
2018 - பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே
twitter.com/twittornewton
ரஜினியின் பலம்: யாராவது “கொள்கை என்ன?”ன்னு கேட்டா, “கொள்கையா, ஹா ஹா ஹா ஹா”ன்னு சிரிச்சாலே போதும். ஸ்டைலா ஆன்சர் பண்றாருல்லன்னுட்டுப் போயிடுவாங்க.

twitter.com/urs_venbaa
மத்தியானம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போன கடைசித்தலைமுறை நாமதான்.
twitter.com/ArunPandiyanMJ
வடிவேலு, கவுண்டமணி எப்படி போட்டோ கமென்ட் மெட்டீரியலோ... அதே மாதிரி சீமான் பயங்கரமான வீடியோ கமென்ட் மெட்டீரியல்!
twitter.com/HAJAMYDEENNKS
தமிழகத்தில் எடப்பாடி அரசால் வளர்ந்தது H.ராஜாவின் வாய் மட்டுமே...!

twitter.com/HAJAMYDEENNKS
அரசியலுக்கு வரணும், நடிகர் ஆகணும், தொழிலதிபர் ஆகணும்னு கனவு கண்ட எல்லோரையும் ஒரு ஆசிரமம் வைக்கணும் என நினைக்க வைத்த பெருமை நித்யானந்தாவையே சேரும்...!
twitter.com/ameerfaj
`நியூஸ்’ஐப் பார்த்து நியூஸ் தெரிஞ்சுகிட்ட காலம் போய் இப்ப `மீம்ஸ்’ஐப் பார்த்து நியூஸ் தெரிஞ்சுக்கிறோம்!
twitter.com/thoatta
அமைக்கப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், மேற்கொள்ளப்படும்... யப்பா டேய் எத்தனை `படும்’டா, ஏற்கெனவே 4 வருசமா ரொம்பவே பட்டுக்கிட்டுதான் இருக்கோம் #budget2018
facebook.com/Vignesh T
ஞாயிறு கமகமக்குது. மற்ற நாள்களின் மதியங்கள் மண்டை வழியாகவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் மூக்கு வழியாகவும் உணரப்படுகிறது.

twitter.com/sashi16481
யார் சார் நீங்க? ஏன் எங்க வீட்டுக்குள்ளே நுழையறீங்க?
நகருப்பா, நான் போற இடத்துக்கு கூகுள் மேப் இந்த வழிதான் காட்டுது!
twitter.com/Thaadikkaran
நான் உங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர்ங்க என்பதே கடைகளில் அதிகமாகச் சொல்லப்பட்ட பொய்!
twitter.com/stalinsk50
ஸ்கூல் படிக்கிற காலத்திலயே நான் நிறைய படிச்சு ஏழை மக்கள காப்பாத்தணும்னுதான் நினைச்சேன்... ஆனா படிச்சதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது, என்னைய காப்பாத்திக்கிறதே பெரிய கஷ்டம்னு!
twitter.com/BoopatyMurugesh
“எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்”ன்னு பேங்க்ல இருந்து SMS அனுப்பியிருக்கான்... அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. நீ எவனுக்கும் கடன் குடுத்து ஏமாறாத!
twitter.com/Thaadikkaran
முதல்ல தலையைச் சுத்திக் காதைத் தொட்டு ஸ்கூல்ல சேர்ந்தோம், இப்போ ஊரைச் சுத்திக் கடன் வாங்கி ஸ்கூல்ல சேர்த்துவிடுறாங்க..! #பிரைவேட்ஸ்கூல்.
twitter.com/HAJAMYDEENNKS
படிப்படியாக உயர்ந்து முதலமைச்சர் நிலையை அடைந்துள்ளேன் - எடப்பாடி. ஆமா, போயஸ்கார்டன் வீட்டுப்படி, தினகரன் வீட்டுப்படி, திவாகரன் வீட்டுப்படி..!

facebook.com/Vinayaga Murugan
சீனாவோட சண்டை வந்தா எங்க படைகள் எந்நேரத்திலும் தயார் என்று ஆர்எஸ்எஸ் ஆட்கள் அடிக்கடி சொல்வாங்க இல்லையா? சண்டை வராத நேரத்தில் இப்படிக் காட்டுத்தீ, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும்போது இவங்களை அங்க அனுப்பினா, இவங்க வீரசாகசத்தையும் மக்கள் பார்த்த மாதிரி இருக்கும். நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தினதா இருக்குமில்லையா?
twitter.com/kumarfaculty
தண்ணீர் லாரிகளை உருவாக்கியது மணல் லாரிகளே..!
facebook.com/santhosh.narayanan.319
ரஹ்மான் இரவில் இசை அமைத்தார்;
ராஜா இரவுக்காக இசை அமைத்தார்.
twitter.com/withkaran:
கட்சியில முக்கியப் பேச்சாளர்கள், தலைவர்கள் பேசி முடிக்க, ரெண்டு நாள்கள் தேவைப்படுற ஒரே கட்சி தி.மு.கதான்!
twitter.com/Thaadikkaran
“குக்கர் என்றாலே 20 ரூபாய் நோட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது” - தமிழிசை. நோட்டா என்றாலே... சரிவிடுங்க, அதை எதுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு...
twitter.com/amuduarattai
பேருந்தில் நமக்குக் கால் வைக்க இடம் இருக்காது. ஆனால், கண்டக்டர் கண்களுக்கு மட்டும், பல ஏக்கர் இடம் உள்ளே காலியாக இருப்பதாகத் தெரியும்.

ttwitter.com/m3rcel
அ.தி.மு.க-வோட அறவழிப் போராட்டம்னா என்னண்ணே? அதாவது தம்பி, உண்ணாவிரதம் இருக்கிறமாதிரி போவோம்... பாதியில வந்திருவோம். ராஜினாமா பண்ற மாதிரி போவோம்... பாதியில வந்திருவோம்!
நீ சொல்றது அரைவழிப் போராட்டம்.
அதான்... அதான்..!
twitter.com/sultan_Twitz
``போராட்டங்களால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை” - தமிழிசை #அது சரி, நீங்க காண்டு ஆகுறீங்கல்ல... அது போதும்!
facebook.com/ Viyan Pradheep
ஸ்டாலின் உடல் எடை கம்மியா இருக்கிறதால் அடிக்கடி தூக்கிட்டுப்போயிடறாங்க. துரைமுருகனைத் தூக்க முடியுமா?
twitter.com/mekalapugazh
இணையம் கண்டுபிடிக்கப்பட்டதால் நம்முடைய நேரம் மிச்சமாகும்னு எப்படி நம்பப்பட்டதோ, அப்படித்தான் மதங்கள் தோன்றியபோது குற்றங்கள் குறையும் என நம்பப்பட்டிருக்கும்போல. இரண்டுமே பொய்யாய்ப்போனதே கசக்கும் உண்மை.

facebook.com/Ma Pandia Rajan
சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணுங்கன்னு சொன்னா, எந்த ஊர்லய்யா ‘எந்த சாமிக்கு’ன்னு கேப்பாங்க?
twitter.com/Gopi007twitz
Cute என்ற வார்த்தையை ஆண்கள் பெண்களிடத்திலும் பெண்கள் நாய்களிடத்திலும் பயன்படுத்துகிறார்கள். #Verified
twitter.com/amuduarattai
சைடு ஸ்டாண்டு மட்டும் இல்லையென்றால், நிறைய பேர் புல்லட் வாங்கியிருக்கவே மாட்டார்கள்.
twitter.com/viji_tamilachi
நாலு தோசை வாங்கும்போது கடைக்காரர்கிட்ட ‘ரெண்டு ரெண்டா தனித்தனியா கட்டுங்க’ன்னு சொல்லி அதிகமா சட்னி சாம்பார் வாங்குற முறையைக் கண்டுபிடிச்சது பூரா நம்ம பயலுகதான்!
twitter.com/its_kutty
அவள் என் வாழ்வில் வந்த பிறகுதான்...
100 ரூபாய்க்கு எல்லாம் சாக்லெட் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.

twitter.com/nelsonvijay08
அப்பாவை மார்ச்சுவரிக்கு அனுப்பியாயிற்று; மகனைப் பாதுகாப்பாக போலீஸ் ஜீப்பில் ஏற்றியாயிற்று. அவன் தேர்வெழுதிய பேனாவைத் தூக்கிலிட்டுவிடுங்கள். சமன்பாடு சரியாகட்டும்!
facebook.com/jvp.sachin
‘அ.தி.மு.க’ ரெண்டாகப் பிரிஞ்சுதான் ‘அ.தி.மு.க அம்மா அணி’, ‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா’ அணிகள்னு உருவாச்சு. அதுக்கப்புறம் அ.தி.மு.க அம்மா அணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக மாறுச்சு. இப்ப என்னன்னா, அந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துல சண்டைவந்து திரும்பவும் அப்படியே ரிவர்ஸ்ல போயி ‘அ.தி.மு.க அம்மா அணி’யைப் புதுப்பிச்சிருக்காங்க.இப்படியே ரிவர்ஸ்ல போனா... அ.தி.மு.க., ஜெ - ஜா அணிகள்., அ.தி.மு.க., தி.மு.க., தி.க-ன்னு போயி கடைசியில ‘நீதிக்கட்சி’லதான் நிப்பாங்க போல.
twitter.com/iamkarki
நீட் விஷயத்துல ஒரு பக்தர் கேட்கிறாரு. “செம்மரம் வெட்டப் பக்கத்து ஸ்டேட் போவீங்க. மீன் பிடிக்கப் பக்கத்து நாட்டுக்கே போவீங்க. படிக்கப் போக மாட்டீங்களா”ன்னு.
ஏம்ப்பா சாமி. அணு உலை வைக்க இங்க இடமிருக்கு. மீத்தேன் எடுக்க, நியூட்ரினோ ஆய்வு செய்ய இடமிருக்கு. தேர்வு நடத்த மட்டும் இங்க இடமில்லையா?

facebook.com/rajeev.rajamani.9
இன்னுமா பள்ளிகளையும் கல்லூரிகளையும் வணிகர் சங்கத்துல சேர்க்கலை?
twitter.com/arumugamsony
ஒரே கன்ஃப்யூசன்... எவன்கிட்ட பேசினாலும் பிஜேபி மேல கொலை வெறியோட இருக்கானுங்க. அப்புறம் யார்தான்டா அவங்களுக்கு ஓட்டு போடறது?
twitter.com/HAJAMYDEENNKS
“பிரபாகரன் வடிவில் சீமானைப் பார்க்கிறேன்” - பாரதிராஜா #தாமதிக்காமல் வாசன் ஐ கேர் செல்லவும்!
twitter.com/manipmp
டி.வி ரிமோட்தான் முதல் வாரிசுரிமைப் போரை உருவாக்குகிறது.
facebook.com/karthekarna
மாடியில நின்னு ‘அப்பா வந்துட்டாங்க’ன்னு சந்தோஷமா கத்தியதைக் கேட்டு, ‘புள்ளை தேடுதே’ன்னு மூச்சிறைக்க மூணுமூணு படியா தாவி ஓடிவந்தா, ‘கேம் விளையாட போன் கொடுப்பா’ங்குது.

twitter.com/sharabaanuchand
கர்நாடகாவில் ‘காலா’ படத்துக்குத் தடை. ரத்தம் கொதிக்கிறது. போராடத் துடிக்கிறது. ஆனால்... நாடு சுடுகாடாய்ப் போயிருமே என்று தயக்கம்...
facebook.com/puthiyaparithi
‘காலா’ படம் பாத்தவங்க எல்லாம் நானா படேகர்தான் ரஜினின்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நானா படேகர் இஸ் மோடிஜி. உண்மையில் சாயாஜி ஷிண்டேதான் ரஜினி. ‘குமாரு... யாரு இவரு?’ இரஞ்சித்தின் தீர்க்க தரிசன ‘சம்பவம்.’
facebook.com/iam.suriyaraj
எஸ்.வி.சேகர் மரு வெச்சுக்கிட்டு சுத்தினாகூட மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!
twitter.com/Suba_Vee
50 நாள்களைக் கடந்தும் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி.சேகருக்குத் தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து ஒரு பாராட்டு விழா நடத்தினால் என்ன!

twitter.com/abuthahir707
இந்த இணைய காலத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் தமிழ் ராக்கர்ஸுக்கே முதலிடம்.
facebook.com/boopath23
எனது பொறுமைக்கு, சின்ன வயசுல தூர்தர்ஷன் டிவி பார்த்ததும் ஒரு காரணம்தான்!
twitter.com/sendil__
செய்தி: மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை - அமைச்சர் விஜயபாஸ்கர். சாதா சிகரெட் உடல்நலனுக்கு நல்லதுபோல, இத்தன நாளா இது தெரியாமப்போச்சே!
www.facebook.com/ டி.வி.எஸ். சோமு
பலவிதமாக பிரபாகரன் துப்பாக்கி சுட தனக்குக் கற்றுத்தந்ததாக சீமான் கூறுகிறார். அப்படியே இருக்கட்டும். யாரைச் சுடுவதற்காகக் கற்றுக் கொடுத்திருப்பார்? அவர்களில் யார் யாரை இதுவரை சீமான் சுட்டிருக்கிறார்?
facebook.com/ திருப்பூர் குணா
அவர்கள், நம்மைக் கண்களை மூடி யோகா செய்யச் சொன்னார்கள். நாம் கண்களைத் திறந்தபோது நமது நிலங்களைக் காணவில்லை; காற்றையும் குடிநீரையும்கூடக் காணவில்லை. பதறி நாம் கேட்டபோது அவர்களின் கையில் துப்பாக்கி முளைத்திருந்தது. துப்பாக்கிகளின் மத்தியில் எப்படி யோகா செய்வது?
facebook.com/senthil.nathan.372
தமிழன் என்று நிரூபிக்க, இன்னும் எத்தனை விஷயங்களை ஷேர் செய்ய வேண்டியிருக்குமோ, தெரியலையே!
facebook.com/Mathimaran V Mathi
இதுவேதான் அது!
வேகமாகப் போகவேண்டும் என்பதால், எதிரில் வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரையும் ஏற்றிக் கொன்றுவிட்டுக் கொடூரமாகப் போகிற காருக்கும், சேலத்திலிருந்து சென்னைக்கு விரைவாக வரவேண்டும் என்பதற்காக விவசாய நிலங்கள், மரம், செடிகொடிகள், இயற்கைவளங்களை அழித்து சாலை அமைப்பதும் ஒன்றுதான்.
twitter.com/ArunkumarTNR
தமிழக வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள்தான் சமூக விரோதிகள்.
- தமிழிசை.
தமிழிசை மேடம், அது கண்ணாடி!
www.facebook.com/naaraju0
அவனவன் அடுத்த வாரத்துக்குப் பெட்ரோல் (பெட்ரோல்ன்னா, வண்டிக்கு ஊத்துற பெட்ரோல்!) வாங்க பர்சனல் லோன் போடலாமான்னு யோசிச்சுட்டிருக்கான். இந்த இந்து மக்கள் கட்சி, அனுமான் சேனா, இராமர் வானரா மாதிரி பாஜகவோட பிரதர், சிஸ்டர் & கசின் கன்சர்ன்கள் என்னாடான்னா, பெட்ரோல்ல வெடிகுண்டு செய்றதோட இல்லாம, அதை அவிய்ங்க வீட்டுக்குள்ளயே போட்டு வேற விளையாடிக்குறாய்ங்க... பகுமானக் கோழி, பறந்துக்கிட்டே முட்டை போடும்ன்றது வாஸ்தவம்தான். அதுக்காக, ஏரோப்ளேன்ல போயா போட்டு வைக்கும்!

twitter.com/Aruns212
பெண்கள் கற்றுக்கொண்ட முதல் தற்காப்புக்கலைக்கு ‘அண்ணா’ என்று பெயர்.
twitter.com/Jeytwits
மௌனம் சம்மதம்னு மட்டும் அர்த்தம் இல்லை. ‘வாயில நல்லா வருது...சொல்ல வேணாம்னு பார்க்கிறேன்’ என்பதாய்க்கூட இருக்கலாம்.
facebook.com/vijay.neruda
ஏண்டா! உங்காளு அமித்ஷா வந்திருக்காரு. பாக்கப் போகலையா?
அந்தாளுனாலதான் நான் பானிபூரி விக்கவே வந்தேன்... போயா அங்கிட்டு...
facebook.com/thegretviji
எப்ப பெட்டுக்கு பக்கத்தில கையெட்டும் தூரத்தில் விக்ஸ், வாலினி ஸ்ப்ரே, மூவ், டவல் போன்றவை இடம்பிடிக்குதோ அப்போதிலிருந்து வயசாகுதுன்னு ஏத்துக்கணும்.
facebook.com/RedManoRed
மிஸ்டர் கடைக்காரா!
எதை வாங்கினாலும் சில்லறைக்குப் பதிலாக ஹால்ஸ் மிட்டாய் தருகிறாயே... ஹால்ஸ் வாங்கிவிட்டு சில்லறை கேட்டால் என்ன தருவாய்?
twitter.com/kathir_twits:
கல்யாணத்துக்கு கோட் போட்டுப் போறதுக்கு முன்னாடி, அங்கே வரும் கேட்டரிங் சர்வீஸ் பசங்க எந்தக் கலர் கோட் போட்டு வர்றாங்கன்னு விசாரிச்சுட்டுப் போறது ரொம்ப நல்லது!
twitter.com/thoatta

தங்கமகன் (1983) – 125 Days
உழவன் மகன் (1987) – 150 Days
தேவர்மகன் (1992) – 175 Days
பிதாமகன் (2003) – 125 days
நான் ஏழைத் தாயின் மகன் (2014)
– Still running successfully :-)
twitter.com/hiphopkarthi24
வேலைக்குச் செல்லும் ஒருவன் காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைக் கடிகார முட்களே முடிவு செய்கின்றன.
twitter.com/amuduarattai
மனைவியிடம் நம் மொபைல் இருக்கும் நேரம், ஒரு திகில் படத்தைப் பார்த்ததைவிட அதிக திகில் உணர்வைத் தரவல்லது.
twitter.com/gips_twitz
எப்பொருள் சீமான்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
twitter.com/mekalapugazh
கலைஞர் அழவைத்தார்...
எடப்பாடி கோபப்பட வைத்தார்...
ஸ்டாலின் போராடி சிரிக்கவைத்தார்...
#கலைஞர் மரணநாள்.
facebook.com/umar.ibu.3
கலைஞர் சமாதியில காதை வைத்துக் கேட்டால் கடிகாரச் சத்தம்லாம் கேக்காது. போராட்டச் சத்தம்தான் கேக்கும்...
twitter.com/SuDLX
பாஜக உருவாக்கிக்கொண்டிருப்பது ஒரு கோரமான முன்னுதாரணம். தெற்கில் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் எனும்போது ஆட்சி மாறினாலும் இந்த ஓரவஞ்சனை தொடர வாய்ப்பிருக்கிறது. ஆக நம் காலத்திலேயே திராவிடநாடு சாத்தியப்படலாம். ஆச்சர்யப்படுவதற்கில்லை.
twitter.com/BoopatyMurugesh
பூசாரி: அர்ச்சனை பண்ண பேர், நட்சத்திரம் சொல்லுங்கோ...
மீ : அது இருக்கட்டும், சாமி சிலை ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு சொல்லுங்கோ...
twitter.com/Stabbercell2
காசு கம்மியா இருந்தா மிஷின கட்டிப்புடிச்சு கொஞ்ச நேரம் அழுதுட்டு வருவானுங்கபோல... #எவ்ளோ நேரம்டா!
twitter.com/motheenfarooq
தொலைநோக்குப் பார்வை என்பது தூரத்தில் ட்ராஃபிக் போலீஸ் பிடிப்பதை அறிந்து யூ டர்ன் எடுத்து மாற்றுப் பாதையில் செல்வதே...
twitter.com/Thaadikkaran
வீட்ல நடக்குற மாமியார் கொடுமையைவிட விஜய் டிவில நடக்குற மாமியார் கொடுமைதான் அதிகமா இருக்கு..!
facebook.com/Divya Bharathi
கடல் பார்த்தல் என்பது இப்போதெல்லாம் துயரக் கதை ஒன்றை வாசித்தல் போலாகிவிட்டது. கடலில் மாயமான யாரோ ஒருவர், கடலும் வானும் சேரும் அந்த இடத்தில் இன்னும் நீந்திக்கொண்டி ருக்கக்கூடும்...
facebook.com/Sesu Gunaseelan
உறவுக்காரங்க வீட்ல பெண்குழந்தை பிறந்திருக்கு. நல்ல “ட்ரெண்டியா” ஒரு பேரு கேட்குறாங்க #பாசிசபாஜகஒழிக-ன்னு வைக்கச்சொல்லப் போறேன்.
facebook.com/Aadhavan Dheetchanya
வண்டியை எடுக்கவே முடியாதபடி பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவிட்டு 8 வழி / 80 வழிச் சாலைகளை அமைக்கிறார்கள்.
twitter.com/RaguC
செங்கிஸ்கான் என்ற பெயர் இப்போது உச்சரிக்கப்பட்டாலும் குலைநடுங்கும் கூட்டமுண்டு. பெரியார் பெயருக்கும் அப்படி ஒரு வரலாறு உண்டு. முன்னது வாள் கொண்டு சமைத்தது, பின்னது தன்மான உணர்வால் அமைந்தது. #HBDPeriyar140
facebook.com/Umamahesh varan Panneerselvam
Profile picture மாத்துறோம்னா என்ன அர்த்தம்? ஆபீஸ்ல ஒருத்தன் கூலிங் கிளாஸ் எடுத்துக்கிட்டு வந்திருக்கான்னு அர்த்தம்...
twitter.com/periyardhasan7
பெரியார் எதை உயர்த்தினார் என்பவர்களுக்கு...இடுப்பில் இருந்த துண்டைத் தோளுக்கு உயர்த்தினார் அல்லவா?
twitter.com/IrfanIliyas
மூணு வயது மகள்கிட்ட பேசலாம்னு வீடியோ கால் பேசினேன். ‘அப்பா, உன்ன யாரு போனுக்குள்ள வெச்சது? வீட்டுக்கு வா’ன்னு கூப்பிடுகிறாள், நான் வெளிநாட்டில் இருப்பது தெரியாமல்.
facebook.com/Latha Arunachalam
ஒரு காதல் செய்துவிடுகிறோம்... மற்றவை எல்லாம், போலச் செய்கிறோம்.
facebook.com/Ilango Krishnan
மனைவி: இந்த இலக்கியவாதிகள் எல்லாம் ஏன் எதைப் பற்றிப் பேசினாலும் உடனே அதைப்பற்றி ஒரு கருத்து சொல்றீங்க?
நான்: அதாவது, சிந்தனையின் செயல்தளம் மொழியில் இருக்கிறதால...
மனைவி: போதும் நிறுத்து... நான் ஒரு கடுப்புல அதை உன்னிடம் சொன்னேன். உடனே அதுக்கும் வாசிக்காதே...
twitter.com/shivaas_twitz
எந்தக் காலை முதலில் வைப்பது என்ற குழப்பம், கோயிலில் நுழையும்போது மட்டுமல்ல, எஸ்கலேட்டரில் ஏறும்போதும் வருகிறது..!
twitter.com/thoatta
விஜய் சேதுபதி ரசிகர்கள் பாவம், மாசம் ரெண்டு தடவை பேனர் கட்டணும். ஆனா சிம்பு ரசிகர்களுக்கு லக்கு. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து, 5 வருசத்துக்கு ஒரு பேனர் வெச்சா போதும்.
twitter.com/Kadharb32402180
லட்சம் லட்சமா செலவு பண்ணிக் கல்யாணம் பண்றானுங்க; ரெண்டு நிஜாம் பாக்கு கேட்டா மொறைக்கிறானுங்க. என்னமோ போங்கடா!
twitter.com/gips_twitz
பள்ளிக்கூடத்துக் காலக் காதலல்லாம் மறக்காம இருக்கானுக; பத்து நாள் முன்ன கடனா வாங்கின பத்து ரூபாயை மட்டும் மறந்துறானுக...!
twitter.com/comman_tamilan
வீட்ல cook பண்ணி சாப்பிடுறவங்களவிட book பண்ணி சாப்பிடுறவங்க அதிகமாயாச்சு...
www.facebook.com/rajeshwar.k.jesh
நீ கேட்ட கேள்விக்கு வந்த பதில் புரியலைனா அது ஆண்டவர்! நீ கேட்ட கேள்வியே புரியலைனா அது தலைவர்!
facebook.com/Barakath Ali :
தொண்டர்கள் அவர்கள் பக்கம்... டெண்டர்கள் இவர்கள் பக்கம்!
twitter.com/gips_twitz
அடுத்தவங்க கதையைத் திருடுற இந்தக் காலத்துலதான் மேடைக்கு மேடை சுயமா யோசிச்சுக் கதை சொல்லுற சீமானும் இருக்காரு..!
facebook.com/Sathya Subramani
`தீவாளிக்கு சக்திமான் ட்ரஸ் வேணும்’னு கேட்டு மிதி வாங்குனவனெல்லாம் கையத் தூக்கு!
facebook.com/Buhari Raja
ரெண்டுமே ஃப்ளாப்னு தெரிஞ்சாலும், எது அட்டர் ஃப்ளாப்னு ஒரு சண்டை நடக்கும். அதெல்லாம் அந்தக்காலம்.
ஆதி vs பரமசிவன் காலம்.
facebook.com/டி.வி.எஸ். சோமு
இலவச மிக்ஸி கிரைண்டர் தப்புன்னேவச்சுக்குவோம்.. இப்படி வாங்கற நிலையில இருக்கிற மக்கள்ட்ட நூறு ரூபா டிக்கெட்ட ஆயிரத்தைந்நூறுக்கு அபாண்டமா விக்கிறது கேவலம் இல்லையா ஆப்பீசர்ஸ்?
facebook.com/Mari Selvaraj
இன்னும் எத்தனை உயிரை நீங்கள் பிடுங்கி அச்சுறுத்தினாலும் நிச்சயமாக ஏதோ ஒரு காதல்தான் உங்கள் அருவருப்பான சாதியின் கழுத்தை அறுத்துத் தெருவில் வீசி எறியப்போகிறது. — காதல் கொள்; சாதியைக் கொல்.
twitter.com/sweetsudha1
ஆண்களின் நினைவுசக்தி ரொம்ப விசித்திரமானது. காலையில் வாங்கி வரச்சொன்ன வீட்டு உபயோகப் பொருள்கள் மாலையில் நினைவு இருக்காது, ஆனால், 12 வருஷத்துக்கும் முன்னால் பிரிந்த காதலியை மட்டும் மறக்கவே மாட்டார்கள்!
twitter.com/Kamal Haasan
கஜா புயல் கடந்த பூமியைப் பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.