட்டா, பிரிகேஜி படிச்சது வேற ஸ்கூல்லாம்”.

இதுக்கெல்லாமா ரீயூனியன்?

சைபர் ஸ்பைடர்