
செல்லூர் ராஜூவுக்கு ஒரு ஐடியா!ஓவியங்கள்: அரஸ்

டி.ஆர். சரித்திரப்படமெடுத்தால் மன்னர் எதிரிநாட்டு அரசனைப் பார்த்து என்ன வசனத்தை ரைமிங்காகப் பேசுவார்?
* எதிரிநாட்டு ராசா...
உன்கிட்ட இல்லாத காசா..?
போருக்கு வந்திருக்கும் நீ என்ன லூஸா?
- மலர் சூர்யா, புதுச்சேரி
* உயிருள்ளவரை உஷாவா நானிருப்பேன்
உயிருள்ளவரை உஷாரா நீ இரு
கேட்காதே கிஸ்தி
ஆக்கிடுவேன் அஸ்தி
நீ மட்டும் என்ன ஒஸ்தி,
ஓடடா எதிரி என்றேன்
ஓடினான் சிதறி
மடக்கினேன் எகிறி!
மாட்டினான் பதறி
ஆக்கினேன் உதிரி
மன்னிப்பு கேட்டான்
தூத்தெறி!
-மல்லிகா குரு, சென்னை
* இது அட்டகாச அம்பு
இது ஆழ துளைக்கும் அம்பு
இது இடி போன்ற அம்பு
இது ஈட்டி போன்ற அம்பு
இது உடனே பாயும் அம்பு
இது ஊரழிக்கும் அம்பு
இது எரிதழல் அம்பு
இது ஏறித் தாக்கும் அம்பு
இது ஐயமிலா அம்பு
இது ஒத்தையான அம்பு
இது ஓடித் தாக்கும்அம்பு
இது ஔடதம் கலந்த அம்பு
-selvachidambara
* நீ நடத்துவது அரசு
நான் வாயிலேயே கொட்டுவேன் முரசு
மோதினால் உன் உடம்பில் இருக்காது சிரசு
அந்தப்பக்கம் ஒதுங்கிப்போய் உரசு
- ரஹீம் கஸ்ஸாலி
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைப் போல வேறு எவற்றையெல்லாம் செல்லாது என அறிவிக்கலாம்?
* கோடை விடுமுறையில் கொடுக்கப்படும் ‘ஹோம் ஒர்க்’குகள் செல்லாது!
-சி.ரவிக்குமார், நெய்வேலி
* இனிமேல் தமிழ்நாட்டுப் பூக்கடைகளில் தாமரையைத் தவிர வேற எந்தப்பூ வித்தாலும் செல்லாதுன்னு அறிவிக்கலாம்.
-மல்லிகா குரு, சென்னை
* மத்திய அரசின் டப்பிங் விளம்பரங்கள்
-Gnanakuthu

* சினிமாவில் கதாநாயகர்கள் அறிமுகப்பாடலுக்குத் தடைவிதிக்கலாமே.
-mekalapugazh
* மார்க் சீட்
-RedManoRed
* பேருந்து நிலையத்தில் நிறுத்திவைத்திருக்கும் பாடாவதி டப்பா பேருந்துகள் எங்கேயும் செல்லாது என அறிவிக்கலாம்.
- bommaiya
* பண்டிகை காலங்களில் அதிக விலை வைத்து பஸ் டிக்கெட் விற்றால் செல்லாதுன்னு சொன்னா நல்லா இருக்கும்.!
-Thaadikkaran
* 500, 1000 ரூபாய் செல்லாதுன்னு சொன்னத செல்லாதுனு அறிவிக்கணும். ஏன்னா 500 நோட்டு 11 என்கிட்ட இருக்கு.. என்ன பண்றதுனு தெரியாம வெச்சிருக்கேன்...
- Kishore R Sudarsan
* ஐந்து வருடம் ஆட்சியில் இருக்கும் ஒரு பிரதமர் பத்து தடவைக்கு மேல் வெளிநாடுகளுக்கு சென்றால் அவருடைய பாஸ்போர்ட் செல்லாது.
- மலர் சூர்யா
* டிராஃபிக் போலீசார் டூட்டி முடிந்த உடன், பேண்ட், ஷர்ட்டில் உள்ள பணம் எல்லாம் செல்லாது என அறிவித்து விட வேண்டும்.
- Sundararaj Subramanian
* உப்புமா!
- Gulam Mohideen Mohideen
மதுரை ரவுடி படங்கள் சிறுகுறிப்பு வரைக:
* சென்னைக்காரர்களை காளிகளாகவும் கபாலிகளாகவும் பெயரிட்டு ரவுடிகளாக்கி அடியாட்களாக்கி ஒரு குறிப்பிட்ட சமூக்கத்தினரின் அடையாளத்தையே தவறாகத் திரித்த சினிமா அதே விஷயத்தைத்தான் மதுரையின் பின்னணி பற்றியும் காட்டி வருகிறது. சென்னையின் காட்சிப்படுத்துதலைப் பொறுத்தமட்டில் சென்னைக்காரர்கள் அதனை ஒரு இழிவாகவும் அவமானமாகவுமே கருதுகின்றனர். ஆனால் சில மதுரைக்காரர்களிடம் அது எதிர்மாறானதாக இருக்கிறது. தங்களை கோபக்காரர்களாவும் கொலைகாரர்களாகவும் தமிழ்சினிமா காட்டுவதை சிலர் ரசிக்கின்றனர், போற்றுகின்றனர். தமிழகத்தின் பல நகரங்களைப் போலவே மதுரைக்கும் அழகான, பொலிவான, ரசனையான, அழகியல் காட்டும் பல முகங்கள் உண்டு. சினிமாக்காரர்கள் அதைக் காட்டவும் மதுரைக்காரர்கள் அதை போற்றவும் வேண்டும். தங்களை ரவுடிகளாக குற்றவாளிகளாக காட்டும் திரைப்படங்களை மதுரைக்காரர்களே தோற்கடிக்க வேண்டும்.
- RajiTalks
* மீசையை எவ்வளவு இழுக்கணுமோ அவ்வளவு வெச்சிருக்கணும். பேர்ல பாண்டி கட்டாயம் இருக்கணும். கெடா வெட்டு சீன் இருக்கணும், குடும்பத்தில தலக்கட்டு தாத்தா ஒருத்தர் ரவுடியா இருந்து வி.ஆர்.எஸ் வாங்கியிருப்பார். அவரோட பொஞ்சாதி காது நிறைய கம்மல் இருக்கனும்.
- manipmp
* மத்தபட ரவுடிகள விட மதுரை பட ரவுடிகள் மட்டும் குடும்ப பின்னணியுடனான ரவுடியா போராடிட்ருப்பாங்க. மதுரைய பின்புலமா வச்சி பல ரவுடியிச படங்கள் வந்தாலும் விதை ‘பட்டிக்காடா பட்டணமா’தான். பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியாம பொண்டாட்டிக்கிட்ட ஆரம்பிச்ச ரவுடிசம்தான் இன்றுவரை தொடருது
- Elanthenral
* 1. பரட்டை தலை 2.கப்பி கலர் சட்டை... ஜரிகை வேஷ்டி 3. நியாயத்துக்கு கட்டுப்படுற மாதிரி அநியாயம் பண்றது 4.ஜாதிப் பெருமை 5. பெண்கள் பாதுகாவலன் போல் பாவனை. 6.பாசத்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்த மாதிரி வசனம். ..... இது கூட இடையிடையே செல்போன்...லேப்டாப் னு அப்டேட் வேற....
- Senthil74107093
* வில்லன் வீட்டுக்கே வந்து போலீஸ் கைகட்டி நிக்கும்.. !
- பணமில்லா கோடிஸ்வரன் ச. அபிமன்யு
* வெறும் லுங்கி சட்டையோட பீடி குடிச்சிட்டு தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்காத கோடம்பாக்க குலசாமிகள்
- திருமாளம் எஸ்.பழனிவேல்
* சென்னைனா சிட்டி, மதுரைனா வெட்டினு நினைக்க வச்சிட்டாங்க..
-Velanganni Velu

ஒரு ரன்னுல தோத்த சிஎஸ்கேக்கு கவிதைகளால் ஆறுதல் சொல்லுங்க.
* துயரில் நானும் எழுதல...
உயரம் போக எழு, தல!
உலகக் கோப்பை பெறு தல!
பலரும் வாழ்த்த விடுதல!
-சி.பி.சுந்தரம், சென்னை
* ஆறுபால் ஒரு Over-u
சென்னை கிங்ஸு Super-u
தோத்ததெல்லாம் இல்ல ஒரு Matter-u
கண்டிப்பா ஜெயிப்போம் காத்திரு
ஊசி போட்டா போயிரும் Fever-u
நம்ம தலதோனிதான் Super Star-u!
-மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
* கவலைப்படாதே சிங்கமே
கறைபடாத தங்கமே
வின்னரை விட ரன்னர்தான் இங்கு பெரிசு - ஏன்னா
எங்க ‘தல’ உனக்குத்தானே இங்க மவுசு!
-அவ்வை. கே.சஞ்சீவி பாரதி, கோபி

* நம்ம தவற உட்டோம்
ஒரு ரன்னுல - ஆனா
செதறவுடுவோம் ஒருநாள்
அவங்க மண்ணுல....
-arunachalamide1
* வந்தாரை வாழ வைப்பது
தமிழ்ப்பண்பாடு...
வந்தாரை வெல்ல வைப்பது
சிஎஸ்கே என விசில் போடு!
-vckrish
பிரதமர் மோடி விமானப்படைக்கு ரேடார் ஐடியா கொடுத்ததுபோல, வேறு யார் யாருக்கு என்னென்ன ஐடியா கொடுக்கலாம்?
*தினகரனுக்கு: பரிசுப் பெட்டிக்குப் பதிலா வோட்டுப் பெட்டி சின்னம் வாங்கிட்டா, எல்லாருமே உங்க சின்னத்திலே தான் வோட்டு போட்டாகணும்!
- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்
*ரேஷன் கடைகளுக்கு ஆட்டோ அலெர்ட் சிஸ்டம். எடை குறைவாக நிறுத்தால் ஊரே அலரும்படி அலெர்ட் ஆட்டோமேட்டிக்காக ஒலிக்கும். அப்படியானால் எப்போதும் அலறிக்கொண்டே அல்லவா இருக்கும் என்கிறீர்களா? Think Positive... அலார்முக்குப் பயந்து அநியாயத்தை நிறுத்தி விட மாட்டார்களா என்ன?!
- நெல்லை குரலோன், நெல்லை
*காவல்துறை பிஜேபிகாரர்களை கைது செய்ய வந்தால் கைதாகாமல் எவ்வாறு சுதந்திரமாக சுற்றுவது என்று SV சேகரை ஆலோசகராக நியமிக்கலாம்.
- kathir_twits
*சென்னை, மதுரை,சிவகங்கை-க்கு எந்தப்பக்கம் வழி இருக்குன்னு, மழைக்கு யாராவது ஐடியா சொல்லுங்கப்பா, அதுபாட்டுக்கு வேற எங்குட்டோ சுத்திக்கிட்டு திரியுது.
- Ulagappan1995
*நடித்தே ஏமாத்தறது எப்டின்னு சொல்லி குடுத்தா மருமகளுக்கெல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
-sinamika143
*கடல் நீரில் சமைச்சா பதார்த்தங்களுக்கு உப்பு போடவும் தேவையில்லை, தண்ணீர் தட்டுப்பாடும் ஓரளவு குறையும் என்ற ஐடியாவை அண்ணன் செல்லூர் ராஜுவிடம் சமர்ப்பிக்கிறேன்
-Mohamed Humayoon
*விஞ்ஞானிகளுக்கு ராக்கெட் விடும்போது, நமத்துப்போகாமல் இருக்க அவற்றை இரண்டுநாட்கள் வெயிலில் காய வைத்து பின் அனுப்ப சொல்லலாம்.
- Saroja Balasubramanian
*சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதாவது போர் வந்த பிறகு அரசியலுக்கு வராமல் இருக்கப் போற ரஜினிக்கு அதற்கான சாக்கு சொல்ல ஒரு ஐடியா கொடுக்கலாம்
- Enos Ibrahim
*மாட்டிக்காம மத்த படத்தை எப்படி காப்பி அடிக்கிறதுனு ஏ.ஆர். முருகதாஸ், அட்லிக்கு ஐடியா கொடுக்கலாம்...
Shunmuga Sundaram
*கோடை காலங்களில் வெயில் தாக்கம் குறைய தண்ணீர் அண்டாவில் அமர்ந்து யாகம் செய்தது போல, குளிர் காலங்களில் தீ சட்டியில் அமர்ந்து யாகம் செய்ய ஐடியா கொடுக்கலாம்...
- Arul Ak
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
• ? உலகக் கோப்பைப் போட்டியில் ஆடும் இந்தியாவை உற்சாகப்படுத்த ஒரு கவுண்டமணி வசனம் டெடிகேட் பண்ணுங்க!
• ? ஒரே ஓர் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்க்கலாம்?
• ? தமிழக பா.ஜ.க-வுக்கு எந்த நடிகரைத் தலைவராக நியமித்தால் தாமரை மலரும்... ஏன்?
• ? சில சினிமா விடுகதைகள் ப்ளீஸ்!
• ? அன்புமணி, பிரேமலதா - இருவருக்கும் சிறப்புப் பட்டங்கள் தருவதாக இருந்தால் என்னென்ன பட்டங்கள் தரலாம்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.