அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
News
“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

“உண்மையைச் சொன்னால் அப்பா சாருஹாசன்,  சித்தப்பா கமல், மகேந்திரன் சார் எல்லோருக்குமே சொந்த ஊர், பரமக்குடி.  நான்  திரைப்படக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, சாரு ஹாசன் ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்புக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார். சென்னை அருணாச்சலம் ஸ்டுடியோவில் ‘போடா போடா பொக்கே... எள்ளுக் காட்டுக்குத் தெக்கே...’ பாடலைப் படமாக்கிக் கொண்டிருந்தார், மகேந்திரன் சார். ‘என்ன பண்ணிக்கிட்டி ருக்க’ என என்னைக் கேட்க, ‘போட்டோகிராபி கோர்ஸ் படிக்கிறேன்’ என்றேன். ‘என்னத்த படிச்சிக்கிட்டு... நம்ம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடு’ என்றார். பிறகு, நான் படித்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் முறையாக அனுமதி வாங்கிக்கொண்டு ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டேன். தொடர்ந்து ரஜினி சார் நடித்த ‘ஜானி’ படத்திலும் வேலை பார்த்தேன்.

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

என் அப்பா சாருஹாசனுக்கும், சித்தப்பா கமலுக்கும் நான் மகேந்திரன் சாரிடம் வேலை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம். இப்போது நடிக்க வருவதற்கு முன்பு ஸ்கிரீன் டெஸ்ட் வைத்து போட்டோ எடுப்பார்கள். அப்போது, எனக்குத் தெரியாமலே என் முகத்தைக் கேமராக் கோணத்தில் பார்த்து, ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறார். கேமராமேன் அசோக்குமாரிடம், ‘நான் உங்க அசிஸ்டென்ட் சுஹாசினியை நடிக்க வைக்கலாம்னு இருக்கேன். நீங்க அதைச் சொன்னா, நல்லா இருக்கும்’ என்றிருக்கிறார். அசோக்குமார் சார் என்னிடம் விவரத்தைச் சொல்லும்போது, எனக்கு அதிர்ச்சி. தவிர, ‘எப்படி நடிப்போம்னு எல்லாம் யோசிக்காத. நீ ரஜினி சாருக்கு எங்கே நிற்கணும், நடக்கணும்னு சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தியே... அப்போவே ஷூட்பண்ணி நானும், மகேந்திரனும் பார்த்துட்டோம்’ என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிட்டு, மீண்டும் கல்லூரிக்குச்  சென்று படித்தேன். அப்போதுகூட,  ‘சுஹாசினியை யாரும் கம்பெல் பண்ண வேண்டாம்’ என்று மகேந்திரன் சார் பெருந்தன்மையாகச்  சொல்லிவிட்டார். பிறகு நான் பிரபலமான நடிகையானது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். குறிப்பாக, ‘சிந்து பைரவி’ பார்த்துவிட்டு மனம்விட்டுப் பாராட்டினார்.

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி
“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி



‘ஜானி’ படத்தின் ஒரு டபுள் ஆக்ட் காட்சியில் ஒரு ரஜினிக்கு இன்னொரு ரஜினி தீப்பெட்டியை எடுத்துப் போடவேண்டும். இதை எப்படிப் படமாக்குவது எனத் தெரியாமல், ஒளிப்பதிவாளருடன் விவாதத்தில் இருந்தார், மகேந்திரன் சார். ‘இந்தக் காட்சியை எப்படிப் படமாக்கினாலும் இடையில் விழும் கோட்டை மறைக்க முடியாது’ என்று கேமராமேன் சொல்லிவிட்டார். அப்போ VFX மாதிரி தொழில்நுட்பமெல்லாம் இல்லை. என்னை அழைத்து, ‘அடுத்த ஜெனரேஷன் நீ... சொல்லு, எப்படி எடுக்கலாம்?’ என்றார். நான் ஒரு பக்கம் கயிற்றைப் பிடித்துக்கொள்ள, மகேந்திரன் சார் இன்னொரு பக்கம் கயிற்றைப் பிடித்துக்கொண்டு என, சில டெக்னிக் செய்து அந்தக் காட்சியைப் படமாக்கினோம். என் தலைமுறை நடிகைகள் பலரும் ‘மீ டூ’ புகார்களைச் சொல்லாததுக்குக் காரணம், அந்தக் காலத்தில் மகேந்திரன் சார் மாதிரியான ஜென்டில்மேன் எங்களை வழி நடத்தியதுதான். என்னை மட்டுமல்ல, ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினியையும் அப்படித்தான் நடத்தினார். பெண்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்துப் பழகிய அற்புதமான இயக்குநர். எனக்கென்னவோ அவரை இன்னும் உயரத்தில் வைத்துக் கொண்டாட மறந்துவிட்டோமே என்கிற வருத்தம்தான் இருக்கிறது.”

- எம்.குணா, படங்கள்: ஸ்டில்ஸ் ரவி