
வலைபாயுதே

facebook.com/Prakash Thangam
மதம் என்பதே அப்டேட் செய்யப்படாத அரதப் பழசான வாழ்வியல் முறை.. அதில் தற்கால நடை முறைக்கு ஏற்ற சிறந்த விஷயங்களை வைத்துக் கொண்டு, தேவையில் லாததை விட்டொழிக்கலாம்.. அதற்கு வெளிப்படையான உரையாடல் தேவை. ஆனால் மதங்களின் பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டினால் வித்தியாசமில்லாமல் அனைத்து மதக்காரர் களுக்கும் மனம் புண் படுகிறது. அலைபேசிக்கு மிகவும் சமீபத்திய அப்டேட் ஆன சாப்ட்வேர் வேண்டும், ஆனால், வாழ்க்கை முறைக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட விதிமுறை களைப் பிடித்துத் தொங்கு வோம் என்ற ஹிப்பொகிரஸி மாறும் வரை இங்கு மிக எளிதாக கலவரம் தூண்டி ஒரு சிறு குழு தொடர்ந்து ஏய்த்துப் பிழைப்பதைத் தடுக்க இயலாது.

https://twitter.com/SettuOfficial
சின்ன வயசுல பத்துப் பேரு காசு போட்டு இந்த பால வாங்குவோம். இப்போ காசு இருக்கு. ஆனா பத்துப் பேரத்தான் வெளையாட வர வைக்க முடியல.
facebook.com/Rajagopal Subramaniam
“கருணாநிதியும் ஜெயலலிதாவும் தற்போது இல்லை, எனவே வியூகத்தை மாற்றியுள்ளோம்” - அன்புமணி ராமதாஸ். ஆமாம், அவர்கள் உயிருடன் இருந்தபோது அவர்களைவிடச் சிறந்த தலைவராக நான் இருக்க முடியும் என எண்ணி தனியாக நின்றேன். தற்போது எடப்பாடியை விடச் சிறந்த முதல்வராக என்னால் இருக்க முடியாது என்ற உண்மை புரிந்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.
facebook.com/Mano Red
பெண்களைப் பற்றிக் கருத்து சொல்லும்போது பெண்களுக்குக் கோபம் வருவது இயற்கையானது. அதைத் தார்மிகமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பெண்கள் பெயரில் ஃபேக் ஐடியில் சுற்றும் ஆண்களுக்கும் கோபம் வருவது மிகவும் அந்நியமாக இருக்கிறது. கேரக்டராவே மாறிட்டானுக போல.

twitter.com/sindhan
இருப்பதிலேயே மிகக் குறைவான செயல்பாடு கொண்டிருக்கும் எம்.பி நீங்கள்தான் எனப் புள்ளி விவரங்களைச் சுட்டிக் காட்டும் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ஆம் என பதில் சொல்கிறார் அன்புமணி. அதுக்கு நீங்க ஆமா என பதில் சொல்லக்கூடாது, ஏன் எனச் சொல்ல வேண்டும் திருவாளர் அன்புமணி #சென்றாயன் மொமன்ட்
twitter.com/RagavanG
துப்புரவுத் தொழிலாளர் களுக்குச் செய்யும் மரியாதை அவர்கள் காலைக் கழுவுவதல்ல. அவர்களை அந்தப் பரம்பரைத் தொழிலில் இருந்து மீட்டு கல்வி, வேலை, வாழ்க்கைத் தரம் அனைத்திலும் முன்னேற்றுவதே.
twitter.com/HAJAMYDEENNKS
பிரஸ்மீட்ல அன்புமணி பதற்றமாக இருந்துட்டு கேள்வி கேட்கும் நிருபர் களைப் பார்த்து ‘`பதற்றமா இருக்கீங்க... தண்ணியைக் குடிங்க’’ன்னு சொல்றாரு..நீங்க முதல்ல மேங்கோ ஜூஸ் குடிங்க ப்ரோ.
facebook.com/இந்திரா கிறுக்கல்கள்
“எவ்ளோ சம்பளம்?”க்கு அடுத்தபடியா கடுப்பேத்துற கேள்வி “ஆன்லைன்ல என்ன பண்ற?”
www.facebook.com/Shalini
அந்தக் குட்டிப் பாப்பாவின் அப்பா சொன்னார், “என் பொண்ணு உங்களை மாதிரி வரணும் டாக்டர்” என்று. எல்லா ஆண்களுக்கும் அவர்களின் மகள்கள் என்னை மாதிரி இருப்பது பிடிக்கிறது. ஆனால் மனைவி மட்டும்... இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமோ?!

facebook.com/saravanakarthikeyanc
தீயில் கை வைக்கக்கூடாது என்பதும் தீயில் கை வை என்பதும் இரண்டுமே திணிப்புதான். ஆக, குழந்தைகள் விஷயத்தில் திணிப்பு கூடாது என்பதல்ல; தவறான திணிப்பு கூடாது என்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.
twitter.com/Annaiinpillai
தமிழக மக்களும் ஊடகங்களும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை
- அன்புமணி ராமதாஸ்
# அண்ணன், ஓவியாவ மறந்துட்டிங்கண்ணே?!

twitter.com/yugarajesh2
“ஓரளவிற்குத்தான் பொறுமையாக இருப்போம்” -சின்னம்மா. “எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு” -சின்னையா
facebook.com/Karunakaran Karthikeyan
ஒரு கூட்டணினா அதைப் பார்த்து மற்ற கட்சிகள் பொறாமைப்படுற மாதிரி, பயப்படுற மாதிரி அமையணும். இங்க என்னடானா, ‘யார் லவ் பண்ணுனா என்ன, நமக்கு அந்தக் குடும்பம் நாசமா போனா சரி’ன்னு சந்தோசப்படற அளவுல இருக்கு.
twitter.com/mundaasu
உடன்பிறந்தோன், அப்பா, கணவன், தாத்தான்னு எந்த உறவு முறையிலும், எங்கே தன்னைவிடச் சிறந்தவனாக வேறொருவனை எண்ணிவிடுவாளோ என்ற ஆணின் அச்சமும், தன்னம்பிக்கையின்மையும் அடக்குமுறையின் அடித்தளம்.
சைபர் ஸ்பைடர்