Published:Updated:

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்
பிரீமியம் ஸ்டோரி
News
போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

கலர்ஸ் தமிழ் வழங்கும் இரு புதிய தொடர்கள்!

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

கலர்ஸ் தமிழ் வழங்கும் இரு புதிய தொடர்கள்!

Published:Updated:
போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்
பிரீமியம் ஸ்டோரி
News
போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்
போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எஞ்சியுள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை சின்னத்திரையில் பிரதிபலிக்க வருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்கும் ‘தறி’.

ளிய குடும்பத்தைச் சேர்ந்த கதிரேசன், ஒரு நாணயமான கைத்தறி நெசவாளர். சுவாமிநாதன், நெய்யப்பட்ட துணிகளை நெசவாளர்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்யும் வணிகர். கைத்தறி நெசவாளர்களின் கலைக்கு நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில், மின்சாரத் தறிகளின் வருகை கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இதனால் தனது சந்ததியினருக்கு இந்தக் கைத்தறித் தொழிலே வேண்டாம் என முடிவெடுக்கிறார் கதிரேசன்.

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதையின் தலைவியான, கதிரேசனின் மகள் அன்னலட்சுமிக்கோ கைத்தறியின் மீது தீராத காதல். தன் தந்தையின் கண்டிப்பையும் மீறி கைத்தறி தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வையும் முன்னேற்ற வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருகிறாள். காதுகேளாத, வாய்பேச முடியாத அன்னலட்சுமியின் தங்கை வாணிதான் அவளின் ‘பெஸ்ட் பிரெண்ட்’. தங்கை, தந்தை, தறி என அன்னலட்சுமியின் வாழ்க்கை நெய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்படுகிறது ஒரு புதிய சவால்!

துணிக்கடை முதலாளியான சுவாமிநாதனின் மகள் நட்சத்திரா வெளிநாட்டில் படித்து முடித்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள். காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் உள்ள கைத்தறிகளை அகற்றி அவற்றை மொத்தமாக மின்சாரத் தறிகளாக மாற்றி, உலகளவில் காஞ்சிபுரத்து சேலைகளை வணிகம் செய்யும் பெருமுயற்சியில் இறங்குகிறாள்.

கைத்தறி நெசவை முன்னேற்றத் துடிக்கும் அன்னலட்சுமி, அதை முழுமையாக அழிக்க நினைக்கும் நட்சத்திரா... இருவருக்கும் இடையிலான பரபரப்பான போட்டியை, காஞ்சிபுரத்தின் கலையழகு கலந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்கவுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நட்சத்திரா மீடியா ஒர்க்ஸ் வழங்கும் ‘தறி’யின் ஓசையைக் கேட்கத்தவறாதீர்கள்!

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

ணவன் போலீஸாகவும் மனைவி குற்றவாளியாகவும் இருந்தால் என்ன நடக்கும்? ஒற்றை வரியில் நம்மைக்கட்டி ஈர்க்கிறது கலர்ஸ் தமிழ் வழங்கும் ‘மலர்’ தொடரின் கதைச்சுருக்கம்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி அதிகம் வாதிக்கப்படும் இந்த நேரத்தில், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மனப்போராட்டங்களைக் காட்சியில் கடத்தவிருக்கிறது மலர்.

கதையின் நாயகியான மலர், மலரைப் போன்ற மென்மையான அமைதியான பெண். உரக்கப் பேசினாலும் மிரண்டுபோகும் மலர், காமுகன் ஒருவனிடம் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொள்கிறாள். இக்கட்டான தருணத்தில் மானத்தைக் காக்க அவனைக் கொலையும் செய்துவிடுகிறாள். இது மலருக்கும் அவள் தங்கைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இதற்கிடையில் வீட்டில் மலருக்குத் திருமணப் பேச்சு நடைபெறுகிறது, மாப்பிள்ளையோ மிகவும் கறாரான, கண்ணியமான போலீஸ் அதிகாரி கதிர்.

போராடும் அன்னலட்சுமி... தவிக்கும் மலர்

தந்தையின் பேச்சை மீறமுடியாமல், மலர் கதிரைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஏற்கெனவே அஞ்சி நடுங்கி வாழ்ந்துவரும் மலருக்கு, தான் செய்த கொலை வழக்கை விசாரிப்பதே தன் கணவர்தான் எனத் தெரியவருகிறது. குற்றவுணர்ச்சி ஒரு பக்கம், தவறான ஒருவனால் தாக்கப்பட்ட அதிர்ச்சி மறுபக்கம், இதனால் ஏற்படும் ஆண்களின் மீதான நம்பிக்கையற்ற மனநிலை எனப் பலதரப்பட்ட உணர்ச்சிக் குவியலுக்குள் சிக்கித் தவிக்கிறாள் மலர்.

கதிரின் முரட்டுத்தனமான அன்பு, மலரின் மிரட்சித்தனமான மனநிலை, இதற்கு நடுவில் இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்ததா? கதிர் விசாரித்துவரும் வழக்கின் நிலை என்ன? விறுவிறுப்பான திரைக்கதையோடு நம்மை அசரவைக்க வருகிறது ‘மலர்’. கதிர் தொட்டு, மலர் மலர்ந்ததா, பொசுங்கியதா? திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள `மலர்' தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism