Published:Updated:

``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு

``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு
News
``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு

"அவளுக்கு நேரடியா தாய்ப்பால் கொடுக்க முடியாது. பம்ப் பண்ணி எடுத்து அதை சிரஞ்சுல ஏற்றி டியூப்பை சுண்டுவிரலில் ஒட்டி வைச்சு ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும். இதுக்கு இடையில பால் கொட்டிடுச்சுன்னு அவளுடைய டிரெஸை கழட்டினா உடனே அவ உடம்பு ப்ளூ கலர்ல மாறிடும்."

Published:Updated:

``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு

"அவளுக்கு நேரடியா தாய்ப்பால் கொடுக்க முடியாது. பம்ப் பண்ணி எடுத்து அதை சிரஞ்சுல ஏற்றி டியூப்பை சுண்டுவிரலில் ஒட்டி வைச்சு ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும். இதுக்கு இடையில பால் கொட்டிடுச்சுன்னு அவளுடைய டிரெஸை கழட்டினா உடனே அவ உடம்பு ப்ளூ கலர்ல மாறிடும்."

``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு
News
``15 மில்லி பால் கொடுக்க ஒன்றரை மணி நேரமாகும்!'' - ’பூவே பூச்சுடவா’ கிருத்திகாவின் தாய்மை தவிப்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பூவே பூச்சூடவா' சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பவர் கிருத்திகா. அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `சூப்பர் மாம்' நிகழ்ச்சியில் தன் மகளுடன் சேர்ந்து கலக்கிக் கொண்டிருப்பவர். ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் பிறந்த தன் மகளை மிக மிகச் சிரமப்பட்டு தேற்றிக் கொண்டு வந்திருக்கிறார் கிருத்திகா. அதைப் பற்றி அவரிடம் பேசினோம்.

``சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் அட்மின்ல ஹெச்.ஆர் வேலை பார்த்தேன். அந்த சமயத்துலதான் சன் டிவியில் 'தேனிலவு' சீரியல் மூலமா ஆர்ட்டிஸ்டா மீடியாவில் என்ட்ரியானேன். ஒரு கட்டத்துக்கு மேல மீடியா ஆஃபர் நிறைய வர, ஹெச்.ஆர் வேலையை விட்டுட்டு நிரந்தரமா சின்னத்திரைக்குள்ள நுழைஞ்சுட்டேன்.

எங்க அம்மா இறந்து ஒன்றரை வருஷம் கழிச்சு எனக்கு கிடைச்ச பொக்கிஷம்தான் என் பொண்ணு ஶ்ரீகா. நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்ச அடுத்த நொடியில் இருந்து  நீங்க வேணும்னா பாருங்க எனக்குப் பெண் குழந்தை தான் பிறக்கப் போகுதுன்னு எல்லோர்கிட்டேயும் சொன்னேன். எனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும்... என் அம்மாவே எனக்குப் பொண்ணா பிறப்பாங்கங்குறதுல நான் ரொம்ப உறுதியா இருந்தேன். என்னுடைய அடுத்தடுத்த வளர்ச்சிக்கு என் பொண்ணுதான் காரணம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஶ்ரீகா என்னுடைய லக்கி கேர்ள்.

என் பொண்ணுக்கு டான்ஸ் மேல அதிகமா கிரேஸ் இருக்கு. எப்போ பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டே இருப்பா. இப்போ இரண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. இதுதவிர, ஜிம்னாஸ்டிக் கத்துட்டு இருக்காங்க. `சூப்பர் மாம்' ஷோவுக்கு முன்னாடியே இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் அவ ஸ்ட்ராங்காக இருக்கிறதுனால அந்த ரியாலிட்டி ஷோவுக்கு போகும்போது அவளுக்கு பெருசா எந்தப் பயமும் இல்லை. ஜாலியா என்ஜாய் பண்ணி ஒவ்வொரு டாஸ்க்கையும் பண்ண ஆரம்பிச்சா என்றவரிடம் ஶ்ரீகா பிறந்த விஷயம் குறித்து கேட்டோம்.

"ஶ்ரீகா பிறக்கும்போது 780 கிராம் தான் இருந்தா.  என்னுடைய ஐந்தாவது மாசத்துல தான் பாப்பா வீக்காக இருக்குறாங்குற விஷயத்தைப் பற்றி சொன்னாங்க. என் கூட பெரியவங்க யாரும் இல்லாதததுனால என்னால அதைப் புரிஞ்சுக்க முடியலை. என்னுடைய ஃப்ரெண்ட்கிட்ட இதைப் பற்றி சொல்லும்போது நான் ஆல்ரெடி பார்த்துட்டு இருந்த டாக்டர்கிட்ட போக வேண்டாம்னு சொல்லி வேறொரு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அங்கேதான் என்னை சீரியஸா கவனிக்க ஆரம்பிச்சாங்க. உனக்குக் கண்டிப்பா ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் தான் குழந்தை பிறக்கும்... மனசளவில் அதுக்கு ரெடியா இருன்னு சொல்லிட்டாங்க. 

என்னுடைய ஏழாவது மாசத்துல ஸ்கேன் எடுக்கப் போனேன். ஸ்கேன் எடுத்துட்டு சாயங்காலம் டாக்டரைப் பார்க்க வரலாம்னு கிளம்பிட்டேன். இதுக்கு இடையில் டாக்டர்கிட்ட என் ரிப்போர்ட்டை காட்டியிருப்பாங்க போல! அவங்க உடனே என்னை அட்மிட் பண்ண சொல்லியிருக்காங்க. நான் ரிட்டர்ன் வீட்டுக்குக் கிளம்பி போய்ட்டு இருக்கும்போது நர்ஸ் ஓடிவந்து இன்னைக்கே உங்களுக்கு சிசேரியன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாங்கன்னு சொன்னாங்க. எனக்கு என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்கவே கொஞ்ச நேரமாச்சு. வேகவேகமா ஆப்ரேஷன் தியேட்டர்ல இருந்து எல்லாத்தையும் ரெடி பண்ணாங்க. 12.30 மணிக்கு ஸ்கேன் சென்டர்ல இருந்தேன். 2.19 மணிக்கு ஶ்ரீகா பிறந்துட்டா. ஒருநாள் முழுக்க நான் சுயநினைவு இல்லாம இருந்தேன். ஶ்ரீகா ஆபத்தான கட்டத்துல இருந்தா. 

நான் கண் முழிச்சதும் என் குழந்தையைப் பார்க்க கூட்டிட்டு போனாங்க. அப்போ ஶ்ரீகாவைப் பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன். அவ ரொம்பவே பலவீனமா இருந்தா. ஒவ்வொரு தடவை பால் குடிக்கும்போதும் nicu-வில் குழந்தைக்கு கை, காலில் மாட்டியிருக்கிற ஊசியை எடுத்து, எடுத்து குத்துவாங்க. இதுக்கு இந்தக் குழந்தை பிழைக்காமலேயே இருந்துருக்கலாமேன்னுலாம் தோணும். 

நிறைய நாள் nicuவில் இருக்கணுங்குறதுனால நான் ஜெனரல் வார்டில் ஒரு பெட் எடுத்து இருந்தேன். அங்கே உள்ள நார்மல் குழந்தைகளைப் பார்த்துட்டு ஶ்ரீகாவைப் பார்க்குறப்போ ரொம்பவே நொந்துட்டேன். ஒருநாள் முழுக்க அழுதுட்டே இருந்தேன். நான் சின்ன வயசுல இருந்தே பெட் லவ்வர். எங்க வீட்டுல ஒரு நாய் வளர்த்தோம். அவனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போய் பல்லெல்லாம் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அவனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொஞ்ச, கொஞ்சமா வாயைத் திறந்து ஊட்டி விடுவேன். அவனால நடக்க முடியாது. படுத்த இடத்துலேயே யூரின், மோஷன்லாம் இருந்துடுவான். நான்தான் எல்லாத்தையும் கிளீன் பண்ணி அவ்வளவு கேரிங்கா அவனைப் பார்த்துக்கிட்டேன். அப்போ எங்க அம்மா என்கிட்ட, உன்னுடைய கருணை, சகிப்புத் தன்மை யாருக்கும் வராது கிருத்திகா.. உன் குழந்தையை நீ நல்லா பார்த்துப்பன்னு சொன்னது அன்னைக்கு அழுதுட்டு இருந்தப்போ ஞாபகம் வந்துச்சு. நாம ஏன் இவகிட்ட உள்ள குறையைப் பார்க்கணும். இவளுக்கு நல்ல அம்மாவா இவளை கேர் பண்ணி பார்த்துப்போம்னு முடிவெடுத்தேன். அன்னையிலிருந்து என் குழந்தை இப்படி இருக்குன்னு நான் அழுததே இல்லை. நான் பேசுறதுக்கு பயங்கரமா ரியாக்‌ஷன்ஸ் கொடுப்பா. அவ பண்ற சின்ன, சின்ன விஷயங்களையும் அந்தச் சமயத்துல நான் 99 கிலோ எடையில் இருந்தேன். ஶ்ரீகாவுடைய ஒன்றரை வயசுக்கு அப்புறமாகத்தான் கொஞ்ச, கொஞ்சமா எடையைக் குறைச்சேன்.

ஶ்ரீகா பிறக்கும்போது டார்க் டஸ்க்கி கலர்லதான் இருந்தா. அவ பிறந்து நாலு மாசம் அவளைக் குளிப்பாட்டலை. குளிப்பாட்டவும் கூடாது. அவளுக்கு நேரடியா தாய்ப்பால் கொடுக்க முடியாது. பம்ப் பண்ணி எடுத்து அதை சிரஞ்சுல ஏற்றி டியூப்பை சுண்டுவிரலில் ஒட்டி வைச்சு ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும். இதுக்கு இடையில பால் கொட்டிடுச்சுன்னு அவளுடைய டிரெஸை கழட்டினா உடனே அவ உடம்பு ப்ளூ கலர்ல மாறிடும். எப்பவும் கதகதப்போடவே அவளை வைச்சிருக்கணும். வெளியில இருந்து யாரும் ஶ்ரீகாவை பார்க்க அனுமதிக்கக் கூடாது. இப்படி அவளை 15 மில்லி பால் குடிக்க வைக்கிறதுக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரைக்கும் ஆகும். அதை முடிக்கிறதுக்குள்ள மறுபடி பால் கொடுக்கிற நேரம் வந்திடும். மறுபடி பிரஸ்ட் பம்பில் பால் எடுக்க ஆரம்பிச்சிடுவேன். அந்த டியூப்பை இரண்டு தடவைதான் யூஸ் பண்ண முடியும். ஆனா, ஒரு நாளைக்கு நாலு தடவை இப்படி என் பொண்ணுக்கு நான் பால் கொடுக்கணும். அதனால, ரெண்டு டியூப் வைச்சிருப்பேன். இரண்டையும் மாறி, மாறி கொடுத்துட்டு இருப்பேன். இப்படியே நாலு மாசம் அவளைப் பார்த்துக்கிறதுல பயங்கர ஸ்ட்ரெஸ் ஆனேன். என்னைப் பார்த்துக்க யாரும் இல்ல. அம்மா இறந்துட்டதுனால என்னை நானே கவனிச்சிதான் ஆகணுங்குற சூழல். ஒரு வாரத்துல நாலு நாள் அவளைக் கண் டாக்டரிடம் கூட்டிட்டுப் போகணும், ஊட்டச்சத்து மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போகணும், காது மூக்கு தொண்டை மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போகணும். உண்மையை சொல்லணும்னா வாழ்க்கையை வெறுத்த சமயம்னா அதுதான்! 

அவளோட ஆறாவது மாசத்துல நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். அவளை கவனிச்சுக்க இதுவரைக்கும் பல கேர் டேக்கர்ஸ் வந்திருக்காங்க. யாரைப் பார்த்தும் என் பொண்ணு மிரண்டது கிடையாது. அவளைப் பொறுத்தவரைக்கும் அவங்க எல்லாம்தான் அவளோட அக்கா, பாட்டி, சித்தி, பெரியம்மாவா இருந்திருக்காங்க. தனக்கான சூழலை சரியா கையாள என் பொண்ணு பழகிட்டா.

`சூப்பர் மாம்ல வர்ற ஶ்ரீகாதானே.. அழகா டான்ஸ் ஆடுன.. சூப்பரா இருந்தன்னு' ஸ்கூல்ல நிறைய பேர் சொல்லுவாங்கன்னு ஶ்ரீகா அடிக்கடி சொல்லுவா. அதுமட்டுமில்லாமல் அவளுடைய டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பா ஶ்ரீகாவைப் பார்த்துக்குறாங்க. ஶ்ரீகாவுக்கு இவ்வளவு பேக்ரவுண்ட் ஸ்டோரி இருக்குன்னு சூப்பர் மாம் பார்த்துதான் எல்லோரும் தெரிஞ்சுகிட்டாங்க. உண்மையைச் சொன்னா எனக்கு என் பொண்ணு வயித்துல இருக்கிறப்ப நடக்க வேண்டிய வளைகாப்பு ஜீ தமிழ் மூலமா இப்பதான் நடந்தது.

சின்ன வயசுல என்னை எங்கம்மா ரொம்ப போல்டா வளர்த்தாங்க. ஏன்னா, நான் பிறக்கும்போது என் அம்மாவுக்கு 41 வயசு. எங்க அம்மா, அப்பாவுக்கு இருபது வருஷம் கழிச்சு நான் பிறந்தேன். அதனால தற்காப்பு கலை எல்லாமே எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. யாரையும் நம்பாம தனி ஆளா இந்த சமூகத்துல வாழ கத்துக் கொடுத்தது என் அம்மா தான்! அதே மாதிரி என் பொண்ணையும் வளர்க்கணும்னு ஆசைப்படுறேன்'' எனத் தன் மகளை அள்ளி அணைத்துக்கொள்ள பூங்கொத்து வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!