சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/Barakath Ali :

தொண்டர்கள் அவர்கள் பக்கம்...டெண்டர்கள் இவர்கள் பக்கம்!

facebook.com/Aadhavan Dheetchanya :  

வலைபாயுதே

ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமை நிகழும் நாட்டில் எத்தனை ராஜலட்சுமிகளுக்கு அழுவதென்று மரத்துக்கிடக்கிறது மனம்.

facebook.com/Varavanai Senthil Kumar :

‘சோற்றில் உப்புப்போட்டு சாப்பிடுபவன் என் மன்றத்தில் இருக்கமாட்டான்’ என்பதைத் தவிர மற்றவை அனைத்தையும் சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார்!

twitter.com/MJ_twets :

கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பாராம், ஆனா நம்ம கதவுக்கு மட்டும் யாரோ உள் தாழ்ப்பாள் போட்டிருப்பாங்கபோல. 

twitter.com/Thaadikkaran :

வண்டி ஆக்சிடென்ட் ஆகப்போகுதுன்னு தெரிந்ததும் பிரேக் பிடித்தவரைவிட ஆக்ஸிலேட்டர் அழுத்தியவரே அதிகம்..!   

twitter.com/indupriya911 :


நவகிரகத்தைச் சுத்தும்போதெல்லாம் எப்பவுமே வேண்டுதலை நினச்சதேயில்லை. கவனமெல்லாம் ‘இது எத்தனையாவது சுத்து’ன்னுதான் இருக்கு...  

வலைபாயுதே

twitter.com/iam_susi :

வெட்டியா இருக்கும்போது வேலைக்குப் போறவனைப் பார்த்துப் பொறாமைப் படறது, வேலைக்குப் போகும்போது வெட்டியா இருக்கிறவனைப் பார்த்துப் பொறாமைப்படறது... இதெல்லாம் ஒரு பொழப்பா?

www.facebook.com/Mala Thi

She: Metoo

Society- நீ ஒரு இவ / அவ

நீ இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கும் போதே தெரியாதா? நீ பெரிய ஒழுங்கா? இத்தன வருசமா தூங்கிட்டு இருந்தியா? குற்றம் சுமத்தும்போதாவது dress ஒழுங்கா போட்டுட்டு வந்திருக்கலாமே? இதெல்லாம் வெளிய சொல்ற நீ வக்கிரம் புடிச்சவ. அப்போ படுத்துட்டு இப்போ எதுக்கு சீன் போடுற? பேசும்போதே திக்குற. நீ சொல்றது பொய்யாத்தான் இருக்கும். சொல்லிவச்சா மாதிரி முதல் நாள்ல இருந்து ஒரே மாதிரி சொல்ற. பொய்யாத்தான் இருக்கும்.

வலைபாயுதே

She: Me too had a coffee-ன்னு சொல்ல வந்தேன்.

Moral: ஒரு பொண்ணு மீ டூ-ன்னு சொல்லி சம்பந்தப்பட்ட ஆண் பதில் சொல்றதுக்குள்ள. அந்தப் பெண் என்ன முழுசா சொன்னான்னுகூடக் கேட்காம இங்கே இருக்கிற ஒவ்வொரு pervert ஆணும் தன்னையே குற்றம் சுமத்தினமாதிரி, அதுக்குள்ள எத்தனை வசைகள்?

வலைபாயுதே

பொண்ணுங்க எல்லாம் வாயத் தொறந்தா இங்க இருக்கிற pervert-கள் எல்லாம் கடைசி வரை கதறிக் கதறியே சாக வேண்டியதுதான். இவனுங்கல்லாம் கதறுவது ஒரு வித குட் சைன்.

twitter.com/gips_twitz

அடுத்தவங்க கதையைத் திருடுற இந்தக் காலத்துலதான் மேடைக்கு மேடை சுயமா யோசிச்சுக் கதை சொல்லுற சீமானும் இருக்காரு..!
 
twitter.com/sultan_Twitz

தமிழிசைக்கு வளர்ந்து வரும் தலைவருக்கான விருதை வழங்குகிறது அமெரிக்காவின் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் - செய்தி # ‘அதிகமா அடிவாங்குனது நான்தான்; கப்பு எனக்குத்தான்’ மொமன்ட்?!

சைபர் ஸ்பைடர்